கே.சி. வீரமணியிடம் ரெய்டு.. தகதக நகைகள்.. மின்னும் கார்கள்.. கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் சரிபார்ப்பு
கேசி வீரமணியிடம் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு வருகின்றன
சென்னை: முன்னாள் அமைச்சர் கேசி வீரமணிக்கு சொந்தமான 35 இடங்களில் பறிமுதல் செய்த ஆவணங்களை சரிபார்க்கும் பணிகள் துவங்கி உள்ளன.. பறிமுதல் செய்த 5 கிலோ தங்கம், 7 கிலோ வெள்ளி, வைரம் போன்றவற்றை லஞ்சஒழிப்பு போலீசார் சரிபார்க்கின்றனர்.
Recommended Video
அதிமுக ஆட்சியில் வணிகவரித் துறை அமைச்சராக இருந்த கேசி வீரமணி மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார் எழுந்தது...
அதாவது, 2011ல் அவரது சொத்து மதிப்பு 7 கோடியாக இருந்த நிலையில், இது பிறகு 90 கோடியாக உயர்ந்து விட்டதாக கூறப்பட்டது..

அதிரடிகள்
இதையடுத்து, வீரமணி வீடு உள்ளிட்ட 35 இடங்களில் நேற்றைய தினம் திடீர் சோதனை நடந்தது.. அறப்போர் இயக்கத்தின் புகாரின் பேரில் அவரது வீடு, சொந்தக்காரர்கள் வீடு, ஹோட்டல் ஹில்ஸ் உள்ளிட்ட 35 இடங்களில் அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்... அப்போது, முக்கிய ஆவணங்கள், பணம், நகைகள், கார்கள் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டது.

ஆவணங்கள்
34.01 லட்ச ரூபாய் பணம், ஒரு லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் அன்னிய செலாவணி டாலர், 4,987 கிலோ மதிப்பில் 623 சவரன் தங்க நகைகள், 47 கிராம் வைர நகைகள், 7.2 கிலோ வெள்ளி, வங்கிக் கணக்கு மற்றும் புத்தகங்கள் முக்கிய ஆவணங்கள், ரோல்ஸ் ராய்ஸ் உட்பட 9 சொகுசு கார்கள், கணினிகளின் ஹார்ட் டிஸ்க்குகள், சொத்துக்கள் சம்பந்தப்பட்ட முக்கிய ஆவணங்கள், கண்டறியப்பட்டன.. இதைதவிர, 30 லட்ச ரூபாய் மதிப்பில் 275 யூனிட் மணலை தனது வீட்டில் அமைச்சர் பதுக்கி வைத்திருந்ததும் கண்டறியப்பட்டதாக லஞ்ச ஒழிப்பு துறை தரப்பில் கூறப்பட்டது.

விளக்கம்
ஆனால் சோதனை முடிந்து அதிகாரிகள் சென்றபிறகு, செய்தியாளர்களிடம் வீரமணி பேசினார்.. அப்போது, நேரத்தை வீணடித்து அரசியல் விளம்பரம் தேட செய்யப்பட்டதுதான் இந்த சோதனை... ஆனால், அடிமட்ட உறுப்பினர்கள் வீட்டில் சோதனை நடத்துவது இதுவரை அரசியல் வரலாற்றில் இல்லை... சோதனை என்ற பெயரில் அரசியல் காழ்ப்புணர்ச்சி இது.. நடந்த சோதனையில் அவர்களுக்கு எந்தவித ஆதாரமும் கிடைக்காமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றிருக்கிறார்கள்... இந்த மாதிரி ரெய்டெல்லாம் நாங்கள் கடந்த காலங்களிலேயே கடந்து வந்தவர்கள்தான்.. இந்த ரெய்டுக்கான பதிலை உள்ளாட்சி தேர்தலில் நிரூபித்து காட்டுவோம்" என்றார்.

மதிப்பீடுகள்
சோதனையில் எதுவுமே கிடைக்காமல் அதிகாரிகள் திரும்பி சென்றதாக வீரமணி தெரிவித்திருந்த நிலையில், நேற்றைய தினம் பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்களை சரி பார்க்கும் பணி இன்று துவங்கி உள்ளது.. 35 இடங்களில் நடந்த சோதனையில் பறிமுதல் செய்த ஆவணங்களை லஞ்சஒழிப்பு போலீசார் சரிபார்க்கின்றனர். 5 கிலோ தங்கம், 7 கிலோ வெள்ளி, வைரம் போன்றவற்றையும் மதிப்பீடு செய்து வருகின்றனர்.

பரபரப்பு
இவைகளின் மொத்த பணமதிப்பீட்டு எவ்வளவு என்ற ஆய்வும் நடக்கிறது.. தங்கம், வைரம், வெள்ளி நகைகள் எல்லாம் எப்போது வாங்கப்பட்டவை, அதற்கு உரிய ஆவணங்கள் முறையாக இருக்கிறதா? என்பது குறித்தும் சரிபார்க்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த பணி முடிந்த பிறகுதான், அடுத்தக்கட்ட நகர்வு என்ன என்பது தெரியவரும் என்கிறார்கள். இதனால் அதிமுக வட்டாரத்தில் பரபரப்பு கவ்வி உள்ளது.
-
SC/ST நிதி வேறு துறைகளுக்கு மாற்றப்பட்டதா? அது வெறும் அவதூறு.. அமைச்சர் வன்னி அரசு விளக்கம்! -
வைகோ வருத்தப்பட போறாரு.. நிர்வாகிகளை தட்டித் தூக்கும் திமுக! ஆர்டர் போட்ட ஸ்டாலின்! துரை தான் பாவம்! -
ஸ்டாலின் அதிரடி மாற்றம்.. இனி இவங்க யாருமே வேண்டாம்.. கொத்தாக தூக்கப்படும் பெரிய மீன்கள்! -
ஒரு மேயர் பதவியையாவது ஜெயிச்சு பாருங்க..நான் என் ஒரு பக்க மீசையை எடுத்துக்குறேன்! ஆர்எஸ் பாரதி சவால் -
ஒதுங்கும் துரைமுருகன்.. திமுகவின் புதிய பொதுச்செயலாளராகிறாரா ஆ.ராசா? உதயநிதி ஸ்டாலினும் ஆதரவாம்! -
“தனது தலையில் தானே மண் அள்ளிப் போட்டுக் கொண்டுள்ளார் ராகுல்..” முரசொலி சரமாரி விமர்சனம்! -
உதயநிதியின் தவறுக்கான தண்டனைதான்.. திமுகவின் தோல்வி! ராகுல் காந்தியை இழுக்காதீங்க - மாணிக்கம் தாகூர் -
கதறி அழுத சத்யராஜ்.. "கொளத்தூரில் ஸ்டாலின் ஜெயிச்சு இருக்கணும்.." பேசவே முடியாமல் கண்ணீர்! -
7 நாட்கள் 7 அறிக்கைகள்.. விஜய்யின் தூக்கத்தை கெடுக்கும் திமுக.. சொல்ல வருவது ஒரே மேட்டர் தான் -
ஸ்டாலின் தோற்றது விஜய்க்கு வருத்தமளித்திருக்கலாம்! ஓபனாக பேசிய ப.சிதம்பரம்! -
அதிசயத்த பாருங்களேன்.. ஜெயா டிவில ஸ்டாலின் லைவ்! வெளியேறிய விவேக்! உள்ளே வந்த திவாகரன்! பெரிய சேஞ்ச் -
"தவெக ஆட்சி 6 மாதம் இல்லை.. 3 மாதமாவது தாங்குமா?" - முன்னாள் முதல்வர் ஸ்டாலின் விமர்சனம்












Click it and Unblock the Notifications