மாரி செல்வராஜ் மீது ’வசைமாரி’பொழியும்’ நெட்டீசன்ஸ்.. உதவி செய்தது தப்பா?
சென்னை: தென்மாவட்டங்களில் கொட்டிய கனமழை ஓய்ந்துவிட்டது. ஆனால், சமூகவலைத்தளத்தில் மழையை முன்வைத்து நடக்கும் அரசியல் சண்டை உச்சத்தைத் தொட்டு இருக்கிறது.
தூத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட 4 தென்மாவட்ட மக்கள் மழை வெள்ளத்தில் தத்தளித்துக் கொண்டிருக்கின்றனர். பல ஆயிரக்கணக்கானவர்கள் இருக்க வீடு இல்லாமல் வீதிக்கு வந்துள்ளனர். பலர் தங்களின் உடைமைகளை முழுவதுமாக இழந்து நிர்க்கதியாக நிற்கின்றனர்.

மழை வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் மக்களை மீட்பதற்காக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட அமைச்சர்கள் களத்திற்குச் சென்று மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அதனடிப்படையில் கடந்த இரண்டு தினங்கள் முன்னதாக அமைச்சர் உதயநிதி, அவரது எக்ஸ் தளத்தில் நடு இரவில் மீட்புப் பணியில் ஈடுபட்டு வரும் நிழற்படங்களை வெளியிட்டிருந்தார்.
அதில், "தென் மாவட்டங்களில் பெய்த கடும் மழை காரணமாகத் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த சூழலில் தாமிரபரணி ஆற்றின் கால்வாயின் கரையிலிருந்து வெளியேறிய தண்ணீரால் பாதிக்கப்பட்டுள்ள தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூர் தூதுகுழி கிராமத்தில் இன்று நேரில் ஆய்வு செய்தோம். மேலும், அந்த கிராமத்து மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் - உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்கிடவும் அதிகாரிகள் - அலுவலர்களிடம் வலியுறுத்தினோம்" என்று தெரிவித்திருந்தார்.
அதே நாளில் இயக்குநர் மாரி செல்வராஜ், அவரது எக்ஸ் பக்கத்தில், "கருங்குளம் பஸ் ஸடாப் அருகே இரண்டு நாட்களாகச் சிக்கியிருந்தவர்கள் மீட்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் ... இப்போது வரை பத்து பேர் மீட்கப்பட்டிருக்கிறார்கள் ... எல்லாரும் நிச்சயமாய் மீட்கப்படுவார்கள் .உறவினர்கள் அச்சப்படவேண்டாம்" என்று ஒரு பதிவை வெளியிட்டிருந்தார்.

உதயநிதியின் பதிவில் அவருடன் திரைப்பட இயக்குநர் மாரி செல்வராஜும் உடன் நின்றிருந்த படங்கள் வெளியிடப்பட்டிருந்தன. அதைப் பார்த்தா பாஜக தரப்பினர், 'இவருக்கு என்ன அங்கு வேலை ?' என்ற தொனியில் கேள்வியை முன்வைக்க ஆரம்பித்தனர்.
அதைத் தாண்டி அரசு அதிகாரிகளுக்கு சினிமா இயக்குநர் என்ன உத்தரவு போடுகிறாரா? என்ற கோணத்திலும் விமர்சிக்கத் தொடங்கினர். மேலும் பலர் அமைச்சர்கள் சொன்னதால் உதயநிதி தூத்துக்குடிக்குச் செல்லவில்லை. அவரது இயக்குநர் சொன்னதால்தான் சென்றுள்ளார் என்றும் பேசத் தொடங்கினர்.
இதே பதிவில் சிலர் மிகத் தரக்குறைவாக மாரி செல்வராஜின் சமூக பின்புலத்தைக் குறிப்பிட்டு சிலர் விமர்சிக்கத் தொடங்கினர்.
இவ்வாறு கடந்த இரண்டு நாள்களாக மழை வெள்ளத்திலிருந்து மக்களை மீட்கச் சென்ற மாரி செல்வராஜ் ட்ரோல் கண்டெண்ட் ஆக்கப்பட்டார். தனது சொந்த ஊர் மக்களை மீட்பதற்காகச் சென்ற அவரை, 'அங்கே என்ன உனக்கு வேலை?' என்று கேள்வி எழுப்புவதில் எந்த லாஜிக்கும் இல்லை என்பது அவரது ஆதரவாளர்களால் முன்வைக்கப்பட்டு வந்தது. நடிகர் விஷாலைப் போல் வீட்டுக்குள் உட்கார்ந்து அழாமல், அவர் களத்தில் நிற்கிறார். அதில் என்ன தவறு என்றும் பலர் கேள்வி கேட்டிருந்தனர்.

இயக்குநர் மாரி செல்வராஜ் வெள்ள மீட்புப் பணிகள் தொடர்பாக ஒரு தனியார் தொலைக்காட்சிக்குப் பேட்டி அளிக்கும் காணொளியை ரீ ட்வீட் செய்த அரசியல் விமர்சகர் சுமந்த் சி ராமன், " உதயநிதியுடன் நிவாரண ஆய்வுகளின் போது நேற்றிரவு முதல் இந்த மனிதர் (மாரி செல்வராஜ்) பேட்டி கொடுப்பதையும், உடன் நிற்பதையும் பார்க்கிறேன். அவர் ஏதேனும் அரசு நிறுவனத்தில் வேலை செய்கிறாரா? " என்று கேள்வி எழுப்பி இருந்தார்.
மேலும் மற்றொரு பதிவில், "அவர் உதவுவதை யாரும் கேள்வி கேட்கவில்லை. ஏன் அமைச்சருடன் நின்று , அரசு அதிகாரிகளுடன் ஆய்வு செய்கிறா என்றுதான் கேள்வி" என்றும் கூறியிருந்தார்.
இப்படி மாரி செல்வராஜை வைத்து திமுக Vs பாஜக பிரிவினருக்கு இடையே கடும் வார்த்தை மோதல் சமூகவலைத்தளத்தை இரண்டு நாள்களாக ஆக்கிரமிக்கத் தொடங்கினர். அதற்குப் பதிலளிக்கும் விதமாக இன்று மாரி செல்வராஜ், ""என் கலையும் கடமையும் நான் யார் என்று நிரூபிப்பது அல்ல ...நீங்கள் யாரென்று உங்களுக்கு நிரூபிப்பது" என்று ஒரு பதிவில் பதிலளித்துள்ளார்.

அவருக்கு ஆதரவாக விசிக சட்டமன்ற உறுப்பினர் ஆளூர் ஷாநவாஸ், "வீட்டுக்கு வெளியே தண்ணீர் தேங்கிவிட்டது என்று, வீட்டுக்குள் இருந்து கொண்டே வீடியோ வெளியிட்ட விஷால் போராளி ஆக்கப்பட்டார். ஊரே வெள்ளத்தில் மூழ்கி விட்டது என்று களத்திற்குச் சென்று உதவிய மாரி செல்வராஜ் கோமாளியாகச் சித்தரிக்கப்படுகிறார். வெறுப்பு அரசியல்!" என்று தெரிவித்திருக்கிறார்
அமைச்சர் உதயநிதி இயக்குநர் மாரி செல்வராஜ் அழைப்பினால்தான் களத்திற்குச் சென்றார் என்ற வாதம் தொடர்பாக ஒரு விளக்கத்தை திமுக பொறியாளர் அணியைச் சேர்ந்த எஸ்.கே.பி.கருணா முன்வைத்திருக்கிறார்.
அதில் அவர், "இயக்குநர் மாரி செல்வராஜ் குடும்பம் சொந்த ஊரில் வெள்ளத்தில் சிக்கிக் கொண்டிருக்கிறது. அவரது தந்தை வேறொரு ஊரில் சிக்கியுள்ளார். திருநெல்வேலியிலிருந்த மாரி செல்வராஜ் அவரது சொந்த ஊர் மக்களை மீட்க அமைச்சர் உதயநிதியிடம் உதவியைக் கோருகிறார்.

அப்போது நெல்லையை நெருங்கிக் கொண்டிருந்த அமைச்சர், நீங்க அங்கேயே இருங்க. கலெக்டரை சந்தித்து விட்டு நாங்கள் அங்கே வருகிறோம் எனச் சொல்லி விட்டு இரவில் அந்த இடத்துக்குச் சென்றுள்ளார். ஆற்றில் நீரோட்டம் மிக அதிகமாக இருப்பதாலும், அன்று இரவும் கனமழை வரும் என்பதாலும் மீட்புப்பணி இப்போது சாத்தியமில்லை என்பதை அறிந்து கொள்கின்றனர்.
நாளை காலையில் நிலைமையைப் பார்த்து விட்டு பிறகு முடிவு செய்யலாம் என மாரியிடம் சொல்லி விட்டு அமைச்சர் அடுத்த இடத்துக்குப் புறப்படுகிறார்.
ஒரு புகைப்படத்தை வைத்துக் கொண்டு என்னென்ன கதைகளைக் கட்டினாலும் இதுதான் உண்மை என்பதை அங்கிருந்த ஓராயிரம் பேர்கள் அறிவார்கள்.
சரி! அதெல்லாம் இருக்கட்டும்.

வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட அந்த மக்கள் இதை எப்படி உணர்வார்கள்?
பெரிய சினிமா டைரக்டரா இருந்தாலும் நம்மூர் பையன் நமக்குக் கஷ்டம் வரும்போது ஓடி வந்து நிற்கிறான் என்பார்கள். அமைச்சராகவே இருந்தாலும் நமக்கு ஓர் ஆபத்து என்றால், நம்ம ஊர் பையன் அழைத்தவுடன் நேரில் வந்து நின்றார் என நினைப்பார்கள்.
அமைச்சருக்கு நண்பர் என்றாலும் அரசு நிர்வாகம் முன்னுரிமை, சூழ்நிலை அடிப்படையில்தான் செயல்படுகிறது என்பதை மீட்புக்குழுவினர் புரிந்து கொள்வார்கள்.
இத்தகைய நம்பிக்கையும், புரிதலும்தான் பேரிடர் நேரத்தில் முக்கியமே தவிர, தொலைவில் நின்று வேடிக்கை பார்க்கும், எல்லாவற்றிலும் அரசியல் லாபம் தேடும் சல்லித்தனமான இழிபிறவிகளின் அவதூறுகள் எதுவுமே பொருட்படுத்தத்தக்கவை அல்ல. இந்த பொருநை வெள்ளம் வடியும் முன்னரே இவர்களின் இருப்பும் காலத்தால் மறக்கப்பட்டு விடும்" என்று பதிவிட்டுள்ளார்

மேலும் சில திமுக ஆதரவாளர்கள், புதிய நாடாளுமன்றக் கட்டடம் திறப்பு விழாவின் போது திரைப்பட நடிகர் மற்றும் நடிகைகள் மத்தியில் பிரதமர் மோடி நிற்கும் புகைப்படத்தைப் பதிவிட்டு, 'இவர்களுக்கு நாடாளுமன்றத்திற்கும் என்ன சம்பந்தம்? அவர்கள் ஏன் அங்கே நின்றார்கள்?' என்றும் வாதத்தை முன்வைத்து வருகின்றனர்.
சமூக வலைத்தளத்தில் மாரி செல்வராஜுக்கு எதிராக வைக்கப்படும் வாதங்களில் அதிகப்படியான சாதிரீதியான தாக்குதலைக் காணமுடிகிறது. அப்படியான ஒரு கருத்தை ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்ட யாரும் ஆதரிக்கவே முடியாது என்பதுதான் உண்மை.

'மாரி' என்றால் மழை. அங்கே நிற்பதுதானே மாரி செல்வராஜின் கடமை!
-
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
தமிழ்நாட்டில் விஏஓவாக 2016ல் வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் என்ன சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம்












Click it and Unblock the Notifications