சென்னையிலிருந்து பெங்களூருக்கு 2மணி நேரத்தில் செல்ல முடியுமா?புதிய நெடுஞ்சாலை பற்றி தெரியாத உண்மைகள்

Subscribe to Oneindia Tamil

சென்னையில் இருந்து பெங்களூருவிற்கு புதிததாக அமைக்கப்பட்டுள்ள தேசிய நெடுஞ்சாலை அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் திறக்கப்படும் என அமைச்சர் நிதின் கட்காரி அறிவித்துள்ளார். இந்த சாலையில் 2 மணி நேரத்தில் சென்னை பெங்களூரு போக முடியும் என்று சொல்கிறார்கள். உண்மையில் அப்படி போவதற்கு சாத்தியமே இல்லை என்பதே நிதர்சமான உண்மை,

சென்னையில் இருந்து பெங்களூரு செல்ல தற்போது சென்னை- காஞ்சிபுரம்- வேலூர்- கிருஷ்ணகிரி- ஓசூர்- பெங்களூரு வழிதான் பயன்படுத்தப்படுகிறது. இப்படி செல்ல 320 கிமீ தூரம் பயணிக்க வேண்டும். இதில் ஸ்ரீபெரும்புதூர் வரையில் போக்குவரத்து நெரிசல் எப்படி இருக்கும் என்பதை இந்த சாலையில் பயணித்த மக்களுக்கு நன்றாகவே தெரியும். இதேபோல் கிருஷ்ணகிரி தாண்டிவிட்டாலும் போக்குவரத்து நெரிசல் ஆரம்பித்துவிடும். கர்நாடகாவை நெருங்கும் போது போக்குவரத்து நெரிசல் எப்படி இருக்கும் என்பது நம் மக்களுக்கு சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

Can you go from Chennai to Bangalore in 2 hours? why is it not possible?

ஆம்னி பேருந்துகளில் சென்றால் கூட 6 மணி நேரத்திற்கு முன்பாக பெங்களூருவை அடைந்துவிட முடியாது. இரவு 11 மணிக்கு மேல் சென்னையில் இருந்து புறப்பட்டு அதிகாலைக்குள் சென்றால் தான் அதுவும் சாத்தியம். கார்களுக்கும் இதே நிலை தான்.எங்குமே நிற்காமல் கார்களில் சென்றால் கூட, நிச்சயம் தற்போதைய நிலையில் 5 மணி நேரமாவது ஆகும். அதற்கு முன்பு பெங்களூருவை அடைவதோ சாத்தியமே இல்லை .இதில் முக்கியமான உண்மை என்னவென்றால், பெரும் வணிக நிறுவனங்கள் அதிக அளவில் பெங்களூரு சாலையில் தான் உள்ளன. இதனால் போக்குவரத்து நெரிசல் மிகமிக அதிகமாக இருக்கும்.

இந்நிலையில் சென்னை பெங்களூரு இடையே போக்குவரத்து நெரிசலை குறைக்க,தமிழ்நாட்டில் இருந்து ஆந்திரா வழியாக கர்நாடகாவை இணைக்கும் வகையில் புதிய தேசிய நெடுஞ்சாலை அமைக்க மத்திய அரசு முடிவு செய்தது. இந்த சாலை கர்நாடகாவில் 77.2 கிமீ தூரமும், ஆந்திராவில் 91.4 கிமீ தூரமும். தமிழ்நாட்ல் 93.7 கிமீ தூரமும் என மொத்தம் 262.3 கிமீ தூரம் அமைக்கப்பட்டு வருகிறது. இதுதவிர ஸ்ரீபெரும்புதூர் முதல் மதுரவாயல்வரை 22.6 கிமீ தூரத்திற்கு உள்ள நெடுஞ்சாலை தனியாக தரம் உயர்த்தப்படுகிறது.ஒட்டுமொத்தமாக பார்த்தால் 285.3கிமீ தூரம் சென்னையில் இருந்து பெங்களூருக்கு புதிய நெடுஞ்சாலை இருக்கும். அதாவது கிருஷ்ணகிரி, ஓசூர் வழியாக சென்றால் 320 கிமீ என்றால், இந்த புதிய சாலை வழியாக சென்றால் 286 கிமீ தூரம்ஆகும். எனவே சுமார் 50 கிமீ தூரம் குறையும். புதிய நெடுஞ்சாலையில் சென்னை டூ பெங்களூருவை வெறும் இரண்டு மணி நேரத்தில் கடக்க முடியும் என்று பலரும் கூறி வருகிறார்கள். உண்மையில் புதிய நெடுஞ்சாலையில் 2 மணி நேரத்தில் பெங்களூரு செல்ல முடியாது என்ற நெட்டிசன்கள் பலர் தெரிவித்துள்ளனர்.

நெட்டிசன் ஒருவர் இதுபற்றி கூறும் போது, 260 கிமீ தூரம் சென்னை புறநகர் மற்றும் பெங்களூரு புறநகர் இடையே கிட்டத்தட்ட 260 கிமீ தூரம் இருக்கும் என்று வைத்துக்கொள்வோம். எப்படி பார்த்தாலும் நீங்கள் ஆவரேஜ் ஸ்பீட் 130 கிமீ வேகத்தில் போக வேண்டும். குறைந்த பட்சம் நீங்கள் பெரும்பாலான இடங்களில் 160 கிலோமீட்டர் வேகத்தில் போக வேண்டும். ஆனால் தற்போது வடிவமைக்கப்பட்டு பெங்களூரு சென்னை புதிய நெடுஞ்சாலை 120 கிமீ வேகத்தில் செல்லும் வகையில் தான் வடிவமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக வளைவுகளில் எப்படி வேகமாக போக முடியும்.. முழு சாலையும் 120 கிமீ வேகத்தில் வடிவமைக்கப்பட்டிருக்கும் போது, இந்தச் சாலையை மணிக்கு 160 கிமீ வேகத்தை எப்படி அடைய முடியும்?

நீங்கள் ஃபெராரி அல்லது புகாட்டி காரில் கூட இந்த வேகத்தை அடைய முடியாது. பெங்களூர் - மைசூர் புதிய வழித்தடத்தை பார்த்த பிறகும், பெங்களூரு நெடுஞ்சாலையில் இப்படி போக முடியும் என்று கூறுவதை ஏற்க முடியாது.

ஸ்ரீபெரும்புதூரில் இருந்து பெங்களூர் வரையிலான பயணத்தை 2 மணி நேரத்தில் பயணம் செய்து அதனை ஸ்கிர்ன் ஷாட் எடுத்து போடுங்கள் பார்க்கலாம் என கூறியுள்ளார்.

இவரை போலவே பலரும் ஸ்ரீபெரும்புதூரில் இருந்து பெங்களூருவிற்கு 2 மணி நேரத்தில் போவது என்பது மிகவும் கடினமானது என்றும், பிராக்டிக்கலாக வாய்ப்பு இல்லை என்றும் கூறுகிறார்கள். தற்போதைய நிலையில் பெங்களூருவில் இருந்து சென்னைக்கு வந்தே பாரத் ரயிலில் சென்றால் கூட 4.30 மணி நேரம் ஆகிறது என்றும், வந்தே பாரத் ரயில் போல் மணிக்கு 130 கிமீ வேகத்தில் சென்றாலும் 2மணி நேரத்தில் போக முடியாது என்று நெட்டிசன்கள் கூறுகிறார்கள்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+