விஜய் கூட புகார் கொடுத்தாரே.. தவெக பெண் நிர்வாகிகள் குறித்து பேசிய பொன்ராஜ் மீது வழக்குப்பதிவு!
சென்னை: பெண்களைப் பற்றி அவதூறாக பேசிய புகாரில் சென்னை மற்றும் கடலூர் புதுநகர் காவல் நிலையத்தில் அரசியல் விமர்சகரும், முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் ஆலோசகருமான பொன்ராஜ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
அரசியல் விமர்சகராகவும், ஊடக விவாதங்களில் திமுக ஆதரவு பேச்சாளராகவும் அறியப்படுபவர் பொன்ராஜ். இந்திய ஜனநாயக மீட்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளராகவும், அப்துல்கலாம் விஷன் இந்தியா மூவ்மெண்ட் இயக்கத்தின் நிர்வாகியாகவும் செயல்பட்டு வருகிறார். நடைபெற்று முடிந்த சட்டசபை தேர்தலுக்கு முன்பாக இவர், தவெகவின் பெண் தொண்டர்கள் பற்றி அவதூறாகவும், சர்ச்சைக்குரிய வகையிலும் பேசியதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது.

இதுகுறித்து, சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக, சென்னை டிஜிபி அலுவலகத்தில் தவெக தலைவர் விஜய் நேரில் சென்று புகார் அளித்தார். பொன்ராஜ் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கோரியிருந்தார். அத்துடன் பொன்ராஜுக்கு கடும் கண்டனம் தெரிவித்து அறிக்கையும் விஜய் வெளியிட்டிருந்தார். இதையடுத்து, தனது பேச்சு தவறாக புரிந்து கொள்ளப்பட்டதாக கூறி பொன்ராஜ் மன்னிப்பும் கோரினார்.
அதேநேரத்தில், தவெகவினர் தமக்கு கொலை மிரட்டல் விடுப்பதாக கூறி, விஜய் மீது பொன்ராஜ் சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்தார். இந்நிலையில், தவெக பெண் தொண்டர்கள் பற்றி அவதூறாக பேசியதாக பொன்ராஜ் மீது தவெக நிர்வாகிகள் புகார் அளித்து இருந்தனர்.
பெண்களைப் பொதுவெளியில் கொச்சைப்படுத்திப் பேசியதாக பொன்ராஜ் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, கடலூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், தவெக கிழக்கு மாவட்டச் செயலாளருமான ராஜ்குமார், கடலூர் புதுநகர் காவல் நிலையத்தில் அதிகாரப்பூர்வமாகப் புகார் மனு ஒன்றை அளித்தார்.
இந்நிலையில்,பெண்களை இழிவுபடுத்தும் வகையில் அவதூறாகப் பேசிய குற்றத்திற்காக கடலூர் புதுநகர் காவல் நிலையத்தில் பொன்ராஜ் மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. இதேபோல சென்னையிலும் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.
-
விஜய் வந்தும் வேலைக்கு ஆகல! சர்ச்சையை கிளப்பும் சட்டம் ஒழுங்கு.. டிஜிபி அதிரடி உத்தரவு! -
இது ட்ரெய்லர் தான்.. அதிமுகவுக்கு தவெக எழுதப்போகும் கிளைமாக்ஸ்.. அருண்ராஜ் அதிரடி -
தவெகவில் இணைந்த ஜாய் கிரிசில்டா.. பெண்களுக்காக குரல் கொடுக்கவே அரசியலுக்கு வந்ததாக பேட்டி! -
வாழ்க்கை ஒரு வட்டம் சார்.. தவெகவில் இணைந்த கடம்பூர் ராஜூ.. தவெக தொண்டர்களின் மீம்ஸ்! -
கள்ளச்சாராயம் ஒழிக்க தனிப்படை.. கள்ளக்குறிச்சியில் விஜய் அரங்கேற்றும் மாற்றம்.. ஆதவ் அர்ஜுனா சர்ப்ரைஸ் -
கஜானாவுக்கு வரும் 1200 கோடி.. பார்ட்டி ஃபண்டில் கைவைத்த விஜய்! இனி டாஸ்மாக் கல்லா கட்டுமே! சூப்பர்! -
Perambur Power Cut: பவர் இல்லை சிஎம்! பெரம்பூர் பகுதியில் 3 நாட்களாக தொடர் மின்வெட்டு! தூக்கத்தை தொலைத்த மக்கள் -
முதல்வர் விஜய் போட்ட அதிரடி உத்தரவு.. தமிழ்நாடு முழுக்க போன ஆர்டர்.. கிராமங்களுக்கு விடிவுகாலம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இரக்கமே காட்டாதீங்க.. கேஸை போடுங்க.. திமுக மாஜி அமைச்சர்களுக்கு விஜய் செக்.. வரிசையாக ஆக்சன் -
விஜய் Vs உதய் Vs அண்ணாமலை? திராவிடக் கடப்பாரைகளை வளைத்த Gen Z! இளைஞர்களால் மாறும் அரசியல் களம்! -
விஜய் வென்றதும் மக்கள் மீது திடீர் பாசமா? லதா ரஜினிகாந்தின் புதிய இயக்கத்தை சீண்டிய ப்ளூ சட்டை மாறன்











Click it and Unblock the Notifications