Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சல்லி சல்லியா நொறுங்குதே.. தமிழக காங்கிரஸ் வைக்கும் "வேட்டு"? திமுகவின் அஸ்திவாரத்தையே ஆட்டுதா? பலே

Subscribe to Oneindia Tamil

சென்னை: லோக்சபா தேர்தலுக்கான ரிசல்ட் இன்னும் வெளிவராத நிலையில், அடுத்த தேர்தலுக்கான முன்னெடுப்பை தமிழக காங்கிரஸ் கையில் எடுத்துவருகிறது.
கடந்த 57 வருஷமாக நாம் ஏமாந்ததெல்லாம் போதும். தேர்தல்களில் தொகுதிகளை கேட்கும் நிலையில் இருந்து, தொகுதிகளை பிரித்து கொடுக்கும் நிலைமைக்கு காங்கிரஸ் வளர வேண்டும்..

Can Tamil Nadu Congress contest alone without DMK alliance and what are the Major Strategies

தமிழக காங்கிரஸ்: தமிழக காங்கிரஸ் கட்சிக்கு புதிதாக தலைமை பொறுப்புக்கு வந்திருக்கும் செல்வப்பெருந்தகை, கட்சியை கட்டமைக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறார். அதேபோல, நிர்வாகிகளிடமும், செய்தியாளர்களிடமும் செல்வப்பெருந்தகை வெளிப்படுத்தும் கருத்துக்கள் , திமுக உட்பட பல்வேறு கட்சிகளை திரும்பி பார்க்க வைத்து வருகின்றன.

குறிப்பாக செல்வப்பெருந்தகை "எவ்வளவு காலத்துக்குதான் இன்னொரு கட்சியிடம், "எங்களுக்கு தொகுதிகள் கொடுங்கள்" என்று கையேந்தி நிற்பது? கெஞ்சி கேட்டு வாங்கும் நிலையில் காங்கிரஸ் உள்ளது.. எனவே, தெலங்கானா, கர்நாடக மாநிலங்களில் உள்ள நிலையை தமிழகத்தில் கொண்டு வரவேண்டும்... தமிழகத்திலும் காங்கிரஸ் கட்சி ஆள வேண்டும்" என்று பேசியிருந்தது திமுக கூட்டணிக்குள்ளேயே சலசலப்பை தந்துவிட்டது.

இணக்கம்: இதுகுறித்து செய்தியாளர்கள் செல்வப்பெருந்தகையிடமே கேட்டார்கள்.. அதற்கு அவர், "தமிழகத்தில் சிறிய கட்சிகள் கூட, நாங்கள் ஆட்சி அமைப்போம் என்று சொல்லும்போது, நாங்கள் சொல்வதிலும் தவறில்லையே.. இது கூட்டணியை பாதிக்காது. 57 ஆண்டாக ஆட்சி அமைக்க முடியாமல் இருக்கும்போது, அந்த முயற்சியை மறுபடியும் எடுப்பதில் தப்பில்லை.. கட்சியின் கட்டமைப்பை சரிசெய்யவும் எங்களுக்கு உரிமை இருக்கிறது.. நாங்கள் திமுகவோடு இணக்கமாகவே இருக்கிறோம்" என்று விளக்கம் தந்திருந்தார்.

ஆனாலும், செல்வப்பெருந்தகையின் இந்த பேச்சை காங்கிரஸில் சில சீனியர்களே ஏற்கவில்லை என்றார்கள்.. அதனால்தான், மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன், "திமுக நல்லாட்சியையே நடத்துகிறது.. அதனால் இதுவும் காமராஜர் ஆட்சிதான்" என்று செல்வப்பெருந்தகைக்கு பதிலடியை தந்து, திமுகவையும் கூல் செய்யும் விததமாக பேசியிருந்தார்.

நியமனம்: இப்படி ஒரே கட்சிக்குள் தலைவர்களின் மாறுபட்ட கருத்துக்கள், பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.. அதாவது, தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவராக செல்வப்பெருந்தகை நியமனம் செய்யப்பட்டதிலிருந்தே, பல்வேறு அதிரடிகளை கையில் எடுத்து வருகிறார்..

ஒருபக்கம் பாஜகவையும் சரமாரியாக விமர்சித்து வருவதுடன் தமிழகம் முழுவதும், மாவட்டந்தோறும் பயணித்து காங்கிரஸ் நிர்வாகிகளையும் சந்தித்து பேசி வருகிறார். அப்போது, கூட்டணியில் இருந்தும் காங்கிரஸ் தொண்டர்களுக்கு உரிய மரியாதை கிடைக்கவில்லை என்று செல்வப்பெருந்தகையிடம் பலர் ஆதங்கப்பட்டார்களாம். இதைத்தான் மீடியாவில் செல்வப்பெருந்தகை பொருமலாக வெளிப்படுத்தி வருவதாக சொல்கிறார்கள்.
எதிர்பார்ப்பு: அதுமட்டுமல்ல, உள்ளாட்சி தேர்தலுக்கான பணிகளில் இப்போதே மும்முரமாகி வருகிறதாம் தமிழக காங்கிரஸ். அதேபோல, உள்ளாட்சி தேர்தலிலாவது காங்கிரசுக்கு கூடுதல் இடங்கள் ஒதுக்க வேண்டும் என்றும் எதிர்பார்க்கிறதாம்.. அதனால்தான் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்துவதுபோல, சில தலைவர்களின் பேச்சுக்கள் அமைந்து வருவதாகவும் சொல்கிறார்கள்.

சுருக்கமாக சொல்லப்போனால், கார்கே முதல் மேலிட தலைவர்கள் மட்டத்தில் இந்த கூட்டணி வலிமையான கூட்டணியாகவே இப்போதுவரை உள்ளது.. இனியும் இந்த கூட்டணி இப்படியே தொடர வேண்டும் என்பதும் விருப்பமாக உள்ளது.. ஆனால், கீழ் மட்டத்தில் தங்களுக்கு உரிய மரியாதை தரப்பதரப்படுவதில்லை என்ற ஆதங்கமும் தமிழக காங்கிரசுக்குள் நிலவி வருகிறதாம்..

இதுகுறித்து கருத்து கேட்டதற்கு, "காங்கிரசுக்கு புதிய தலைவர்கள் வரும் போது இந்த மாதிரி தங்கள் கருத்துக்களை பேசுவது வழக்கமானதுதான்" என்று திமுகவின் மூத்த தலைவர் ஆர்எஸ் பாரதி இயல்பாக சொன்னாலும், கூட்டணிக்குள் எங்கியோ ஓரிடத்தில், "புகைவது" போலவே இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து கூறுகிறார்கள்.. பொறுத்திருந்து பார்ப்போம்..!!

ராகுல் காந்தி: அதனால்தான், ராகுல் காந்தி உத்தரவிட்டதன்பேரில், கட்சியின் கட்டமைப்பை பலப்படுத்திக கொண்டே, வரப்போகும் தேர்தலில், கூடுதல் இடங்களையும் கேட்க தயாராகி வருகிறதாம் தமிழக காங்கிரஸ்.

"காங்கிரசுக்கு புதிய தலைவர்கள் வரும் போது இந்த மாதிரி தங்கள் கருத்துக்களை பேசுவது வழக்கமானதுதான்" என்று திமுகவின் மூத்த தலைவர் ஆர்எஸ் பாரதி இயல்பாக சொன்னாலும், கூட்டணிக்குள் எங்கியோ ஓரிடத்தில், "புகைவது" போலவே இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து கூறுகிறார்கள்.. பொறுத்திருந்து பார்ப்போம்..!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+