ஆர்ஆர்பி நடத்தும் ரயில்வே தேர்வு.. தெலுங்கானாவில் தேர்வு மையம்! தமிழக தேர்வர்கள் குற்றச்சாட்டு

Subscribe to Oneindia Tamil

சென்னை: ரயில்வே தேர்வில் தமிழக தேர்வர்களுக்கு தெலுங்கானாவில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டு இருப்பதாக தேர்வர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். லோகோ பைலட் உள்ளிட்ட 493 பணியிடங்களுக்கு 2 ஆம் கட்ட தேர்வு வரும் 19 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் தேர்வு மையம் அமைக்கப்பட்டு இருப்பதாக தேர்வர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

ரயில்வேயில் உள்ள காலிப்பணியிடங்கள் ஆர் ஆர் பி எனப்படும் ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் மூலமாக நிரப்பப்பட்டு வருகிறது. அந்த வகையில் ரயில்வேயில் உதவி லோகோ பைலட் பதவிக்கான ஆட்சேர்ப்பு பணிக்கு காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டது. மொத்தம் 493 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இதற்கான எழுத்துத் தேர்வு முடிந்துள்ளது. இதில் தமிழகத்தில் மட்டும் மொத்தம் 6,315 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

Job Employment Railway

தேர்ச்சி பெற்றவர்களுக்கு அடுத்தக் கட்டமாக, இரண்டாம் நிலை தேர்வு வரும் 19 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்வுக்கு தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு வெளி மாநிலங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தேர்வர்கள் குற்றச்சாட்டு வைத்துள்ளனர். பெரும்பாலான தமிழர்களுக்கு தெலுங்கானாவில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டுள்ளதாக கவலை தெரிவித்துள்ளனர்.

ரயில்வே தேர்வுகளில் ஏற்கனவே வட மாநிலத்தவர்களே அதிகம் தேர்வு செய்யப்படுவதாக பரவலாக தேர்வர்கள் முன்வைக்கும் குற்றச்சாட்டாக உள்ள நிலையில், தற்போது தேர்வு மையம் தொலை தூரங்களில் அமைக்கப்பட்டு இருப்பது சந்தேகத்தை மேலும் வலுப்படுத்தும் விதமாக அமைந்து இருப்பதாகவும் தேர்வர்கள் தரப்பிலும் சமூக ஆர்வலர்கள் தரப்பிலும் குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது.

தமிழக மாணவர்களுக்கு மொழி தெரியாத தொலை தூர பகுதிகளுக்கு செல்லும் போது தேர்வு மையம் கண்டுபிடிப்பது முதல் பயண அலைச்சல் என பல்வேறு நடைமுறை சிக்கல்கள் உள்ளன. எனவே தேர்வு மையங்களை தமிழகத்தில் அமைக்க வேண்டும் என்பதே தேர்வர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+