அதிமுக பக்கம் சாயுதா அந்த பெரிய கட்சி.. அறிவாலயம் வரை போன மேட்டர்.. அடுத்த பரபர
சென்னை: திமுகவுடன் பாமக கூட்டணி வைக்க வாய்ப்புள்ளதாக யூகங்கள் வட்டமடித்து வரும்நிலையில், அந்த கணக்குகள் அத்தனையும் நொறுங்கி விழுந்து கொண்டிருப்பதாகவே தெரிகிறது. என்ன காரணம்?
திமுக அரசை அவ்வளவாக விமர்சிக்காத நிலையில், சமீபகாலமாகவே திமுகவுடன் இணக்கமும், நெருக்கமும் காட்ட துவங்கியது பாமக.. இதனால், ஒருவேளை திமுக கூட்டணியில் இடம்பெற பாமக முயற்சிக்கிறதோ என்ற சந்தேகமும் கிளம்பியது.
அதற்கேற்றபடி, நடந்து முடிந்த இடைத்தேர்தலில் பாமக போட்டியிடாமல் யாருக்கும் ஆதரவு இல்லை என்று சொல்லி ஒதுங்கியதற்கு காரணமே திமுக தரப்புதான் என்றார்கள்..

3 சதவீத ஓட்டு
காரணம், ஈரோடு கிழக்கு தொகுதியில் சுமார் 3 சதவீதம் வன்னியர் வாக்குகள் உள்ள நிலையில், அந்த வாக்குகளை, தன் பக்கம் திருப்பவே பாமகவை "யாருக்கும் ஆதரவில்லை" என்ற நிலைப்பாட்டை திமுக எடுக்க வைத்தது, இதற்கு திமுகவில் உள்ள வன்னியர் சமூகத்து சீனியர் அமைச்சர் ஒருவர், பின்னணியில் இருந்ததாகவும், எனவே, ஈரோடு கிழக்கு காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவாக இருக்கும்படி முக்கிய நிர்வாகிகளுக்கும் பாமக தரப்பில் சிக்னல் தரப்பட்டுள்ளதாகவும் நம்முடைய ஒன் இந்தியா தமிழிலேயே ஸ்பெஷல் செய்தி ஒன்றை நாம் பதிவிட்டிருந்தோம்.. அந்த அளவுக்கு பாமக, திமுக பக்கம் நெருங்கி கொண்டிருப்பதாகவே கருதப்பட்டு வந்தது..

விசிக திருமா
இதனிடையே, விசிக தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களிடம், "பாமக- பாஜக அரசியல் ரீதியாக என்ன பின்னடைவு ஏற்பட்டாலும், பாஜக பாமக இருக்கும் கூட்டணியில், விடுதலை சிறுத்தைகள் கட்சி இருக்க மாட்டோம்... அகில இந்திய அளவில் பாஜகவுக்கு எதிரான அணியை திமுக ஒருங்கிணைக்க வேண்டும்" என்று அடிக்கடி வெளிப்படுத்த துவங்கினார்... ஆனால், கூட்டணி குறித்து, திமுகவும்சரி, பாமகவும் சரி, எந்த கருத்தையும் வெளிப்படையாக சொல்லவில்லை.. இப்படிப்பட்ட சூழலில்தான், என்எல்சி விவகாரத்தையும் பாமக கையில் எடுத்தது.. என்எல்சி நிலக்கரிச் சுரங்கத்தின் விரிவாக்கத்திற்காக, என்எல்சி நிறுவனம் நிலம் விவசாயிகளிடம் கையகப்படுத்துவதற்கு, பாமக வலுவான எதிர்ப்பை பதிவு செய்துள்ளது..

10 எஸ்பிக்கள்
தொடர்ந்து, என்எல்சி மற்றும் கடலூர் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து கடந்த 11-ம் தேதி, முழு அடைப்பு போராட்டத்தையும் பாமக அறிவித்தது.. இந்த போராட்டத்தின் பின்னணியில் அரசியல் காரணங்களும் இல்லாமல் இல்லை. கடலூர் மாவட்டத்தை பொறுத்தவரை பாமக வலுவாக உள்ள இடம் என்றாலும், விரைவில் எம்பி தேர்தல் வரஉள்ள நிலையில், அடுத்தக்கட்ட அதிரடியை பாமக துவங்கியுள்ளது.. அந்தவகையில், கடலூர் மாவட்டத்தில், இந்த முழு அடைப்பை வெற்றிகரமாக நடத்தி விட வேண்டும் என்ற முனைப்புடன் பாமக களமிறங்கியநிலையில், 2 டிஐஜி-க்கள், 10 எஸ்பி-க்கள் தலைமையில் போலீஸ் படையை திமுக அரசு குவித்துவிட்டது..

பிசுபிசுத்தது
இதனால் அந்த முழு அடைப்பு போராட்டமே பிசுபிசுத்து போய்விட்டதாக தெரிகிறது.. திமுக அரசை விமர்சிக்காமல், மென்மையான போக்கை கடைப்பிடித்தும்கூட, இப்படி செய்துவிட்டார்களே? என்ற வருத்தம் தைலாபுர தோட்டத்துக்கு இருக்கவே செய்கிறது என்கிறார்கள். அந்த வருத்தத்தில்தான், "மத்திய அரசை தொடர்ச்சியாக எதிர்த்து வரும் திமுக என்எல்சி விவகாரத்தில் மட்டும் மத்திய அரசுக்கு ஆதரவாக நிற்பது ஏன்?" என்று அன்று கேள்வி எழுப்பினாராம் அன்புமணி.. இதனிடையே, அதிமுக பொதுக்குழு வழக்கில், எடப்பாடிக்கு ஆதரவாக தீர்ப்பு வந்தபோது, முதல்நபராக அன்புமணி ராமதாஸ் வாழ்த்து சொல்லியிருந்தார்..

அறியாமை
எடப்பாடிக்கு அன்புமணியின் இந்த வாழ்த்தானது, பலரது புருவங்களையும் அப்போது உயர்த்திவிட்டு போனது.. அப்படியானால், அதிமுகவுடன் பாமக கூட்டணி வைக்க வாய்ப்புள்ளதோ? என்ற சந்தேகம் வட்டமடிக்க துவங்கியது. "திமுகவுடன் கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை எதுவும் நடத்தவில்லை என்று அன்புமணி ராமதாஸ் சில நாட்களுக்கு முன்பு தெளிவுபடுத்தியிருந்தார் என்றாலும், பாமகவின் மூத்த தலைவர் பாலு செய்தியாளர்களிடம் பேசும்போது, "2021-ம் ஆண்டு நடந்த 9 மாவட்டங்களுக்கான நகர்ப்புற உள்ளாட்சித்தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி இல்லை என முடிவெடுத்திருந்தோம். அந்த நிலைப்பாடு இப்போதும் தொடர்கிறது. அதிமுகவுடன் பாமக கூட்டணியில் இருப்பதாக சொல்வது அறியாமையால் ஏற்படும் சந்தேகம்.. நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து 3 மாதத்திற்கு முன்பு தான், முடிவெடுப்போம்" என்று கூறியிருந்தார்..

அச்சாரம்
இந்நிலையில், சமீபத்தில், என்எல்சி நிலம் கையகப்படுத்துவதற்கு எதிரான கருத்தரங்கம் நெய்வேலியில் நடந்தது.. இதில், அன்புமணி பேசும்போது, என்எல்சி விரிவாக்கத்திற்கு நிலம் கையகப்படுத்தும் விவகாரத்தில் திமுக அரசை கடுமையாக எதிர்த்திருந்தார்.. குறிப்பாக, "விவசாயத்துறை அமைச்சர், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கருத்தில் வைத்து பேச வேண்டும்" என்று அன்புமணி பேசியதை திமுக தரப்பு கவனிக்காமல் இல்லை.. இந்த பேச்சு, ஆளும்கட்சியினரிடம் அதிருப்தியையும் உருவாக்கி இருப்பதாகவும் சொல்கிறார்கள்.. ஆளும்கட்சியை பாமக வெளிப்படையாகவே விமர்சித்துள்ள நிலையில், அதிமுகவுடன் மீண்டும் கூட்டணியை புதுப்பிக்க பாமக அச்சாரம் போடுகிறதோ? என்ற சந்தேகமும் எழுந்துள்ளதாம்.. என்ன நடக்க போகிறது? தெரியவில்லை.. பார்ப்போம்..!!!

அச்சாரம்
இந்நிலையில், சமீபத்தில், என்எல்சி நிலம் கையகப்படுத்துவதற்கு எதிரான கருத்தரங்கம் நெய்வேலியில் நடந்தது.. இதில், அன்புமணி பேசும்போது, என்எல்சி விரிவாக்கத்திற்கு நிலம் கையகப்படுத்தும் விவகாரத்தில் திமுக அரசை கடுமையாக எதிர்த்திருந்தார்.. குறிப்பாக, "விவசாயத்துறை அமைச்சர், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கருத்தில் வைத்து பேச வேண்டும்" என்று அன்புமணி பேசியதை திமுக தரப்பு கவனிக்காமல் இல்லை.. இந்த பேச்சு, ஆளும்கட்சியினரிடம் அதிருப்தியையும் உருவாக்கி இருப்பதாகவும் சொல்கிறார்கள்..

ஹேப்பி திருமா
தொடர்ந்து ஆளும்கட்சியை பாமக வெளிப்படையாகவே விமர்சித்துள்ள நிலையில், அதிமுகவுடன் மீண்டும் கூட்டணியை புதுப்பிக்க பாமக அச்சாரம் போடுகிறதோ? என்ற சந்தேகமும் எழுந்துள்ளதாம்.. அதேசமயம், இதனால் விசிக தரப்பும் கூட்டணி விஷயத்தில் நிம்மதி அடைந்துள்ளதாக தெரிகிறது.. எனினும், தமிழகத்தில் 3வது அணி அமையக்கூடும் என்று அரசல்புரசலாக எழுந்துள்ளதால், யார் யாருடன் கூட்டணி வைக்க போகிறது என்பது, இனிமேல்தான் உறுதியாக தெரியவரும் என்கிறார்கள்.. என்ன நடக்க போகிறது? தெரியவில்லை.. பொறுத்திருந்து பார்ப்போம்..!!!












Click it and Unblock the Notifications