சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஸ்டாலினை நோக்கி நகரும் அன்புமணி.. அப்ப திருமாவளவன்?.. திமுக அந்த கட்சியை விடாது: ரவீந்திரன் துரைசாமி

திமுக கூட்டணியில் பாமக இடம்பெறுமா என்பது குறித்து ரவீந்திரன் துரைசாமி பேட்டி தந்துள்ளார்

Google Oneindia Tamil News

சென்னை: . திமுக கூட்டணிக்கு பாமக வருவதால், திமுகவுக்கு லாபம் இருப்பதாக தெரியவில்லை.. ஒருவேளை திமுகவுக்கு வந்தால் பாமகவுக்கு வேண்டுமானால் லாபம் இருக்கலாம் என்று அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி கருத்து தெரிவித்துள்ளார்.

2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்காக நாடு முழுவதும் அனைத்து கட்சிகளும் தயாராகி வருகின்றன... அந்தவகையில், மத்தியில் எதிர்க்கட்சிகளை ஓரணியில் இணைத்து பாஜகவுக்கு எதிராக தேர்தலை சந்திக்கும் முயற்சிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டை பொறுத்தவரை, அதிமுக தலைமையில் மெகா கூட்டணி அமைக்கப்படும் என்று அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நாமக்கல்லில் அறிவித்திருந்தார்..

வார்த்தையை விட்ட எடப்பாடி.. அப்செட்டான பாஜக? இன்றே ஆர்என் ரவியை சந்திக்கும் இபிஎஸ்! 4 பரபர காரணங்கள் வார்த்தையை விட்ட எடப்பாடி.. அப்செட்டான பாஜக? இன்றே ஆர்என் ரவியை சந்திக்கும் இபிஎஸ்! 4 பரபர காரணங்கள்

 ரவீந்திரன் துரைசாமி

ரவீந்திரன் துரைசாமி

இந்த கூட்டணியில் எந்தெந்த கட்சிகள் இடம்பெறும் என்ற விவாதம் கடந்த சில தினங்களாகவே தொடர்ந்து எழுப்பப்பட்டு வருகிறது... இப்படிப்பட்ட சூழலில், செய்தியாளர்களிடம் பேசிய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், 2024-ல் அதிமுகவுடன் கூட்டணி இல்லை என்று கூறியிருந்தார்.. அப்படியானால் பாமகவின் அரசியல் நிலைப்பாடு என்ன என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.. இதுகுறித்து, அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமியிடம் சில கேள்விகளையும், சந்தேகங்களையும் நம் ஒன்இந்தியா தமிழ் சார்பாக முன்வைத்தோம்.. அதற்கு ரவீந்திரன் துரைசாமி நம்மிடம் பகிர்ந்து கொண்ட கருத்துக்களின் சுருக்கம்தான் இவை:

 ஷார்ப் ராமதாஸ்

ஷார்ப் ராமதாஸ்

"பல கூறுகளை கொண்டே, இப்படி ஒரு அறிவிப்பை அன்புமணி அறிவித்துள்ளார்.. ராமதாஸின் ஆலோசனையில்தான் இப்படி அறிவித்திருக்கக்கூடும்.. டாக்டர் ராமதாஸுக்கு அரசியல் டிரெண்ட், தற்போதைய சூழலில், இந்த சூழல் எப்படி இனி போகும் என்பதெல்லாம் நன்றாகவே தெரியும்.. அவரது அரசியலையும், மதி நுட்பத்தையும் குறைத்து மதிப்பிட முடியாது.. மிகத் தெளிவாக, துல்லியமாக விஷயங்களை கணிக்கக்கூடியவர்.. அந்தவகையில், இப்போது கணித்துள்ளது என்னவென்றால், எடப்பாடி + பாமக கூட்டணி என்ற சூழல் இல்லை என்பதே.

சீரியஸ்

சீரியஸ்

டாக்டர் ராமதாசுக்கு ஓபிஎஸ்ஸிடம் ஆதரவு கிடைக்காத நிலையில், எப்படியும் எடப்பாடி தங்களிடம் கூட்டணி வைப்பார் என்ற தோற்றம் இருந்தது.. ஆனால், 2024-ல் அதிமுகவுடன் கூட்டணி இல்லை என்று தற்போது அறிவித்துவிட்டார்கள்... காரணம், எடப்பாடியே இந்த எம்பி தேர்தலை சீரியஸாக எடுத்துக் கொள்ள மாட்டார்.. பிறகு எப்படி பாமகவுக்கு தர்மபுரியில் வாக்குகள் செல்லும்? ஒற்றை தலைமை அதிமுக இருக்கும்போதே பாமகவால் அப்போது வெற்றி பெற முடியாதபோது, இப்போது அதிமுகவுடன் பாமக கூட்டணி வைத்தால், ஓட்டுக்கள் கிடைக்காது..

 சென்ட்டிமென்ட்

சென்ட்டிமென்ட்

அதிமுகவுக்கான சென்ட்டிமென்ட் எதுவும் இல்லாமல், எடப்பாடிக்கு மட்டுமே வாக்குகள் விழாது.. பாஜகவுக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் எதிராக இருக்க வேண்டாம் என்ற எண்ணம் அன்புமணிக்கு ஒருவேளை இருக்கலாம்.. எடப்பாடியை தூக்கி பிடித்தால், அது பாஜகவை எதிர்க்கும் ஒரு பிம்பத்தை உருவாக்கும் தன்மையும் அதில் அடங்கி உள்ளதால், லாபமும் நஷ்டமும் எதுவுமே இல்லாமல், அன்புமணி சொல்வதாக தெரிகிறது. அதாவது, எடப்பாடியை நம்பி பயணம் செய்ய தயாராக இல்லை என்பதே அன்புமணி பேச்சின் சாராம்சம்..

வீக்னஸ்

வீக்னஸ்

திமுக கூட்டணியை நோக்கி பாமக நகர்கிறது... காங்கிரஸின் சீட்டுக்களை குறைத்துவிட்டு, நமக்கு சீட் தருவார்கள் என்று பாமக எதிர்பார்க்கிறது.. ஆனால், விசிகவை பொறுத்தவரை குறைந்த சீட், நிறைந்த லாபம் பெறுபவர்கள். ஆனால், அதிமுகவுடன் கூட்டணி இல்லை என்று மட்டும் பாமக சொல்லி உள்ளதே தவிர, அதிமுக பலவீனமாகிவிட்டது என்று திருமாவளவன் சொன்னது போல் வெளிப்படையாக சொல்லவில்லை.. அதேசமயம் ஸ்டாலினை நோக்கி பாமகவினர் நகருகிறார்கள்.. ஆனால், பாமகவுக்கு திமுக வாய்ப்பு தருமா என்பது உறுதியாக தெரியவில்லை..

திருமாவளவன்

திருமாவளவன்

அப்படியே திமுகவுடன் கூட்டணி என்றாலும், குறைந்தபட்சம் 4 அல்லது 5 சீட்டுக்களை பாமக கேட்கும்.. பாமக கூட்டணியில் இருந்தால், திருமாவளவன் கூட்டணியில் இருப்பாரா என்று தெரியவில்லை.. விசிகவை திமுக வெளியேற்ற முடியாது.. வெளியேற்றவும் விரும்ப மாட்டார்கள்.. திமுக எதிர்ப்பு அரசியலை பாமக பெரிய அளவுக்கு கொண்டு செல்லாது என்றாலும், தன்னுடைய சீட்டுக்களை பாமகவுக்கு திமுக தாரைவார்க்காது.. ஸ்டாலினை எதிர்த்து வெற்றி பெற முடியாது என்ற நிலைமையில்தான் அன்புமணி இந்த முடிவை எடுத்திருக்கலாம்.. ஆனால், ஸ்டாலின் இறங்கி வந்து பாமகவுக்கு வாய்ப்பு தருவது மிக குறைவு.. மொத்தத்தில், பாமக கூட்டணிக்கு வருவதால் திமுகவுக்கு லாபம் பெரிதாக இல்லை.. ஒருவேளை திமுகவுக்கு வந்தால் பாமகவுக்கு லாபம் இருக்கலாம்" என்றார்.

English summary
Can VCK alliance with dmk and Will the Anbumani join the MK Stalin, says Ravindiran Duraisamy
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X