9+ சீட்டா.. அப்ப எடப்பாடி என்ன பண்ண போறாரு.. சத்தமேயில்லாமல் நடக்குதே.. பிஜேபி போற ஸ்பீடை பார்த்தால்?
சென்னை: தமிழக பாஜக முக்கிய வியூகம் ஒன்றை அமைத்துள்ளதாம்.. இது நிச்சயம் அதிமுகவுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தும் என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.. என்ன நடக்கிறது கூட்டணியில்?
கடந்த வருடம் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் ஆங்காங்கே, தமிழக பாஜகவுக்கு கிடைத்த வெற்றியானது, அக்கட்சிக்கு கிடைத்த புது பூஸ்ட் என்றே சொல்லலாம்.. அந்த சமயத்தில் பிரதமர் மோடி, தமிழக மாநில தலைவர் அண்ணாமலைக்கு போனை போட்டு தேர்தல் ரிசல்ட் குறித்து விசாரித்தாராம்.

பிறகு, "எப்போதுமே தனித்து போட்டியிட்டால்தான், ஒவ்வொரு கட்சியின் முழுமையான பலம் தெரியும்... அப்போதுதான், அடுத்தடுத்த தேர்தல்களில் நம்மை பலப்படுத்தி கொள்ள, தேர்தல் வியூகங்களை அமைத்து கொள்ள முடியும்" என்று நகர்ப்புற தேர்தல் ரிசல்ட் கிடைத்த அன்றைய தினமே, அண்ணாமலையிடம் அறிவுறுத்தியதாகவும் செய்திகள் வந்தன.
ஸ்பீடு பாஜக: இதற்கு பிறகுதான் தமிழக பாஜகவின் அரசியல் வேகமெடுத்தது.. ஒருபக்கம் திமுகவுக்கு டஃப் தந்துகொண்டே, மறுபக்கம், மாற்று கட்சியில் உள்ள அதிருப்தியாளர்களை தன்பக்கம் இழுக்க தூண்டிலை வீசியது.. அதுமட்டுமல்ல, வரப்போகும் எம்பி தேர்தலில் 25 இடங்களுக்கு குறி வைத்து காய் நகர்த்த வேண்டும் என்ற உத்தரவும் மேலிட பாஜகவால் பிறப்பிக்கப்பட்டிருந்ததால், இதற்காகவே 4 மாதங்களுக்கு முன்பு, பல்வேறு கோணங்களிலும் பல்வேறு கட்டங்களாக, 39 தொகுதிகளிலும், டீமை இறக்கி, தமிழக பாஜக ஆய்வுகளை மேற்கொண்டது..
அந்த ஆய்வுகளின்படி மொத்தம் 10 தொகுதிகளை டாப் லிஸ்ட் போட்டு மேலிடத்துக்கும் தந்திருந்ததாம். அதாவது, தென் சென்னை, வேலூர், நெல்லை, தென்காசி, கோவை, ஈரோடு, நீலகிரி, ராமநாதபுரம், சிவகங்கை, கன்னியாகுமரி ஆகியவைதான் அந்த டாப் 10 தொகுதிகள் ஆகும்.. இந்த 10 தொகுதிகளில் போட்டியிட முடிவு செய்து, அதற்கான களப்பணிகளையும் துரிதப்படுத்தியதாகவும் தகவல்கள் வெளியாகின.. அதிமுக தயவுடன்தான் தேர்தலை சந்திக்க வேண்டிய கட்டாயத்திலும் நெருக்கடியிலும் தமிழக பாஜக உள்ளதால், ஒருங்கிணைந்த அதிமுக தேவை என்பதை மேலிடம் நன்றாகவே உணர்ந்துள்ளது.. அதில் இப்போதுவரை பிடிவாதமாகவும் உள்ளது.
அதனால்தான், அதிமுக - பாஜக கூட்டணியை, கடந்த வாரம் உள்துறை அமைச்சர் அமித்ஷாவே உறுதி செய்திருந்தார்.. எடப்பாடி பழனிசாமியும் அதை வழிமொழிந்திருந்தார். ஆனால், எடப்பாடியின் பிடிவாதத்தைவிட, அண்ணாமலையின் பிடிவாதம் இப்போது அதிகமாகிவிட்டதாகவே தெரிகிறது.. எடப்பாடியின் கோபத்தைவிட, அண்ணாமலையின் கோபமே, களத்தில் கனலாய் எரிந்து கொண்டிருக்கிறது.. ஒருவேளை அண்ணாமலை சொல்வதுபோல, பாஜக தனித்து போட்டியிடக்கூடுமா? அதாவது பாஜக தலைமையில் கூட்டணி உருவாகுமா? என்ற கேள்வியும் எழாமல் இல்லை..
விஜயகாந்த்: கடந்த 2019-ல் அதிமுக + பாமக + தேமுதிக + தமாகா + புதிய தமிழகம் + புதிய நீதிக்கட்சி + என்ஆர் காங்கிரஸ் + இப்படி 7 கட்சிகள் ஒன்றுசேர்ந்துதான் கூட்டணி வைத்தார்கள்.. இத்தனைக்கும் ஜான்பாண்டியன், பூவை மூர்த்தி போன்றோர்களும் இந்த கூட்டணியுடன்தான் பயணித்தனர். ஆனால், இப்போது இந்த அளவுக்கு வலுவான கூட்டணி அமையுமா என்று தெரியவில்லை.. பாமக + தேமுதிக இவர்கள் 2 பேரும் என்ன நிலைப்பாடு எடுக்க போகிறார்கள் என்பதும் உறுதியாக தெரியவில்லை..
எனினும், பாமக + ஓபிஎஸ் டீம், சசிகலா டீம் + அமமுக, தேமுதிக + புதிய தமிழகம் + புதிய நீதிக் கட்சி + இந்திய ஜனநாயக கட்சி போன்ற கட்சிகளை எக்காரணம் கொண்டும் இழந்துவிடக்கூடாது என்பதில் பாஜக உறுதியாக உள்ளதாம்.. அந்தவகையில், டாப் 10 தொகுதிகளான, கோவை, கன்னியாகுமரி, நீலகிரி, உள்ளிட்ட தொகுதிகளில் பாஜகவே நேரடியாக இறங்கி தேர்தலை சந்திக்கக்கூடும் என்கிறார்கள்.
தேவேந்திர குல வேளாளர்கள்: கூட்டணியில் உள்ள தேமுதிக, பாமக இந்த கட்சிகளுக்கு செல்வாக்கு மிக்க வடக்கு மாவட்டங்களையும், ஓபிஎஸ், சசிகலா, டிடிவி தினகரன் போன்றோருக்கு, அவர்கள் செல்வாக்கு மிக்க தொகுதிகளான தென்பகுதிகளையும், பாஜக ஒதுக்கலாம்.. இதைத்தவிர, புதிய தமிழகம் கட்சியின் மூலம் தேவேந்திரகுல வேளாளர்கள் சமூக வாக்குகள் பல தொகுதிகளில் கிடைக்க வாய்ப்புள்ளதாகவும் நம்பப்படுகிறது.. இதில் கவனிக்கத்தக்க விஷயம் என்னவென்றால், மேற்கண்ட தொகுதிகள் எல்லாம் திமுக, அதிமுக செல்வாக்கு பெற்ற தொகுதிகள்தான்.. தற்போது அதிமுகவுடன் பாஜக கூட்டணி உறுதியாகிவிட்ட நிலையில், மேற்கண்ட தொகுதிகளை அதிமுக விட்டுத்தருமா? என்பதும் மிகப்பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது.
எனினும், தமிழகத்தில் தங்களுக்கு வலுவான தொகுதிகளை பாஜக மேலிட தலைவர்கள் ஆய்வு செய்து வருகிறார்கள்.. நேற்று திடீரென சில மாவட்டங்களுக்கு பார்வையாளர்கள் அக்கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டனர்.. இதன் பின்னணியில் பாஜகவின் வியூகம் பலமாக உள்ளதாம்.. சமீபகாலங்களில் 2 முறை ஜேபி நட்டா தமிழகம் வந்து சென்ற நிலையில், இதற்கான வியூகங்கள் அமைக்கப்பட்டதாம்.. அதாவது, எம்பி தேர்தலில் தமிழகத்தில் 39 தொகுதிகளில் 9 தொகுதிகளில் நிச்சயமாக போட்டியிட வேண்டும் என்பதில் பாஜக உறுதியாக உள்ளது.
சத்தமேயில்லாமல் வேலை: தென்சென்னை, கோவை, நீலகிரி, கன்னியாகுமரி, நெல்லை, ராமநாதபுரம், சிவகங்கை, ஈரோடு, வேலூர் ஆகிய 9 தொகுதிகளை இதற்காகவே பாஜக குறி வைத்துள்ளது.. இந்த 9 தொகுதிகளிலும் உறுப்பினர் சேர்க்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாம்.. மேலும் இந்த 9 தொகுதிகளிலும் பூத் கமிட்டிகளை சீரமைத்து வலுப்படுத்தும் பணிகளும் சத்தமேயில்லாமல் நடந்து வருகிறதாம்.. எனவே இந்த 9 தொகுதிகளையும் அதிமுகவிடமிருந்து பாஜக வலியுறுத்தி வாங்கும் என்றும் சொல்கிறார்கள்..
கடந்த உள்ளாட்சி தேர்தலின்போதே, கோவை, சென்னையை வலியுறுத்தி கேட்டது பாஜக.. அதற்கு அதிமுக சம்மதிக்காததால்தான், தனித்து நின்று தேர்தலை சந்திக்க நேர்ந்தது.. இப்போதும் பாஜகவின் லிஸ்ட்டில் கோவை, சென்னை, கொங்கு உள்ளிட்ட தொகுதிகள் உள்ளதால், பாஜகவுக்கு அதிமுக விட்டுத்தருமா? என்று தெரியவில்லை.. அதுவும், கொங்கு பகுதியில் பலம்பொருந்தி வரும் திமுகவை வீழ்த்த, எடப்பாடி பழனிசாமி என்ன செய்ய போகிறார்? என்பதும் மிகப்பெரிய எதிர்பார்ப்புதான்.. பொறுத்திருந்து பார்க்கலாம்..!!!
-
வீட்டு கேஸ் சிலிண்டர் 14.2 கிலோ எடையில் விநியோகம் செய்யப்படுவது ஏன் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
சுப்மன் கில் ஆட்டத்தை பார்க்க வந்த சாரா டெண்டுல்கர்.. பாவமாக அமர்ந்திருந்த அர்ஜுன் டெண்டுல்கர் மனைவி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
எடப்பாடிக்கு அருகில் சீட்.. ஒரே விமானத்தில் பயணம்.. கடைசி நேரத்தில் பிளானை மாற்றிய உதயநிதி! -
ஸ்டாலினுக்கு இத்தகைய நடத்தை அழகல்ல.. நிர்மலா சீதாராமன் விளக்கம் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்!












Click it and Unblock the Notifications