சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

"சவுக்கு சங்கருக்கு" ஆதரவு தருவது ஏன் தெரியுமா.. துணிந்து சொன்ன சீமான்.. "போட்டுக் குழப்பிக்காதீங்க"

சவுக்கு சங்கருக்கு ஆதரவு தெரிவித்து சீமான் செய்தியாளர்களிடம் பேட்டி தந்துள்ளார்

Google Oneindia Tamil News

சென்னை: மக்கள் விரோதமாக பேசிவரும் சவுக்கு சங்கருக்கு ஆதரவு தரலாமா? என்ற கேள்விக்கு நாம் தமிழர் கட்சியின் சீமான், துணிந்து பதிலடி தந்துள்ளார்.

அரசியல் விமர்சகர் யூடியூபர் சவுக்கு சங்கர், யூடியூப் சேனல்களிலும், தொடர்ந்து டிவி சேனல்களிலும் அரசியல் கருத்துகளை தெரிவித்து வந்தார்... சமீபத்தில் சென்னை ஹைகோர்ட் நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் குறித்து அவதூறு கருத்துகள் தெரிவித்ததாக, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஹைகோர்ட்டில் தொடரப்பட்டது..

இதில், சவுக்கு சங்கருக்கு 6 மாத சிறை தண்டனையும் விதிக்கப்பட்டு, அவர் கடலூர் சிறையில் அடைக்கப்பட்டார்... சவுக்கு சங்கரை விடுதலை செய்ய வேண்டும் என அவருக்கு ஆதரவாக, நாம் தமிழர் கட்சியின் சீமானும், விசிக திருமாவளவனும் குரல் கொடுத்தனர்..

அரசியலில் ’சவுக்கு’ சங்கர்! 'அந்த’ கட்சியில் சேரப் போறாரா? கிளம்பிய யூகங்கள்.. அவரே சொல்லிட்டாரே!அரசியலில் ’சவுக்கு’ சங்கர்! 'அந்த’ கட்சியில் சேரப் போறாரா? கிளம்பிய யூகங்கள்.. அவரே சொல்லிட்டாரே!

 சவுக்கு சங்கர்

சவுக்கு சங்கர்

சவுக்கு சங்கர் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை எதிர்த்து, சுப்ரீம்கோர்ட்டில் மேல்முறையீடு செய்ததில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சிறைதண்டனைக்கு நிறுத்தி வைக்க உத்தரவிட்டது... சவுக்கு சங்கர் விடுதலையாவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பழைய 4 வழக்குகளில் சென்னை சைபர் க்ரைம் பிரிவு போலீசார் அவரை கைது செய்தனர். இதைத் தொடர்ந்து, எழும்பூர் கோர்ட் அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியதையடுத்து அவர் விடுதலையானார்.

 சவுக்குக்கு ஆதரவு

சவுக்குக்கு ஆதரவு

இதையடுத்து, சவுக்கு சங்கர், தனக்கு ஆதரவாக குரல் கொடுத்த சீமானை அவருடைய இல்லத்தில் கடந்த வாரம் சந்தித்து நன்றி கூறினார்.. அப்போது, சவுக்கு சங்கர் சீமானுக்கு சால்வை அணிவித்தார்... சீமானும், சவுக்கு சங்கருக்கு புத்தகம் வழங்கினார்... பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சீமான், சவுக்கு சங்கர் தேர்தலில் போட்டியிட்டால், அவரை எதிர்த்து நாம் தமிழர் சார்பில் வேட்பாளரை நிறுத்த மாட்டோம், சவுக்கு சங்கருக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்வேன், நாம் தமிழர் சார்பாக தங்கள் கட்சியின் சின்னத்தில் கூட வேட்பாளராக நிறுத்துவேன் என்று சீமான் கூறியிருந்தார்.

 சவுக்கு சங்கர்

சவுக்கு சங்கர்

இந்த பேட்டி அரசியல் களத்தில் மிகுந்த அதிர்வலையை எழுப்பியிருந்தது. இந்நிலையில், சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய சீமானிடம், இதுகுறித்து கேள்வி எழுப்பப்பட்டது.. "சவுக்கு சங்கரை நீங்கள் வெளிப்படையாகவே ஆதரிக்கிறீர்கள்.. உங்கள் சின்னத்தை தந்து, போட்டியிட வைப்பதாகவும் சொல்லி உள்ளீர்கள்.. தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவமே தற்செயலாக நடந்தது என்று சவுக்கு சங்கர் பேசுகிறார்.. ஸ்ரீமதிக்காக எந்த ஊடகங்கள் பேசுகின்றனவோ, அந்த ஊடகங்களை தடை செய்ய வேண்டும் என்கிறார்.. இப்படி மக்களுக்கு விரோதமாக கருத்து சொல்லி வரும் சவுக்கு சங்கருக்கு, கருத்து சுதந்திரம் தேவையா? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

குழப்பிக்காதீங்க

குழப்பிக்காதீங்க

அதற்கு சீமான் தந்த பதில்தான் இது: "தம்பி விரும்பினால், தனித்து போட்டியிடுவதாக சொன்னால், அதற்கு ஆதரிப்பேன்.. ஒவ்வொருவருக்கும் ஒரு கருத்து உள்ளது.. மாற்று கருத்து உடையவர்களை நேசிக்கக்கூடாது, அவர்களுடன் உறவு வைத்து கொள்ளக்கூடாது என்றெல்லாம் கிடையாதே.. மாற்று கருத்து இருப்பதுதானே ஜனநாயகம்.. ஸ்டெர்லைட் விஷயத்தில் அவர் சொல்வது தவறு என்று நிச்சயம் நான் தர்க்கம் செய்வேன்.. அதுக்காக அவரை வெறுக்க முடியாதே.. மனித வெறுப்பு என்பது வேறு.. கருத்து முரண் என்பது வேறு.. போட்டுக் குழப்பிக்காதீங்க..

மாரிதாஸ்

மாரிதாஸ்

நீங்கள் என் நிலைப்பாடு என்ன என்பதைதான் பார்க்க வேண்டும்.. ஸ்டெர்லைட் போராட்டமாகவும், தங்கச்சி ஸ்ரீமதி விவகாரமாகட்டும், மாற்று கருத்து அனைவருக்குமே உண்டு.. நான் கருத்துரிமைக்கு ஆதரவானவன்.. அதுக்காக கூட்டணி அமைத்து போராட வேண்டும் என்ற அவசியம் எனக்கில்லை.. நான் தனித்தே போராடுவேன்.. சவுக்கு சங்கருக்கு மட்டுமல்ல, என்னை விமர்சிக்கும் கிஷோர் கே சாமியின் கைதையும் நான் கண்டித்துள்ளேன்.. தம்பி மாரிதாஸ் கைதையும் நான் கண்டித்துள்ளேன்.. எனக்கு வாக்கு செலுத்தக்கூடாது என்று வீட்டுக்கு வீடு முட்டிக்கால் போட்டு ஜெபம் செய்தாரே, பொன்னையா ஜார்ஜ்ஜின் கைதையும் கண்டித்துள்ளேன்.. இது என்னுடைய கடமையாக நினைக்கிறேன்.. என் இனத்தின் மாண்பு இது..

 ஸ்ட்ரா தரல

ஸ்ட்ரா தரல

ஸ்டேன் லூர்துசாமிக்கு தண்ணீர் குடிக்க ஸ்ட்ரா கொடுக்கவில்லை.. கை நடுக்கம் அவருக்கு இருந்தது.. 2 மாசம் கோர்ட்டுக்குபோய் கடைசியில் அவரை கொன்றே விட்டதாகவும், நான் சண்டை போட்டேன்.. ஒருமுறை பெரியார்கிட்ட கேட்டாங்க, "உங்களுக்குதான் சாமி இல்லையே, கடவுள் இல்லையே, அப்பறம் எதுக்காக இவங்க எல்லாரும் கோயிலுக்கு உள்ளே போக வேண்டும் என்று போராடறீங்க" என்று கேட்டார்கள்.. அதற்கு பெரியார், "கடவுள் இல்லை என்பது என்னுடைய உணர்வு.. ஆனால், இவன் கோயிலுக்குள் போயி கும்பிட வேண்டும் என்பது அவனது உரிமை.. அந்த உரிமையை போராடி பெற்றுத்தருவது, ஒவ்வொரு மனிதனின் கடமை" என்றார்.. அதைதான் நான் இப்போது செய்கிறேன்" என்றார் சீமான்.

English summary
Can we support the anti-people Savukku Shankar and Seemans bold answer
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X