முதல்வர் ஸ்டாலினுக்கு எதிராக வழக்கு.. கோவை தொழில் அதிபருக்கு சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு
சென்னை: சென்னை மேம்பால முறைகேடு தொடர்பாக முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் பொன்முடிக்கு எதிராக பதியப்பட்ட வழக்கை, திமுக ஆட்சியில் திரும்ப பெற்றதை எதிர்த்து, கோவையை சேர்ந்த தொழிலதிபர் தொடர்ந்த வழக்கில் மனுதாரர் ரூ.1 லட்சம் டெபாசிட் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை மேம்பால முறைகேடு தொடர்பாக முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் பொன்முடிக்கு எதிராக வழக்குப்பதிய 2001 முதல் 2006 வரையிலான அதிமுக ஆட்சியில் அளிக்கப்பட்ட அனுமதியை 2006 முதல் 2021 வரையிலான திமுக ஆட்சியில் திரும்பப் பெறப்பட்டது. இதனை எதிர்த்து கோவையை சேர்ந்த தொழிலதிபரான மாணிக்கம் அத்தப்ப கவுண்டர், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

தனது மனுவில், மாணிக்கம் அத்தப்ப கவுண்டர் கூறுகையில், "கடந்த 1996-2001 திமுக ஆட்சிக்காலத்தில் சென்னையில் பல இடங்களில் மேம்பாலங்கள் கட்டப்பட்டன. இதில் ரூ.115 கோடி அளவுக்கு முறைகேடு நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக 2001-ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் முன்னாள் முதல்வர் கருணாநிதி, முன்னாள் மேயரும், தற்போதைய முதல்வருமான ஸ்டாலின், அமைச்சர் பொன்முடி, முன்னாள் அமைச்சர் கோ.சி.மணி ஆகியோருக்கு எதிராக ஊழல் வழக்கு பதிய அனுமதிவழங்கப்பட்டு, குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டது.
பின்னர், 2006-ம் ஆண்டு திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்ததும் ஸ்டாலின் உள்ளாட்சித்துறை அமைச்சராக பதவி வகித்தார். அப்போது ஸ்டாலின், பொன்முடி உள்ளிட்டோருக்கு எதிராக வழக்கு பதிய அனுமதி அளித்து, அதிமுக ஆட்சியில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவை திரும்ப பெறப்பட்டது. மேலும் அந்த வழக்கு கைவிடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இது முற்றிலும் சட்டத்துக்கு புறம்பானது.
சொத்துக்குவிப்பு வழக்குகளில் முன்னாள் அமைச்சர்கள் விடுவிக்கப்பட்டதற்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றம் தற்போது தாமாகமுன்வந்து வழக்குகளை விசாரணைக்கு எடுத்து விசாரித்து வருகிறது. கடந்த 2006-ம் ஆண்டு ஸ்டாலின், பொன்முடி உள்ளிட்டோருக்கு எதிரான வழக்கை திரும்பப் பெற திமுக ஆட்சியில் எடுக்கப்பட்ட நடவடிக்கை நீதித்துறை மீதான நம்பிக்கையை கேலிக்கூத்தாக்கி விடும்.
எனவே, இதுதொடர்பாக 2006-ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்து, தற்போதைய முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் பொன்முடி ஆகியோருக்கு எதிரான வழக்கை சம்பந்தப்பட்ட நீதிமன்றம் மீண்டும் விசாரிக்க உத்தரவிட வேண்டும்" இவ்வாறு மனுவில் மாணிக்கம்அத்தப்ப கவுண்டர் கோரியிருந்தார்.
இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி ஜெ.சத்யநாராயண பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வில் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது தலைமை நீதிபதி அமர்வு, வழக்கை தொடர்ந்துள்ள மனுதாரர் இந்த வழக்கின் மெய்த்தன்மையை நிரூபிக்கும் வகையில் ரூ.1 லட்சத்தை வரும் ஏப்.25-ம் தேதிக்குள் உயர் நீதிமன்றத்தில் டெபாசிட் செய்ய வேண்டும் என உத்தரவி்ட்டு விசாரணையை தள்ளி வைத்து உத்தரவிட்டது.
-
அதிமுக எம்எல்ஏக்கள் 4 பேர் ராஜினாமா.. குதிரை பேரமா? ஐகோர்ட் கேட்ட கேள்வி! தீர்ப்பு ஒத்திவைப்பு -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
அதிமுக 4 எம்எல்ஏக்கள் ராஜினாமா செல்லுமா? எடப்பாடி பழனிசாமி வழக்கு! சென்னை ஹைகோர்ட்டில் நாளை விசாரணை -
“கோட் போட்டு வந்தாரு.. டிபன் எடுத்து வந்தாரு.. நாட்டுல பல அக்கிரமம் நடக்குது” விஜய்யை சாடிய ஸ்டாலின் -
தோல்விக்கு காரணம் என்ன? ரிப்போர்ட்டை கண்டதும் உதயநிதி தந்த ரியாக்சன்.. ஸ்டாலினுக்கு போன மெசேஜ் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை












Click it and Unblock the Notifications