“இயற்கைக்கு மாறான மரணம்”.. சென்னை மெரினாவில் 5 பேர் பலி தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு!
சென்னை: சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்ற விமான சாகச நிகழ்ச்சியை பார்க்க வந்த 5 பேர் உயிரிழந்தது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அண்ணா சதுக்கம் காவல் நிலையம், திருவல்லிக்கேணி, மயிலாப்பூர், மெரினா காவல் நிலையங்களில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 5 பேர் உயிரிழப்பு குறித்து இயற்கைக்கு மாறான மரணம் என்ற பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை மெரினா கடற்கரையில், 92வது விமானப்படை தின நிறைவை முன்னிட்டு, இந்திய விமானப்படை சார்பாக வான் சாகச நிகழ்ச்சி நேற்று முன்தினம் (அக்டோபர் 6) நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சி காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை நடந்தது. இதை காண 15 லட்சத்திற்கு மேற்பட்டோர் மெரினாவில் கூடினர். இதனால் கடுமையான கூட்ட நெரிசல் ஏற்பட்டது.

அதே நேரத்தில் சென்னையில் காலை முதலே வெப்பநிலை அதிக அளவில் இருந்ததால், விமான சாகசங்களை காண வந்த மக்கள் வெயிலின் தாக்கத்தால் கடும் அவதிக்கு உள்ளாகினர். கடும் வெப்பத்தாலும், கூட்ட நெரிசலாலும் 90 க்கும் மேற்பட்ட நபர்கள் நீர்ச்சத்து குறைபாடு ஏற்பட்டு ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை, ஓமந்தூரார் மருத்துவமனை, ராயப்பேட்டை அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றனர்.
மெரினா கடற்கரைக்கு விமான சாகச நிகழ்ச்சியை காண வந்த சென்னை கொருக்குப்பேட்டை பகுதியைச் சேர்ந்த ஜான் (56) மற்றும் பெருங்களத்தூர் பகுதியை சேர்ந்த சீனிவாசன் (48) ஆகியோர் மயக்கமடைந்து கீழே விழுந்தனர். இவர்கள் இருவரையும் அருகில் உள்ள ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் இருவரும் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.
சென்னை மடுவங்கவரை பகுதியைச் சேர்ந்த தினேஷ் (41) மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த மணி (59) ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படும்போதே உயிரிழந்தனர். சென்னை திருவொற்றியூர் பகுதி சேர்ந்த கார்த்திகேயன் (34) என்பவர் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் இருசக்கர வாகனத்தில் மெரினா கடற்கரையில் நடைபெற்ற விமான சாகச நிகழ்ச்சியை பார்க்க வந்தார்.
சாகச நிகழ்ச்சி முடிந்து வீடு திரும்பும் போது மனைவி, குழந்தையை ஓரிடத்தில் இருக்க சொல்லிவிட்டு வாகனத்தை எடுத்துவர அவர் மட்டும் சென்றுள்ளார். பின்னர் வாகனத்தை எடுத்துக்கொண்டு திரும்பியவர் திடீரென நெஞ்சை பிடித்துக் கொண்டு வாந்தி எடுத்து மயங்கியுள்ளார். அவரை 108 ஆம்புலன்ஸில் கொண்டு சென்று ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். மருத்துவர்கள் அவரை பரிசோதித்து பார்த்தபோது கார்த்திகேயன் இறந்துவிட்டார்.
சென்னை மெரினாவில் நடைபெற்ற விமான வான்வழி சாகச நிகழ்ச்சியை காண வந்த லட்சக்கணக்கான நபர்களில் 5 பேர் கடும் வெப்பத்தால் நீர்ச்சத்து குறைந்து உடல்நலம் பாதித்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. உயிரிழந்த 5 நபர்களின் உடல்களும் பிரதே பரிசோதனை செய்யப்பட்டு அவரவர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்நிலையில், விமான சாகச நிகழ்ச்சியை பார்க்க வந்த 5 பேர் உயிரிழந்தது குறித்து காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. அண்ணா சதுக்கம் காவல்நிலையம், திருவல்லிக்கேணி, மயிலாப்பூர், மெரினா காவல் நிலையங்களில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. 5 பேர் உயிரிழப்பு குறித்து இயற்கைக்கு மாறான மரணம் என்ற பிரிவின் கீழ் தனித்தனியாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
-
பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் அதிகாரி வேலை.. இன்னும் 2 நாட்கள் தான் இருக்கு! உடனே விண்ணப்பிங்க -
தங்கம் மீண்டும் ரூ.10,000? மக்கள் அனைவருக்கும் உள்ள கேள்வி.. ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் நறுக் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
10 கோடி வீட்டை 100 கோடிக்கு விற்ற நடிகை மீனா.. சென்னையில் நில மதிப்பு ராக்கெட் போல் உயர்ந்த இடங்கள் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம்












Click it and Unblock the Notifications