1 வார்த்தை.. அண்ணாமலை சொன்னதுமே அதிர்ந்த "தலைகள்".. வெட்டவெளிச்சமாகும் உரசல்.. திமிறி எழும் எடப்பாடி?
சென்னை அண்ணாமலை பேசிய பேச்சால், அதிமுக - பாஜக இடையே கூட்டணி விரிசல் அம்பலமாகி உள்ளது
சென்னை: "அதிமுக உடன் கூட்டணி என்ற நிலைப்பாட்டை எடுத்தால், தலைவர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு சாதாரண தொண்டனாக இருப்பேன். பாஜகவை வளர்த்தெடுக்கத்தான் பாடுபட்டுக்கொண்டிருக்கிறேன். எனக்கு உரிய சுதந்திரம் அளிக்க வேண்டும்.. நான் தேசிய மேனேஜர் கிடையாது.. என் ஸ்டைலில் செயல்பட முடியாத போது நான் ராஜினாமா செய்து விட்டு ஒரு தொண்டனாகவே இருப்பேன்" என்று பாஜக கூட்டத்தில் அண்ணாமலை பேசியுள்ளது மிகுந்த பரபரப்பையும், குழப்பத்தையும், சந்தேகத்தையும், கிளப்பி விட்டு வருகிறது.
கடந்த சில நாட்களாக பாஜக - அதிமுக கருத்து மோதல் கிளம்பி உள்ளது... இதற்கு காரணம், சிறுபான்மையினர் ஓட்டுக்களை பெற வேண்டும் என்பதற்காகவே, பாஜக இல்லாத கூட்டணிக்கு எடப்பாடி பழனிசாமி தயாராகி வருவதாக கூறப்படுகிறது.
மற்றொருபக்கம், எடப்பாடியை அளவுக்கு அதிகமாக அண்ணாமலை சப்போர்ட் செய்வதுபோல ஒரு பிம்பம் உருவாகிவிடவும், அதை பொய் என்று நிரூபிப்பதற்காகவே, அண்ணாமலை - எடப்பாடி இருவரும் சேர்ந்து நடத்தும் என்று மற்றொரு தரப்பு சொல்கிறது.

எடப்பாடி
ஆனால், நடப்பதையெல்லாம் பார்த்தால், நிஜமாகவே அதிமுக - தமிழக பாஜக கூட்டணிக்குள் விரிசல் வந்துவிட்டதுபோலவே உள்ளதாக அரசியல் நிபுணர்கள் கருதுகிறார்கள்.. விரைவில் எம்பி தேர்தல் வரஉள்ளநிலையில், அதிமுகவின் தயவு பாஜகவுக்கு அவசியமாக இருக்கிறது.. ஒருங்கிணைந்த அதிமுகவுக்கும் தேவையாக இருக்கிறது.. எடப்பாடியை பகைத்து கொள்ளவும், தமிழக பாஜக தலைவர்கள் விரும்பவுமில்லை.. ஆனால், அண்ணாமலையின் அதிரடி பேச்சுக்கள், கூட்டணியை பாதிக்கக்கூடியதாக இருப்பதாக பாஜக சீனியர்கள் கருதுகிறார்கள்.

வானதி சீனிவாசன்
அதனால்தான், இந்த விஷயத்தில், மூத்த தலைவர்கள் வானதி சீனிவாசன் போன்றோர் நேரடியாகவே தலையிட்டு வருகிறார்கள்.. எடப்பாடி பழனிசாமியின் உருவபொம்மைக்கு எரிப்பு தலைதூக்கியதுமே, கொங்கு பாஜக இந்த விஷயத்தை சீரியஸாக அணுகியது.. அதிமுகவின் கொங்கு மாஜிக்களிடம், பாஜகவின் கொங்கு சீனியர்கள், இது சம்பந்தமாக பேச்சு நடத்தி உள்ளதாக சொல்லப்பட்டது. அப்போது இவர்கள் அனைவருமே எடப்பாடி பழனிசாமியிடமும் போனை போட்டு பேசியதாகவும், ஆனால், எடப்பாடி கோபமாக பேசி போனை வைத்துவிட்டதாகவும் செய்திகளும் லேசாக கசிந்தன.

கடிவாளம்
எனினும், நடந்து வந்த சலசலப்புகளுக்கு தற்காலிகமாக ஒரு முற்றுப்புள்ளி வைத்துவிட்டதாக பார்க்கப்பட்டது.. காரணம், மறுநாள் எடப்பாடி பழனிசாமி தன்னுடைய நிர்வாகிகளிடம் பேசும்போது, "பாஜக கூட்டணியில் அதிமுக இணைந்து தேர்தலில் போட்டியிடும் என்றும் தமிழக பாஜக தலைவர்கள் பேச்சுக்கு, அதிமுக மூத்த நிர்வாகிகள் யாரும் உணர்ச்சி வசப்பட்டு பதிலடி தரவேண்டாம், அதனால், அதிமுக தலைவர்களுக்குதான் பிரச்சனை வரும் என்றும் எடப்பாடி பழனிசாமி கடிவாளம் போட்டிருந்தார்... எடப்பாடி இப்படி கடிவாளம் போட்டும்கூட, கடம்பூர் ராஜு, செல்லூர் ராஜு, உள்ளிட்டோர் பாஜக தரப்பை கடுமையாக விமர்சிக்க, இதற்கு பாஜக மூத்த தலைவர் நாராயண் திருப்பதியும் காட்டமான பதிலடியை தந்திருந்தார்.. அப்போதுதான், பாஜக - அதிமுக இடையே உரசல் இன்னும் முடியவில்லை என்பது மீண்டும் அம்பலமானது..

பிக் மெசேஜ்
இந்த சமயத்தில்தான், பாஜக தேசிய தலைவர் நட்டா தமிழகம் வந்து சென்றார். இதுகுறித்து வானதி சீனிவாசன் செய்தியாளர்களிடம் பேசியபோது, "தேசிய ஜனநாயக கூட்டணிக்கு இந்த உரசல் சிக்கலை உருவாக்கும் என்று கருதப்பட்ட நிலையில்தான், இது தொடர்பான தகவல்கள் தேசிய தலைமையிடம் தெரிவிக்கப்பட்டு , கடந்த வாரம் பாஜக தேசிய தலைவர் நட்டா கிருஷ்ணகிரி வருகையின்போது எங்கள் கட்சியின் அணைத்து தலைவர்களையும் அழைத்து இனிமேல் இதுபோன்ற விரும்பத்தகாத விஷயங்கள் நடக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும் . கூட்டணியை கட்டமைத்திருக்கின்ற நாம் பொறுப்புணர்வோடு நடந்து கொள்ள வேண்டும் என்று அறிவுரைகளை வழங்கினார்" என்று வெளிப்படையாகவே கூறியிருந்தார்.

வெட்ட வெளிச்சம்
வானதியின் இந்த பேச்சு மூலமும், அதிமுக - பாஜக மோதல் இன்னும் முடியவில்லை என்பது மீண்டும் அம்பலமானது. நேற்றைய தினம், அண்ணாமலையின் பேச்சு, கூட்டணி மோதலை வெட்ட வெளிச்சமாக்கி உள்ளது. சென்னையில் நடந்த தமிழக பாஜக மாநில நிர்வாகிகள் மற்றும் அணி தலைவர்கள் கூட்டத்தில் அண்ணாமலை பேசியபோது, "தமிழகத்தில் நாம் தனியாக இருந்தால் மட்டுமே கட்சியை வளர்க்க முடியும். அதிமுக உடன் கூட்டணி என்ற நிலைப்பாட்டை எடுத்தால், தலைவர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு சாதாரண தொண்டனாக இருப்பேன். பாஜகவை வளர்த்தெடுக்கத்தான் பாடுபட்டுக்கொண்டிருக்கிறேன்.

மேனேஜர்
எனக்கு உரிய சுதந்திரம் அளிக்க வேண்டும்.. நான் தேசிய மேனேஜர் கிடையாது.. கட்சியின் மாநில தலைவர் என்று சொன்னேன். தமிழ்நாட்டில் பாஜகவை வளர்ப்பதற்குரிய வெற்றி பெற வைப்பதற்குரிய உத்திகள் என்னிடம் இருக்கின்றன. என் ஸ்டைலில் செயல்பட முடியாத போது நான் ராஜினாமா செய்து விட்டு ஒரு தொண்டனாகவே இருப்பேன்.. பிரதமர் மோடியை சந்திப்பதற்கு நேரம் கேட்டிருக்கிறேன்" என்றார். அண்ணாமலை இப்படி பேசியதுமே கரு. நாகராஜன், அமர்பிரசாத் ரெட்டி, வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் பரபரப்பானார்கள்.. நீங்கள் இப்படி பேசக்கூடாது என்று ஆட்சேபம் தெரிவித்துள்ளனர்.. "மைய குழுவில் பேசவேண்டிய கருத்தை ஏன் இப்போது பேசுகிறீர்கள்?" என்று வானதி கேள்வி எழுப்பியிருக்கிறார்..

காய்நகர்த்தல்
ஆக, பாஜக அதிமுக கூட்டணி பிளவுபடும் சூழ்நிலை உருவாகி கிட்டத்தட்ட உருவாகிவிட்டது என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.. அத்துடன், அண்ணாமலைக்கு எதிராக அதிமுக காய் நகர்த்த ஆரம்பித்து விட்டதாகவும் சொல்கிறார்கள்.. வரும் 27ம் தேதி பிரதமர் மோடி சென்னை வர உள்ளார். அரசு முறைப்படியான திட்டங்கள், பணிகள் என்றாலும், பிரதமரின் வருகையில் சில முக்கிய நிகழ்வுகள் நடக்க போவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.. குறிப்பாக, அதிமுகவில் எடப்பாடி பழனிசாமியும், ஓபிஎஸ்ஸும் தனித்தனியாக பிரதமரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார்களாம்.. வழக்கமான, ஒவ்வொரு முறை பிரதமர் மோடி சென்னை வரும்போதெல்லாம், எடப்பாடி + ஓபிஎஸ் இருவருமே சந்தித்து பேச முயற்சிப்பார்கள்..

டென்ஷன் டென்ஷன்
எனினும், இவ்வளவு காலம் ஒற்றை தலைமை விவகாரம் மட்டுமே அதிமுகவில் தலைதூக்கியிருந்த நிலையில், இப்போது அதிமுக - பாஜக மோதலும் சேர்ந்துள்ளதால், பிரதமரிடம் இந்த விவகாரம் குறித்து பேசப்படுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்து வருகிறது. அத்துடன், அண்ணாமலையும் பிரதமரிடம் பேச நேரம் கேட்டுள்ளதால், இந்த பூசல் விவகாரம் முற்றி வருகிறது.. அதிமுக தயவில்லாமல் தமிழகத்தில் தாமரை மலரவே முடிது என்பதை தீர்க்கமாக உணர்ந்திருக்கும் தமிழக பாஜக சீனியர்கள், மறுபடியும் இது விஷயமாக டெல்லி வரைக்கும் கவலை அறிக்கையை வாசித்து வரும்நிலையில், மாநில தலைமையை மாற்றியே தீர வேண்டும் என்று டெல்லியில் அழுத்தம் தரப்பட்டு வருவதாக கூறப்படும்நிலையில், நேற்றைய தினம் அண்ணாமலை பேசியது, அதற்கு மேல் டென்ஷனை எகிற வைத்து கொண்டிருக்கிறதாம்.. என்ன நடக்க போகிறது? பொறுத்திருந்து பார்ப்போம்..!!

மனக்கசப்பு
இதனிடையே, பாஜக மூத்த தலைவர் நயினார் நாகேந்திரன் பேச்சு, மிகுந்த கவனத்தை பெற்றுவருகிறது.. நெல்லையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், பாஜக கூட்டணி குறித்து அகில இந்திய தலைமை தான் முடிவு எடுக்கும்.. அதுதான் எங்களது முடிவு அண்ணாமலை தெரிவித்தது அவரது தனிப்பட்ட கருத்தாக உள்ளது. தமிழகத்தில் யாரும் இதுவரை எந்த கட்சியும் தனியாக போட்டியிடவில்லை. திமுக, அதிமுக, பாரதிய ஜனதா கட்சிகள் கூட்டணி அமைத்து தான் போட்டிடுகிறது. தனியாக யாரும் போட்டியிட முடியாது. இதுவரை தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரை இப்படி நடந்தது இல்லை. மனதளவில் பாதிக்கப்பட்டால்தான் மருத்துவமனைக்கு தான் செல்ல வேண்டும் எனக்கு மனதளவில் எந்தவித பாதிப்பும் இல்லை என்று கூறியிருப்பது, அண்ணாமலை தரப்பை கவனிக்க செய்து வருகிறது.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications