Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நல்ல மழை பெய்யும்போது AC போடறீங்களா? குளிர்காலத்தில் ஏசியை இப்படி பயன்படுத்துங்கள்.. பெஸ்ட் டிப்ஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: வெயில் காலத்தில் ஏசி பயன்படுத்துவது இயல்பான விஷயம்தான். ஆனால், மழைக்காலத்தில் ஏசி பயன்படுத்தலாமா? குளிர்காலத்தில் பயன்படுத்தலாமா? என்னாகும்?

ஏர் கூலருடன் ஒப்பிடும்போது AC-க்கு செலவு அதிகமாகிறது.. கரண்ட் பில்லும் அதிகமாகிவிடுகிறது.. ஏசியின் ஃபில்டரை அடிக்கடி சுத்தம் செய்வதாலும், ஏசியை முழுமையாக சர்வீஸ் செய்வதாலும் கரண்ட் பில் மிச்சமாகும்.. ஏசியுடன் சேர்த்து சீலிங் ஃபேனையும் ஓடவிட்டால், குளிர்ந்த காற்று விரைவில் அறை முழுவதும் பரவிவிடும்..

Can we Use AC in Rainy season and Do you know how to maintain Air Condition during winter the Season Best Tips

வெப்பநிலை: அதுமட்டுமல்லாமல், குறைந்த வெப்பநிலையில் ஏசி-யை வைக்காமல் 16 அல்லது 18 டிகிரியில் வைக்க வேண்டுமாம்.. மனிதனுக்கு தேவைப்படும் சராசரி வெப்பநிலையானது 24 டிகிரி என்பதால்தான், இந்த 24 அளவிலேயே ஏசியை வைத்திருக்க சொல்கிறார்கள். குறைந்தது 25 லிருந்து 27 டிகிரி செல்சியஸில் ஏசி பயன்படுத்தும்போது, மின்பற்றாக்குறையும் ஏற்படாது என்கிறார்கள்.

ஏசியை ரிமோட் கண்ட்ரோலில் மட்டும் ஆப் செய்யாமல், ஸ்டெபிலைசரின் சுவிட்சையும் சேர்த்து ஆப் செய்தால், கரண்ட் பில் மிச்சமாகும். ஆனால், மழை நேரத்தில் ஏசியை பயன்படுத்தினால் என்னாகும் தெரியுமா?

ஏசி பயன்பாடு: மழையில் ஏசி பயன்படுத்தும்போது, கரண்ட் பில் கட்டணம் அதிகமாக வாய்ப்புகள் இருக்கிறதாம்.. அதனால், கனத்த மழை பெய்யும்போது ஏசியை அணைத்துவிடுவதே நல்லது.. காரணம், மழைத்தண்ணீரும் ஏசி மூலம் வீட்டிற்குள் வந்துவிட வாய்ப்புள்ளது..

அதுமட்டுமல்ல, சூறாவளி, புயல் நேரத்தில், ஏசியின் மெயின் ஸ்விட்சையே நிறுத்திவிட வேண்டுமாம். ஏனென்றால், இடி, மின்னல்கள் வீட்டை தாக்க நேர்ந்தால், அது மின்சார கம்பிகள் வழியாக சென்று, ஏசி யூனிட்டையே சேதப்படுத்த வாய்ப்புண்டு. லேசான மழை பெய்யும் நேரத்தில் ஏசியை நாம் உபயோகபடுத்தலாம் என்றாலும், மழைக்காலத்தில் ஏசி பயன்படுத்தும்போது, வழக்கத்தை விட வேகமாக உஷ்ணமாகிவிடும் என்றும் நிபுணர்கள் கூறுகிறார்கள்.

சூறாவளி: லேசாக மழை பெய்யும்போது, ஏசியை பயன்படுத்தலாம்.. இதனால், வெளியேயிருக்கும் ஏசி யூனிட்டிலிருந்து அழுக்குகள் சுத்தமாகும். ஆனால், அதிகமான காற்று, சூறாவளி, புயல் போன்ற நேரங்களில், ஏசி யூனிட்டுகளை சேதமடையாமலும் கவனித்து கொள்ள வேண்டியிருக்கிறது. இதற்கு

மழைக்காலத்தை போலவே, குளிர்காலத்திலும் ஏசியை பாதுகாக்க வேண்டியிருக்கிறது.. காரணம், வெயில் காலத்தில் வெப்பத்திலிருந்து பாதுகாத்து கொள்ள குளுமை தேவைப்படுவதைப்போல, குளிர்காலத்தில் குளிர்ச்சியில் இருந்து பாதுகாத்துக்கொள்ள வெப்பம் தேவைப்படுகிறது..

குளிர்காலம்: எனவே, குளிர்காலத்தில் ஏசியை பயன்படுத்தினாலும், அவை ரிப்பேர் ஆகிவிட நிறைய வாய்ப்புள்ளது.. ஏசியிலுள்ள கம்ப்ரசர் இயங்க வேண்டுமானால், இதற்கென அடர்த்தி அதிகமுள்ள கெமிக்கல் எண்ணெய் பயன்படுத்தப்படுகிறது... இந்த எண்ணெய், குளிர்காலத்தில் உறையக்கூடியது என்பதால், ஏசியை பயன்படுத்தும்போது, ஏசியின் காயில்கள் பாதிக்கப்படலாம்.

இதுவே, ஹீட்டர் வசதியுள்ள ஏசிகளுக்கு இதுபோன்ற பாதிப்புகள் ஏற்படுவதில்லை. எனவே, மழைக்காலத்தை போல, குளிர்காலத்திலும் ஏசியை பயன்படுத்தாமல் இருப்பதே சிறந்தது. தேவைப்பட்டால், ஏசி கம்ப்ரசர்களில் ஈரம் படும்போது அதன் பாகங்கள் துருப்பிடிக்காதவாறு, பிளாஸ்டிக் கவர் கொண்டு மூடிவைப்பது இன்னும் சிறந்தது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+