முதல்வர் ஸ்டாலினின் அடுத்தடுத்த அறிவிப்புகள்...ஏக எதிர்பார்ப்புகளுடன் காத்திருக்கும் ஜாதி சமூகங்கள்!
சென்னை: வன்னியர் இடஒதுக்கீடு தியாகிகளுக்கு மணிமண்டபம், அயோத்திதாசருக்கு மணி மண்டபம் என அடுத்தடுத்த அறிவிப்புகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். இதனைத் தொடர்ந்து தங்கள் ஜாதியினருக்கும் முதல்வர் ஸ்டாலினிடம் இருந்து அறிவிப்பு வரும் என எதிர்பார்ப்புகளுடன் காத்திருக்கின்றன சில சமூகங்கள்.
திமுக ஆட்சி அமைந்தது முதல் பா.ம.க.வுடன் ஒருவித நெருக்கம் காட்டுகிறது திமுக. அதேபோல் பாமக எம்.எல்.ஏக்களும் சட்டசபையில் ஆளும் கட்சி கோதாவில்தான் வலம் வருகின்றனர்.
உள்ளாட்சி தேர்தலிலேயே கூட திமுக அணிக்கு பாமக போகலாம் என்கிற பேச்சுகளும் எழுந்தன. இருந்தபோதும் தேமுதிக, திமுக கூட்டணியில் இடம்பெற்றுவிடலாம் என்கிற சூழ்நிலையைத் தடுக்கவே திமுகவுடன் நெருக்கம் என்கிற யுக்தியை பாமக கையாண்டதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில் மகள் திருமண அழைப்பிதழுடன் இன்று முகம் முழுவதும் அத்தனை மகிழ்ச்சியுடன் முதல்வர் ஸ்டாலினை சந்தித்தார் பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்.பி.

வன்னியர் உள் இடஒதுக்கீடு
மேலும் உள்ளாட்சி தேர்தலை மையப்படுத்தியும், அதிமுக கூட்டணியில் உள்ள பாமகவுக்கு செக் வைக்கும் விதத்திலும் வன்னியர் சமூகத்தினரின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் முகமாக சில பல நடவடிக்கைகளை எடுத்தார். இது தொடர்பாக பல முக்கிய அறிவிப்புகளையும் வெளியிட்டார் முதல்வர் ஸ்டாலின். குறிப்பாக, அதிமுக அரசில் நிறைவேற்றப்பட்ட வன்னியர்களுக்கான 10.5 சதவீத உள் இட ஒதுக்கீடு சட்டத்தை தனது ஆட்சியிலும் நிறைவேற்ற உறுதி செய்து அதனை அமல்படுத்த உத்தரவிட்டார். முதல்வர் மு.க. ஸ்டாலின் நினைத்திருந்தால் அந்த சட்டத்திற்கு எதிரான திருத்த மசோதாவை சட்டசபையில் கொண்டு வந்து நிறைவேற்றிருக்க முடியும். ஆனால் முதல்வர் ஸ்டாலின் அப்படி எதுவும் செய்யவில்லை.

விசிக எதிர்ப்பு
அப்போதே, இந்த 10.5% இடஒதுக்கீட்டை திமுக கூட்டணியில் இருக்கும் விடுதலை சிறுத்தைகள் எதிர்த்தது. அக்கட்சியின் தலைவர் தொல். திருமாவளவனும் தனது எதிர்ப்பை மறைமுகமாகவே திமுக தலைமைக்கு தெரிவித்தார். இதையெல்லாம் பொருட்படுத்தாமல் 10.5% இடஒதுக்கீட்டை திமுக அரசு அமல்படுத்திவிட்டது.

தலித்துகள் மகிழ்ச்சி
அதன்பிறகு, வன்னியர் இட ஒதுக்கீடு தியாகிகளுக்கு மணிமண்டபம், அந்த குடும்பங்களின் வாரிசுகளுக்கு அரசு வேலை என தொடர்ச்சியாக அறிவிப்புகளை வெளியிட்டு வன்னியர்களிடம் சபாஷ் வாங்கினார் ஸ்டாலின். ஆனால் இன்னொருபக்கம் தலித் சமூகத்தினரால் இந்த அறிவிப்புகளை ஜீரணிக்க முடியவில்லை. தலித் சமூகத்தின் இந்த எதிர்மறை விமர்சனங்களை சமாளிக்கும் வகையில் அடுத்ததாக தலித் சமூகத்தின் ஆகப் பெரிய தலைவராக கருதப்படும் அயோத்திதாசருக்கும் மணி மண்டபம் என அறிவித்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின். இங்கேயும் ஒரு சிக்கல் வெளிப்பட்டிருக்கிறது.

பிற சமூகத்தின் எதிர்பார்ப்பு
அதாவது வன்னியர் மற்றும் தலித் சமூகத்தினரை மட்டும்தான் திமுக அரசு தூக்கிப்பிடிப்பதாக மற்ற சமூகத்தினர் மத்தியில் அதிருப்தி கிளம்பியது. இது தொடர்பாக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு தகவல்கள் சென்றன. அதனால்தான் வன்னியர் சமூகத்தின் தலைவர்களில் ஒருவரான ஏ.கோவிந்தசாமிக்கு மணி மண்டபம் அமைப்போம் என தீர்மானித்திருந்த முதல்வர் ஸ்டாலின், அதனை சுருக்கி அவருக்கு சிலையும் அரங்கமும் அமைக்கப்படும் என மாற்றினாராம். இதற்கிடையே மற்ற சமூகத்தினரின் அதிருப்திகளைப் போக்குவதற்காக புதிய புதிய அறிவிப்புகளை செய்யவிருக்கிறாராம் முதல்வர் ஸ்டாலின். ஏதோ ஒரு வகையில் நல்லது செய்யப் போய் தெரியாத்தனமாக ஜாதிய சிக்கல்களுக்குள் முதல்வர் மாட்டிக் கொள்வாரோ என்ற தயக்கமும் அச்சமும் தலைமை செயலக அதிகாரிகளிடம் இருக்கிறதாம்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications