சிக்கலில் வடசென்னை பாஜக வேட்பாளர்.. பால் கனகராஜ் மீது வழக்குப்பதிவு! திமுக கோட்டை தகர்க்கப்படுமா?
சென்னை: வடசென்னை பாஜக வேட்பாளர் பால் கனகராஜ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தேர்தல் அதிகாரி கொடுத்த புகாரின் பேரில் பால் கனகராஜ் மீது 3 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மக்களவை தேர்தல் தேதி கடந்த மார்ச் 16ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. அதன்படி ஏப்ரல் 19-ம் தேதி ஒரே கட்டமாக தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. எனவே அனைத்து கட்சிகளும் கூட்டணி பேச்சுவார்த்தை மற்றும் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து, வேட்பாளர்கள் பட்டியலை அறிவித்து உள்ளன. காங்கிரஸ் கட்சி தமிழ்நாட்டில் போட்டியிடும் 9 தொகுதிகளில் 7 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது.

பாஜக வேட்பாளர்கள்: பாஜக அண்மையில் வேட்பாளர்களை அறிவித்தது. பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கோவையிலும், தென்சென்னையில் தமிழிசை சவுந்தரராஜன், மத்திய சென்னையில் வினோத் பி செல்வம், கன்னியாகுமரியில் பொன். ராதாகிருஷ்ணன், திருநெல்வேலியில் நயினார் நாகேந்திரன், நீலகிரியில் எல்.முருகன், வேலூரில் ஏ.சி.சண்முகம், பெரம்பலூரில் பாரிவேந்தர், கிருஷ்ணகிரியில் நரசிம்மன் உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர்.
அதேபோல,
திருவள்ளூர் - பாலகணபதி
வடசென்னை - பால் கனகராஜ்
திருவண்ணாமலை - அஸ்வத்தாமன்
நாமக்கல் - கே.பி.ராமலிங்கம்
திருப்பூர் - முருகானந்தம்
பொள்ளாச்சி - வசந்தராஜன்
கரூர் - செந்தில்நாதன்
சிதம்பரம் - கார்த்தியாயினி
நாகை - எஸ்.ஜி.எம்.ரமேஷ்
தஞ்சை - எம்.முருகானந்தம்
சிவகங்கை - தேவநாதன் யாதவ்
மதுரை - ராம சீனிவாசன்
விருதுநகர் - ராதிகா சரத்குமார்
தென்காசி - ஜான் பாண்டியன்
புதுச்சேரி - நமச்சிவாயம்
ஆகியோர் பாஜக சார்பில் போட்டியிடுகின்றனர்.
வடசென்னை: வடசென்னை மக்களவை தொகுதியில், திருவொற்றியூர், ராதாகிருஷ்ணன் நகர் (ஆர்.கே நகர்), பெரம்பூர், கொளத்தூர், திரு.வி.க நகர், இராயபுரம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. ஒட்டுமொத்த சென்னையும் தி.மு.கவின் கோட்டை என்று கூறப்படும் நிலையில், அதிலும் குறிப்பாக வடசென்னை தி.மு.கவின் உறுதியான கோட்டையாகவே திகழ்ந்து வருகிறது. இதுவரை இந்தத் தொகுதியில் 16 முறை தேர்தல் நடந்துள்ள நிலையில், அதில் 11 முறை திமுக நேரடியாக போட்டியிட்டு வென்றுள்ளது.
திமுக கோட்டை: இதில் இரண்டு தேர்தல்கள் திமுக தோன்றுவதற்கு முன் நடந்தவை, அப்படி பார்த்தால் 14 தேர்தல்களில் 11 முறை தி.மு.க வென்று, தொகுதியில் அசைக்க முடியாத சக்தியாக உள்ளது. எம்.ஜி.ஆராலும் தி.மு.கவை வீழ்த்த முடியாத தொகுதியாக வடசென்னை இருந்துள்ளது. 2014 தேர்தலில் தான் முதன்முறையாக இந்தத் தொகுதியில் அதிமுக வெற்றி பெற்றது.
அ.தி.மு.க தமிழகம் முழுவதும் 37 தொகுதிகளில் வெற்றி பெற்ற 2014 தேர்தலில் தான் முதல் முறையாக வடசென்னை தொகுதியில் வென்றுள்ளது. பின்னர் 2019 தேர்தலில் தொகுதியை மீண்டும் திமுக கைப்பற்றியது. இந்தத் தேர்தலில் தி.மு.க சார்பில் முன்னாள் அமைச்சரும், மூத்த தி.மு.க தலைவருமான ஆற்காடு வீராசாமியின் மகன் டாக்டர் கலாநிதி வீராசாமி களமிறங்கினார். அ.தி.மு.க கூட்டணியில் தே.மு.தி.க வேட்பாளர் மோகன் ராஜை விட 4 லட்சத்து 61 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார் கலாநிதி வீராசாமி.
நேருக்கு நேர்: தி.மு.க கூட்டணியில் இந்த முறையும் தி.மு.கவே களமிறங்கியுள்ளது. மீண்டும் கலாநிதி வீராசாமிக்கே திமுகவில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதிமுக இந்த முறை நேரடியாக போட்டியிடுகிறது. அதிமுக சார்பில் ராயபுரம் மனோ போட்டியிடுகிறார். பாஜக சார்பில் வழக்கறிஞர் பால் கனகராஜ் இங்கு களமிறங்கியுள்ளார். பாஜக - அதிமுக - திமுக நேருக்கு நேர் போட்டியிடும் தொகுதியாக உள்ளது வடசென்னை. 3 கட்சிகளுமே வடசென்னையில் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தி உள்ளன.
பால் கனகராஜ் மீது வழக்குப்பதிவு: இந்நிலையில், வடசென்னை தொகுதி பா.ஜ.க வேட்பாளர் பால் கனகராஜ் மீது 3 பிரிவுகளின் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. வடசென்னை தொகுதி பா.ஜ.க வேட்பாளர் பால் கனகராஜ் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. முறையான அனுமதி இன்றி திருமண மண்டபத்தில் கூட்டம் நடத்தியதாக தேர்தல் அதிகாரி கொடுத்த புகாரின் பேரில் தண்டையார்பேட்டை போலீசார் பால் கனகராஜ் மீது 3 பிரிவுகள் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
-
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே!












Click it and Unblock the Notifications