படகில் புஸ்ஸி ஆனந்த்? அதுவிடுங்க கரூர் கேஸில் சிபிஐ சம்மன்! நிர்மல் குமாரும் இன்று விசாரணைக்கு ஆஜர்?
சென்னை: கரூரில் விஜய் பிரச்சார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியானது தொடர்பாக சிபிஐ குழுவினர் கடந்த 22ம் தேதி கரூர் கோர்ட்டில் எப்ஐஆர் தாக்கல் செய்தனர். அதில் தவெக பொது செயலாளர் புஸ்ஸி ஆனந்த், இணை பொது செயலாளர் நிர்மல்குமார், உள்பட பலர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. இதன் நகலை தவெக வழக்கறிஞர்கள் பெற்றிருந்த நிலையில், இந்த வழக்கு சம்பந்தமாக புஸ்ஸி ஆனந்த், நிர்மல்குமார் ஆகியோர் இன்று ஆஜராகி விளக்கம் அளிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கரூரில் கடந்த மாதம் 27ம் தேதி தவெக தலைவர் விஜய் பிரச்சார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் இந்தியாவையே உலுக்கி எடுத்துவிட்டது.

தவெக பொதுச்செயலாளர்
இந்த வழக்கை சிபிஐ கையில் எடுத்து விசாரித்து வருகிறது. தவெக பொது செயலாளர் புஸ்ஸி ஆனந்த், இணை பொதுச்செயலாளர் நிர்மல்குமார், கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன், கரூர் மாநகர பொறுப்பாளர் பவுன்ராஜ் உள்ளிட்டோர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஆனால் முன்னதாக தவெக பொது செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமறைவானதாக செய்திகள் கசிந்தன.. வங்க கடலில் படகில் நடுக்கடலில் தங்கியிருப்பதாகவும் சலசலக்கப்பட்டது.
படகில் புஸ்ஸி ஆனந்த்?
பிறகு சில 10 நாட்களுக்கு முன்பு அதாவது கரூர் சம்பவம் முடிந்து 16 நாட்களுக்கு பிறகு, விஜய்யின் நீலாங்கரை வீட்டிற்கு சிவப்பு நிற காரில் சென்றதாகவும், விஜய்யுடன் 20 நிமிடங்கள் ஆலோசனை நடத்தியதாகவும் தகவல்கள் பரபரத்தன. அங்கிருந்து வெளியே வந்த புஸ்ஸி ஆனந்தின் கார், புதுவையை நோக்கி சென்றதாகவும் கூறப்பட்டது.
இப்படி உறுதிப்படுத்தப்படாத பரபரப்புகள் நடந்து கொண்டிருந்த நிலையில், தனக்கு முன் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்தார் புஸ்ஸி ஆனந்த்.. அவரது மனுவை ஐகோர்ட் கிளை தள்ளுபடி செய்திருந்தது. அதனால் மறுபடியும் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.
இதனிடையே, கரூர் நெரிசல் சம்பவத்தில் அவர் மீதான வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்ட நிலையில், முன் ஜாமீன் மனுவை வாபஸ் பெறுவதாக அவர் தரப்பில் ஹைகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இதனை ஏற்றுக்கொண்ட தலைமை நீதிபதி அமர்வு அனுமதி அளித்து, தள்ளுபடி செய்தது.
கரூர் சிபிஐ அதிகாரிகள்
இந்நிலையில், கரூர் சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி கொண்டிருக்கும் நிலையில்,தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் துணைப் பொதுச்செயலாளர் நிர்மல் குமார் இருவருக்குமே சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது.
இந்தச் சம்மனில் கரூரில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அதில், அவர்கள் இருவருமே இன்று செவ்வாய்க்கிழமை கரூரில் சிபிஐ விசாரணைக்கு ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என கூறப்பட்டிருந்ததாக தெரிகிறது. எனவே புஸ்சி ஆனந்த், நிர்மல்குமார் ஆகியோர் இன்று விசாரணைக்கு ஆஜராகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது..
நேரில் விளக்கம்?
அவர்களிடம் கரூர் பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகள் மற்றும் அதன் பின்னணி குறித்து சிபிஐ விசாரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
தீபாவளி விடுமுறைக்காக சொந்த ஊர் சென்ற சிபிஐ அதிகாரிகள் இன்று காலை கரூர் திரும்ப உள்ளதாக தெரிகிறது.. அப்போது அவர்கள் முன்பு தவெக நிர்வாகிகள் ஆஜராவார்கள் என்றும் அவர்களிடம் விசாரணை நடத்தப்படும் என்றும் கூறப்படுகிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications