கை ரேகை பதித்தால் தான் இனி கேஸ் சிலிண்டர் கிடைக்குமா? ஏப்ரல் 1 முதல் புதிய விதியா? உண்மை என்ன?
சென்னை: கை ரேகை பதித்தால் தான் இனி கேஸ் சிலிண்டர் கிடைக்கும். ஏப்ரல் 1 முதல் இந்த புதிய விதி அமலுக்கு வருவதாக பல செய்திகள் பரவி வருகின்றன. அனால் ஆதார் சரிபார்ப்பிற்காக கை ரேகை பதியாவிட்டாலும் கேஸ் சிலிண்டர் கிடைக்கும் என்று எல்பிஜி நிறுவனங்கள் விளக்கம் அளித்துள்ளன. ஏப்ரல்
1 முதல் கைரேகை பெறப்படும். ஆனால் கை ரேகை இல்லாவிட்டாலும் தொடர்ந்து சிலிண்டர் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

கடந்த சில மாதங்களாக LPG சிலிண்டர் நுகர்வோரின் பயோமெட்ரிக் சான்றுகளின் அங்கீகாரம் நுகர்வோரின் வீட்டு வாசலில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது, 70%-80% டெலிவரி பணியாளர்களுக்கு பயோமெட்ரிக் அங்கீகார சாதனங்கள் வழங்கப்பட்டுள்ளன.
இதன் மூலம் நேரடியாக வீடுகளில் வந்து சிலிண்டர் வழங்கும் போதே நுகர்வோரின் பயோமெட்ரிக் சான்றுகளின் அங்கீகாரம் சோதனை செய்யப்படுகிறது.
மேலும், எல்பிஜி சிலிண்டர்களை வீட்டு வாசலில் டெலிவரி செய்யும் போது டெலிவரி செய்பவர்கள் உங்கள் பயோமெட்ரிக்கை சோதனை செய்து ஆதார் விவரங்கள் உங்களுடையதா என்பதை சோதனை செய்வார்கள்
மானியத்துடன் கூடிய எல்பிஜியைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களால் வழங்கப்பட்ட ஆதாரை அங்கீகரிப்பதற்காக மட்டுமே இந்தப் பயிற்சி மேற்கொள்ளப்படுகிறது. வாடிக்கையாளர்கள் ஒத்துழைத்து தங்கள் பயோமெட்ரிக் அங்கீகாரத்தைப் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என சிலிண்டர் நிறுவனங்கள் தெரிவித்து வருகின்றன.
சென்னை கட்டுப்பாடு இல்லை; இந்த நிலையில்தான் ஆதார் சரிபார்ப்பிற்காக கை ரேகை பதியாவிட்டாலும் கேஸ் சிலிண்டர் கிடைக்கும் என்று எல்பிஜி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. அதன்படி மானியத்துடன் கூடிய எல்பிஜியைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களால் வழங்கப்பட்ட ஆதாரை அங்கீகரிப்பதற்காக மட்டுமே இந்தப் பயிற்சி மேற்கொள்ளப்படுகிறது.
ஆனால் கை ரேகை கொடுக்க இணைப்பு எடுத்த ஆட்கள் எப்போதும் வீட்டில் இருக்க வாய்ப்பு இல்லை. அதனால் அவர்கள் கைரேகை கொடுக்க முடியாமல் போகலாம். இதன் காரணமாக மானியம் துண்டாகும் வாய்ப்புகள் உள்ளன.
இதனால் ஆதார் சரிபார்ப்பிற்காக கை ரேகை பதியாவிட்டாலும் கேஸ் சிலிண்டர் கிடைக்கும் என்று எல்பிஜி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. கைரேகை எப்போதும் வேண்டுமானாலும் கொடுக்கலாம். ஆனால் அது கட்டாயம் இல்லை. கைரேகை கொடுத்தால் மட்டுமே சிலிண்டர் கிடைக்கும் என்பது தவறு என்று எல்பிஜி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
பொதுவாக சர்வர் செயலிழப்பு போன்ற தொழில்நுட்ப கோளாறுகளால் ஆதார் அங்கீகார செயல்முறை அடிக்கடி சிக்கலுக்கு உள்ளாகும். இந்த அங்கீகார செயல்முறையை அவர்கள் முடிக்கவில்லை என்றால், அது எரிவாயு இணைப்பு துண்டிக்கப்படுவதற்கு வழிவகுக்கும் என்று மக்கள் அடிக்கடி பீதியடைந்துள்ளனர். இந்தியன் ஆயில், பாரத், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டு உள்ளன.
இதனால் கட்டணம் உயராது. அதே சமயம் அபராதம் விதிக்கப்படாது. மேலும் மானியமும் தடை படாது. எனவே ஆதார் சரிபார்ப்பிற்காக கை ரேகை பதியாவிட்டாலும் கேஸ் சிலிண்டர் கிடைக்கும் என்று எல்பிஜி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
ஆனால் OMC அதிகாரிகள் அத்தகைய அச்சத்திற்கு எந்த தேவையில் இல்லை என்பதை உறுதிப்படுத்தி உள்ளனர். அதன்படி இந்த பயோமெட்ரிக் அங்கீகாரத்திற்கு இதுவரை குறிப்பிட்ட காலக்கெடு எதுவும் இல்லை. ஆனால், தேவைப்படும் நேரங்களில் அதை முடிக்க வேண்டும். எனவே, முதல் கவனம் பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா (PMUY) பயனாளிகள் மீது உள்ளது. இதற்குப் பிறகு, மற்ற மானியதாரர்கள் அங்கீகரிக்கப்படுவார்கள் என்று எல்பிஜி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
கடந்த மாதம் ரூ.1,695க்கு விற்ற சிலிண்டர், ரூ. 1,898-ஆக உயர்த்தப்பட்டு உள்ளது. வீட்டு உபயோக சிலிண்டர் மாற்றமின்றி, ரூ. 918க்கு விற்பனை செய்யப்படுகிறது.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications