அரண்டு போன விஜயகாந்த்.. "பேசாம இப்படி பண்ணிடுங்களேன்".. திமுகவுக்கு பறந்த மெயின் மேட்டர்.. சாத்தியமா

விஜயகாந்தின் தேமுதிகவின் விஜயபிரபாகரனின் அரசியல் என்ட்ரி ஈரோடு கிழக்கில் ஆரம்பமாகி உள்ளது

Subscribe to Oneindia Tamil

சென்னை: படுதோல்வியை சந்தித்துள்ளது தேமுதிக.. அக்கட்சி தொண்டர்களும் அதிர்ச்சியிலும், அதிருப்தியிலும் உள்ளனர்.. இந்த நேரத்தில், தேமுதிக தலைவர் விஜயகாந்த் முக்கிய அட்வைஸ் ஒன்றை தொண்டர்களுக்கு தந்துள்ளார்.. அத்துடன் மேஜர் கோரிக்கை ஒன்றையும் விடுத்துள்ளது பலரது கவனத்தை பெற்று வருகிறது.

இந்த ஈரோடு கிழக்கு தொகுதியில், பாஜக, அமமுக, பாமக, மநீம என பல கட்சிகள் போட்டியிடாமல் ஒதுங்கியநிலையில், விஜயகாந்த்தின் தேமுதிக களத்தில் குதித்தது.

எப்படியும் யாருக்காவது ஆதரவு தரும் அல்லது யாருக்கும் ஆதரவில்லை என்ற நிலைப்பாட்டை எடுக்கும் என்று கணிக்கப்பட்ட நிலையில், நேரடியாகவே போட்டியில் குதித்து, வேட்பாளரையும் அறிவித்தது.

விஜயபிரபாகரன்

விஜயபிரபாகரன்

இதற்கு காரணம், கடந்த 2011 தேர்தலிலேயே திமுகவை இந்த தொகுதியில் தோற்கடித்திருந்தது தேமுதிக.. இப்போதும் இந்த ரசிகர் பட்டாளம் அதிகம் என்பதாலேயே, அவர்களை நம்பியே பெரிதும் களமிறங்கியது.. அதுமட்டுமல்ல, இப்போதைக்கு எந்த அளவுக்கு தங்கள் கட்சியின் பலத்தை அதிகரிக்க முடியுமோ அவ்வளவும் எம்பி தேர்தலில் தங்களுக்கு உதவும் என்றும் தேமுதிக கணக்கு போட்டது.. அதைவிட முக்கியமாக, விஜய பிரபாகரனை முன்னிறுத்தும் விதமாகவும் இந்த தேர்தலை பயன்படுத்தி கொள்ள முயன்றதாக சொல்லப்பட்டது.. அதற்கேற்றபடி, அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் சுதீஷ்ஷூம், விஜயகாந்த்தின் மகன் விஜய பிரபாகரனும் மிக தீவிரமாக பிரச்சாரம் செய்தனர்..

மூன்று முடிச்சுக்கள்

மூன்று முடிச்சுக்கள்

சுருக்கமாக சொல்லப்போனால், தேமுதிகவுக்கு புதுரத்தம் பாய்ச்சல் + வாக்கு வங்கியை பலப்படுத்துதல் + விஜயபிரபாகரனுக்கான என்ட்ரி என 3 விதமான காரணங்களுக்காக இந்த இடைத்தேர்தல் பயன்படுத்தி கொள்வதாக பார்க்கப்பட்டது. அதுக்காக சுயேச்சை வேட்பாளருக்கும் கீழே ஓட்டு வாங்கும் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை. கட்சியின் வேட்பாளர் ஆனந்த் வெறும் 1,432 வாக்குகள் மட்டுமே பெற்றுள்ளது தொண்டர்களுக்கு அதிர்ச்சியை தந்துவருகிறது. சுயேச்சை வேட்பாளரைவிட, குறைவான வாக்குகளை தேமுதிக வேட்பாளர் பெற்றுள்ளார் என்றால், கட்சி தன்னை சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டிய நெருக்கடிக்கு அக்கட்சி ஆளாகி உள்ளதை நாம் சுட்டிக்காட்ட வேண்டி உள்ளது..

சுயபரிசோதனை

சுயபரிசோதனை

அதைவிட முக்கியமாக, மக்களின் பிரச்சனைகளை கையில் எடுத்து, மக்களுடன் மக்களாக நெருங்கியிருக்க வேண்டிய நிர்ப்பந்தமும் தேமுதிகவுக்கு ஏற்பட்டுள்ளது என்பதை, இந்த இடைத்தேர்தல் சுட்டிக்காட்டி விட்டு போயுள்ளதாகவும் தெரிகிறது.. இந்நிலையில் விஜயகாந்தின் அறிக்கையானது, சோர்ந்து போயுள்ள தொண்டர்களுக்கு தெம்பை தந்து வருகிறது.. "தேர்தல் பிரச்சாரம் தொடங்கியது முதல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற நாள் வரை ஈரோடு கிழக்கு தொகுதியில் பண மழை பொழிந்தது. ஆளும்கட்சியும், ஆண்ட கட்சியும் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்ததோடு, குக்கர், கொலுசு, குங்குமச்சிமிழ், வேட்டி, சேலை, இன்ப சுற்றுலா, தினந்தோறும் கறி விருந்து வழங்கியதாக வீடியோ ஆதாரத்துடன் பல்வேறு ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.

கறிவிருந்து

கறிவிருந்து

இதுகுறித்து தேர்தல் ஆணையத்திடம் பல்வேறு புகார்கள் அளிக்கப்பட்டன. 2009-ல் தி.மு.க உருவாக்கிய திருமங்கலம் பார்முலாவை 14 ஆண்டுகளுக்கு பின், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தி.மு.கவே முறியடித்து விட்டது. ஆட்சி அதிகாரம் உள்ளிட்ட அனைத்து அஸ்திரங்களையும் பயன்படுத்தி ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுக முறைகேடாக வெற்றி பெற்றிருப்பது புதிதல்ல. தற்போது மாபெரும் வெற்றி பெற்று விட்டதாக மார்தட்டிக் கொள்ளும் திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும், மிகப்பெரிய தொகையை கொடுத்து வாக்காளர்களை விலைக்கு வாங்கி தேர்தலில் வெற்றி பெற்றிருப்பது அப்பட்டமாக தெரிகிறது.

அஸ்திரங்கள்

அஸ்திரங்கள்

இனிமேல் நடைபெறும் இடைத்தேர்தல்களில் எந்த கட்சியின் வேட்பாளர் மரணம் அடைகிறாரோ, அந்த கட்சியில் உள்ள ஒரு நபரையே எம்எல்ஏவாக அறிவித்து விடுங்கள். எதற்காக இந்த கண்துடைப்பு நாடகம். மேலும் எந்த தொகுதியிலும் நடைபெறாத வகையில் வாக்காளர்களை காலை முதல் மாலை வரை பட்டறையில் அடைத்து வைத்த கொடூரமும் அரங்கேறியது. இது ஜனநாயக ரீதியில் நடைபெற்ற தேர்தல் அல்ல. முழுக்க முழுக்க பணத்தை நம்பியே நடைபெற்ற தேர்தல். இனிமேல் நடைபெறும் இடைத்தேர்தல்களில் எந்த கட்சியின் வேட்பாளர் மரணம் அடைகிறாரோ, அந்த கட்சியில் உள்ள ஒரு நபரையே எம்எல்ஏவாக அறிவித்து விடுங்கள்.

சூது கவ்வுதே

சூது கவ்வுதே

எதற்காக இந்த கண்துடைப்பு நாடகம். பணபலம் அதிகாரபலம், ஆட்சி பலத்தை எதிர்த்து நமக்கு கிடைத்த ஒவ்வொரு வாக்குகளும் ஆயிரம் மடங்கு சமம். இது உண்மைக்கும், நேர்மைக்கும் கிடைத்த வாக்குகள். மேலும், இடைத்தேர்தலில் இரவு பகல் என பாராமல் உழைத்த நமது நிர்வாகிகள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். ஈரோடு இடைத்தேர்தல் முடிவுகளை கண்டு நமது கழக நிர்வாகிகள் துவண்டு விடாதீர்கள், கவலைப்படாதீர்கள். பீனிக்ஸ் பறவைபோல் மீண்டெழுந்து வருங்காலத்தில் இமாலய வெற்றி பெறுவோம். தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் மீண்டும் தருமமே வெல்லும்" என்று தெரிவித்துள்ளார்...

கூல் விஜயகாந்த்

கூல் விஜயகாந்த்

இனிமேல் இடைத்தேர்தல்களில் எந்த கட்சியின் வேட்பாளர் மரணம் அடைகிறாரோ, அந்த கட்சியில் உள்ள ஒரு நபரையே எம்எல்ஏவாக அறிவித்து விடுங்கள் என்று விஜயகாந்த் கூறியுள்ள இந்த கோரிக்கை மிகுந்த முக்கியத்துவம் பெற்று வருகிறது.. பணப்பட்டுவாடா குறித்து திமுக மீது இப்படியான விமர்சனத்தை அவர் வைத்தாலும், "ஒரே நாடு ஒரே தேர்தல் முறை" சமீபகாலமாக பேசப்பட்டு வருகிறது.. இதுகுறித்து அரசியல் விமர்சகரான கலை, நம்முடைய ஒன் இந்தியா தமிழுக்கு சில நாட்களுக்கு முன்பு ஸ்பெஷல் பேட்டி ஒன்றை தந்திருந்தார். அப்போது இடைத்தேர்தல்கள் குறித்தும் சில கருத்துக்களை கூறியிருந்தார்..

நோ செலவு நோ காஸ்ட்

நோ செலவு நோ காஸ்ட்

கலை நம்மிடம் அப்போது பேசும்போது, "ஒரு இடைத்தேர்தல் வருகிறது என்று வைத்துக் கொள்வோம். ஒரு எம்எல்ஏ அல்லது எம்பி யாராவது இறந்துவிட்டால், அங்கு இடைத்தேர்தல் தேவையில்லை என்கிறார்கள். எந்த கட்சியின் உறுப்பினர் இறந்துவிட்டாரோ, அந்த கட்சி இன்னொரு எம்பி, எம்எல்ஏவை அவர்களே தேர்ந்தெடுத்து கொள்ளலாம். அவர்களுக்கே அந்த பொறுப்பை தந்துவிட வேண்டும். ஒரே நாடு ஒரே தேர்தல் முறையை ஏற்றுக்கொள்வதானால், இடைத்தேர்தல் தேவையேயில்லை. ஈரோடு கிழக்கில் இடைத்தேர்தல் நடப்பதாக இருந்தாலும், காங்கிரஸ் கட்சியே தங்களில் ஒருவரை எம்எல்ஏவாக தேர்வு செய்துவிடலாம்.

மாநில சுயாட்சி

மாநில சுயாட்சி

இப்படி தேர்ந்தெடுக்கப்படுவது மக்களாட்சி தத்துவத்திற்கு மாற்றாக பார்க்கப்படாது. காரணம், பிரதானமாக ஒரு வேட்பாளருக்கு மக்கள் வாக்களிப்பதில்லை.. அந்த கட்சி அல்லது கூட்டணி கட்சிகள் இதற்குதானே மக்கள் வாக்களிக்கிறார்கள். அதனால், ஏற்கனவே தேர்வு செய்யப்பட்டதால், திரும்ப அந்த கட்சியிலேயே ஒருவரை தேர்வு செய்வதால் பிரச்சனை இல்லை. மாநில சுயாட்சிக்கும் இதுக்கும் சம்பந்தமே இல்லை. தேர்தலையே நடத்தாமல் தள்ளிப் போடுகிறார்கள் அல்லது மத்திய அரசே தேர்தலை தீர்மானிக்கிறது என்றால், அதை மாநில சுயாட்சிக்கு எதிரானது என்று கூறலாம். ஆனால், தேர்தல் எப்போது என்பதை முடிவு செய்வது தேர்தல் ஆணையம் தான். ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது ஒன்றுதான் இதில் சிறிய மாற்றமே தவிர, மாநில சுயாட்சிக்கு எதிரானது இது கிடையாது" என்று கூறியிருந்தது இங்கு நினைவுகூரத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+