ஆஹா.. சூப்பர்ல! இனி இ-சேவை மையங்களில் பணம் எடுக்கலாம்.. தமிழக அரசின் அசத்தல் பிளான்!
சென்னை: தமிழ்நாட்டில் ஏடிஎம் அருகில் இல்லாத மக்கள் இனி பணம் எடுக்க நகரங்களுக்குச் சென்று கால் கடுக்க காத்திருக்கத் தேவையில்லை. அருகில் உள்ள இ-சேவை மையங்களில் பணம் எடுக்கும் வசதியை அறிமுகப்படுத்த தகவல் தொழில்நுட்பத்துறை திட்டமிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள இ-சேவை மையங்களில் பணம் எடுக்கும் வசதியை அறிமுகப்படுத்த தகவல் தொழில்நுட்பத்துறை திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இ சேவை மையங்களை DigiPay வரம்பிற்குள் கொண்டுவந்து பணம் எடுக்கும் வகையில் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் இ-சேவை மையங்களில் ஆதார் பயோமெட்ரிக் வாயிலாக வங்கி கணக்கில் இருந்து பணம் எடுக்க முடியும்.

தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களில் உள்ள அரசு அலுவலக பகுதிகளிலும், கிராமப்புற பகுதிகளிலும் தமிழக அரசின் பொது இ-சேவை மையம் செயல்பட்டு வருகிறது. தமிழக மின்னணு நிறுவனம் மற்றும் தமிழக அரசு கேபிள் டிவி நிறுவனம் மூலமாக இ- சேவை மையங்கள் செயல்பட்டு வருகின்றன
இந்த இ-சேவை மையங்கள் மூலம், அரசு சார்ந்த பல சான்றிதழ்களுக்கு விண்ணப்பித்தல், ஆதார் அட்டை உள்ளிட்ட அடையாளச் சான்றுகளில் திருத்தம் செய்தல் உள்பட பல்வேறு வசதிகள் மேற்கொள்ளப்படுகின்றன. சொத்து வரி, மின் கட்டணம், குடிநீர் மற்றும் கழிவு நீர் அகற்றல் கட்டணம் உள்ளிட்ட பல்வேறு வரிகளையும், கட்டணங்களையும் இ-சேவை மையம் வாயிலாகச் செலுத்தமுடியும்.
இந்த நிலையில், இ-சேவை மையங்களில் பணம் எடுக்கும் வசதியை அறிமுகப்படுத்த தமிழ்நாடு அரசின் தகவல் தொழில்நுட்பத்துறை திட்டமிட்டு உள்ளது. வங்கி ஏடிஎம்கள் தவிர, பொதுத்துறை நிறுவனமான இந்திய அஞ்சல் துறை ஏடிஎம் மற்றும் பணம் பெறும் கார்டு வசதிகளை பெற்றுள்ளது.
அதுபோல தற்போது தமிழ்நாடு அரசின் இ-சேவை மையங்களையும் மேம்படுத்த முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. இதன் மூலம் இனி இ-சேவை மையங்களில் பணம் எடுக்கும் வசதி அறிமுகமாக உள்ளது. பயோமெட்ரிக் மூலமாக, ஆதார் கார்டு பயன்படுத்தி வங்கிக் கணக்கில் இருந்து பயணம் எடுத்துக்கொள்ளலாம்.
இந்த வசதி கிராமப்புற பொதுமக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில் இதுகுறித்த அறிவிப்பை தமிழக அரசு வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications