ரொம்ப கஷ்டம்.. படத்தில் “பாண்டா கரடி” எங்கே இருக்கு? 8 செகண்டில் கண்டுபிடிச்சா நீங்க ஜீனியஸ்
சென்னை: இங்கே கொடுக்கப்பட்டுள்ள ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் எண்ணற்ற பொருட்கள் கண்களுக்கு தெரியலாம். ஆனால் கழுகுக் கண் பார்வை கொண்ட ஒருவரால் தான் இந்த படத்தில் பாண்டா கரடி எங்கே இருக்கிறது என்று கண்டுபிடிக்க முடியும். இதிலும் குறிப்பிட்ட 8 செகண்டுக்குள் இந்த பாண்டாவை கண்டுபிடித்தால் நீங்க ஜீனியஸ் தான். உங்களால் முடியுமா?.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் கண்களை குழப்பி மூளையை கசக்கி பிழிய வைக்க கூடியது. ஒரே கல்லில் இரண்டு மாங்கா என்பது போல, ஒரே படத்தில் இரண்டு கருத்துக்கள் ஏன் பல கருத்துக்கள், தோற்றங்கள் இருக்கும். உதாரணத்திற்கு நாம் உற்று பார்த்தால் ஒரு தோற்றத்தினையும், மேலோட்டமாக பார்க்கும் போது வேறு வித தோற்றத்தினையும் காண்பிக்கும்.

ஆப்டிகல் இல்யூஷன்
இதனாலேயே இல்யூஷன் படங்களுக்கு விடையை கண்டுபிடிப்பது என்பது கொஞ்சம் சவாலாக இருக்கும். சில இல்யூஷன் படங்களில் சின்ன சின்ன டிரிக்ஸ்கள் தான் பயன்படுத்தப்பட்டிருக்கும். எனவே படம் முழுக்க தேடாமல் படத்தில் என்ன கேள்வி கேட்கப்பட்டிருக்கிறதோ அதனை மட்டும் கொஞ்சம் யோசித்து புத்திச்சாலித்தனமாக சிந்திக்கும் போது விடையை விரைவாக கண்டுபிடிக்க முடியும்.
ஒருவரின் புத்திக்கூர்மை, சிந்தனை ஆற்றல் போன்றவற்றை கூட இல்யூஷன் படங்கள் வாயிலாக கண்டறிய முடியும் என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள். இதனால் இந்த இல்யூஷன் படங்கள் இணையத்திலும் அடிக்கடி டிரெண்ட் ஆகி வருகின்றன. சரி இங்கே விஷயத்திற்கு வரலாம். இங்கு கொடுக்கப்பட்டு இருக்கும் இல்யூஷன் படத்தில் பாண்டா கரடி எங்கே இருக்கிறது? என்பதை கண்டுபிடிக்க வேண்டும்.
8 செகண்ட் டைம்
அதுவும் 8 செகண்டில் கண்டுபிடிக்க வேண்டும் என்பது தான் உங்களுக்கான டாஸ்க் ஆகும். சவாலுக்கு ரெடியா இருக்கீங்கன்னு தெரிகிறது. உங்களுக்கான டைம் தொடங்கியது. படத்தை நன்றாக பாருங்கள்.. படத்தில் எண்ணற்ற பொருட்கள் விலங்குகள் என குவிந்து கிடப்பது போல் இருக்கிறது. படத்தை பார்த்ததும் தலை சுற்றிப் போய் இருப்பீர்கள் என்று நினைக்கிறோம்.
அப்படித்தான் இந்த படமும் உங்களை குழப்புவதற்காக கொடுக்கப்பட்டு இருக்கிறது. ஆனால் நீங்கள் கொஞ்சம் புத்திசாலித்தனமாக யோசித்து பார்த்தால் விடையை எளிதில் கண்டுபிடித்து விடலாம். பார்க்கும் கோணத்தை மாற்றி பாருங்கள். எளிதில் கண்டுபிடித்து விடலாம். உங்களுக்கான 8 செகண்ட் டைம் முடிந்தது. விடையை கண்டுபிடித்தவர்கள் கமெண்ட் செய்யுங்கள். நீங்க ஜீனியஸ் தான்.
பாண்டா எங்கே இருக்கிறது?
ஆனால் இந்த படத்தில் எங்கே போய் பாண்டாவை தேடுவது, என நினைப்பவர்களுக்கு ஒரு டிப்ஸ் கொடுக்கப்படுகிறது. அதாவது படத்தை ஜூம் செய்து பார்த்தால் சீக்கிரமாக விடையை கண்டுபிடித்து விடலாம். விடையை இன்னமும் கண்டுபிடிக்க முடியாதவர்கள் கூடுதலாக ஒரு 5 செகண்ட் எடுத்துக்கொள்ளுங்கள். இப்போது முயற்சித்து பாருங்கள்.
இப்போது பலரும் விடையை கண்டுபிடித்து இருப்பீர்கள் என்று நம்புகிறோம். இன்னும் விடையை கண்டுபிடிக்காதவர்களுக்காக பாண்டா எங்கே இருக்கிறது என்பதை இந்த படத்தில் வட்டமிட்டு ஜூம் செய்து காட்டப்பட்டுள்ளது. பார்த்து தெரிந்துகொள்ளலாம்.













Click it and Unblock the Notifications