அதிமுக 4 எம்எல்ஏக்கள் ராஜினாமா செல்லுமா? எடப்பாடி பழனிசாமி வழக்கு! சென்னை ஹைகோர்ட்டில் நாளை விசாரணை
சென்னை: தமிழகத்தில் காலியாக உள்ள 4 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அறிவிப்புக்கு தடை விதிக்கக் கோரி அதிமுக தொடர்ந்துள்ள முக்கிய வழக்கு, நாளை சென்னை ஹைகோர்ட்டில் விசாரணைக்கு வருகிறது. தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களித்துவிட்டு ராஜினாமா செய்த 4 எம்எல்ஏக்களின் பதவி விலகலை சபாநாயகர் ஏற்றதை எதிர்த்து இந்த சட்டப் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. இந்த வழக்கின் இறுதித் தீர்ப்பைப் பொறுத்தே 4 தொகுதிகளின் தேர்தல் எதிர்காலம் அமையவுள்ளதால், அரசியல் களத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது...!!
தமிழக சட்டப்பேரவையில் தவெக அரசு கொண்டு வந்த பெரும்பான்மை வாக்கெடுப்பு விவகாரம் மற்றும் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமாவை தொடர்ந்து, காலியாக அறிவிக்கப்பட்ட 4 தொகுதிகளின் இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் அதிமுக சார்பில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கின் விசாரணையின்போது, தமிழக அரசியலின் அடுத்தகட்டத்தை மாற்றப்போகும் முக்கியமான சட்டப்பூர்வ தகவல்கள் நீதிமன்றத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியாகவுள்ளன.
தமிழக சட்டப்பேரவை - முதலமைச்சர் விஜய்
கடந்த மே மாதம் 13-ம் தேதி தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசு தங்களது மெஜாரிட்டியை நிரூபிப்பதற்கான வாக்கெடுப்பை நடத்தியது. இந்த வாக்கெடுப்பின்போது, அதிமுகவின் மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான சி.வி.சண்முகம் தலைமையில் 25 அதிமுக எம்.எல்.ஏ.க்கள், கட்சித் தலைமை மற்றும் கொறடாவின் உத்தரவை முழுமையாக மீறி தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களித்தார்கள்.
இந்த அதிரடி நடவடிக்கையை தொடர்ந்து, கொறடா உத்தரவை மீறி செயல்பட்ட அந்த 25 சட்டமன்ற உறுப்பினர்களுக்கு எதிராகவும் கட்சித்தாவல் தடைச்சட்டத்தின் கீழ் தகுதி நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி, சட்டப்பேரவைத் தலைவரிடம் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முறைப்படி மனு அளித்திருந்தார்.
4 எம்எல்ஏக்கள் ராஜினாமா
இந்த பரபரப்பான சூழ்நிலைக்கு நடுவே, தகுதி நீக்க நடவடிக்கை சபாநாயகரின் பரிசீலனையில் இருந்தபோதே, அதிமுக எம்.எல்.ஏ.க்களாக இருந்த மரகதம் குமரவேல் (மதுராந்தகம்), ஜெயக்குமார் (பெருந்துறை), சத்தியபாமா (தாராபுரம்) மற்றும் இசக்கி சுப்பையா (அம்பாசமுத்திரம்) ஆகிய 4 பேரும் தங்களது பதவிகளை திடீரென ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தனர்.
இவர்களின் ராஜினாமா கடிதங்களை சட்டப்பேரவைத் தலைவர் உடனடியாக ஏற்றுக்கொண்டார். தகுதி நீக்க நடவடிக்கை நிலுவையில் உள்ளபோதே, சபாநாயகர் இவர்களின் ராஜினாமாவை ஏற்றுக் கொண்டதை எதிர்த்து தேசிய மக்கள் சக்தி கட்சி சார்பில் அதன் தலைவர் எம்.எல்.ரவி சென்னை ஹைகோர்ட்டில் பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
தவெகவில் இணைந்த 4 எம்எல்ஏக்கள்
இந்த வழக்கு தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி மற்றும் நீதிபதி அருள் முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது அதிமுக முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் எஸ்.ஆர்.ராஜகோபால் நீதிமன்றத்தில் வலுவான வாதங்களை முன்வைத்தார். "தவெகவில் இணைந்த 4 எம்.எல்.ஏ.க்களும் அந்த கட்சியுடன் ஏற்கனவே திட்டமிட்டு பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். ராஜினாமா செய்த உடனேயே அவர்கள் தவெகவில் இணைந்துள்ளதால், இது திடீரென எடுத்த முடிவல்ல.
கொறடா உத்தரவு மீறல்?
இதில் தெளிவான அரசியல் சட்டவிதிகள் மீறப்பட்டுள்ளதால், ராஜினாமாவை ஏற்ற சபாநாயகரின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும். மேலும், இந்த 4 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் அறிவிப்பு வெளியிட இடைக்காலத் தடை விதிக்க வேண்டும்" என்று தெரிவித்து, தங்களது புதிய மனுவையும் இதனுடன் சேர்த்து விசாரிக்கக் கோரியிருந்தார்.
இதற்கு பதிலளித்து தமிழக அரசுத் தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண் நீதிமன்றத்தில் ஒரு முக்கிய தகவலைப் பகிர்ந்துகொண்டார்.
"கொறடா உத்தரவை மீறி தவெக அரசுக்கு வாக்களித்த 25 அதிமுக எம்.எல்.ஏ.க்களில், 21 பேர் தங்களது செயலுக்கு வருத்தம் தெரிவித்து கடிதம் அளித்தனர். அவர்களின் மன்னிப்பை ஏற்றுக்கொண்ட அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அவர்கள் 21 பேர் மீதான தகுதி நீக்க நடவடிக்கையைக் கைவிடுவதாக பேரவைத் தலைவருக்கு முறைப்படி கடிதம் அளித்துள்ளார். இதனால் அவர்கள் மீதான நடவடிக்கை கைவிடப்பட்டுள்ளது.
நாளை ஹைகோர்ட்டில் விசாரணை
அதேசமயம் ராஜினாமா செய்த 4 பேரும் தாமாக முன்வந்துதான் பதவி விலகியுள்ளனர். இருந்தாலும் தகுதி நீக்க நடவடிக்கை தொடர்பாக விளக்கம் கேட்டு அவர்களுக்கு சபாநாயகர் தரப்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. சட்டப்பேரவை விதிகளின்படி உரிய விசாரணை நடத்தப்பட்டு, அவர்களுக்கு எதிரான நடவடிக்கையில் இறுதி உத்தரவு பிறப்பிக்கப்படும்" என்று விளக்கமளித்தார்.
அதிமுக தரப்பின் சட்டப் பூர்வக் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், இந்த புதிய மனுவையும் பிரதான வழக்குடன் இணைத்து விசாரிக்க சம்மதித்தனர். மேலும் இந்த வழக்குகளின் அடுத்தகட்ட விசாரணையை ஜூன் 17-ம் தேதிக்கு அதாவது நாளைக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டனர். வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதால், இந்த 4 தொகுதிகளின் இடைத்தேர்தல் நடக்குமா இல்லையா என்பதை நாளை நீதிமன்றம் அளிக்கும் தீர்ப்பே தீர்மானிக்கும்...!!
-
தீர்ந்து போன சக்தியிடம் திருடிய காஞ்சு போன சக்தி.. விமர்சித்த ஸ்டாலின்.. தவெக கொடுத்த பதிலடி -
4 தொகுதிகள் இடைத்தேர்தல் அறிவிப்புக்கு தடை கோரி வழக்கு.. ராஜினாமா செய்த எம்.எல்.ஏக்களுக்கு சிக்கல்! -
3வது இடம்.. 2026ல் மண்ணைக் கவ்விய அதிமுக! தோல்விக்கு என்ன காரணம்? உங்க கருத்தை சொல்லுங்க மக்களே! -
பெரிய புள்ளியாச்சே அவரு! துரோகி பட்டம்.. எடப்பாடியால் வேதனையில் வேலுமணி! அண்ணாமலையுடன் ஐக்கியம்? -
கருகுது இரட்டை இலை.. விஜய் வைத்த டார்கெட்! வலைவிரித்துக் காத்திருக்கும் தவெக! சிக்கும் திமிங்கலம்? -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
“தவெகவிடம் ரூ.50 கோடி வாங்கினேனா? தைரியம் இருந்தா ரெய்டு விடுங்க” - மரகதம் குமரவேல் சவால்! -
ஆபரேஷன் இரட்டை இலை.. மாவட்ட வாரியாக அதிமுக தொண்டர்களை இழுக்கும் தவெக.. பனையூர் வியூகம்! -
தவெகவில் பனிப்போர்.. உழைத்தது நாங்க.. பவர் அவங்களுக்கா? மாவட்ட செயலாளர்கள் vs எம்எல்ஏக்கள் முட்டல்! -
எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்.. சிவி சண்முகத்தை அடுத்து சி. விஜயபாஸ்கரும் பரபர ட்வீட் பதிவு -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
"கரண்ட் போனால் என்ன? விஜய்யை கேட்டா வந்துருமா?" என் வீட்டுல இருக்கு! வினோதமாக பேசிய மாஸ்டர் மகேந்திரன்












Click it and Unblock the Notifications