CBSE: சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு தேர்வில் டாப் 10-ல் தமிழக மாணவிகள் இருவர் சாதனை?
சென்னை: சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண்களை பெற்ற பட்டியலில் 10 இடங்களுக்குள் தமிழக மாணவர்கள் இருவர் இடம் பெற்று சாதனை படைத்துள்ளதாக தனியார் பயிற்சி நிறுவனம் ஒன்று பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியல் சிபிஎஸ்இ வாரியத்தால் வெளிப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு தேர்வுகள் கடந்க பிப்ரவரி 17-ஆம் தேதி முதல் மார்ச் 11-ஆம் தேதி வரை நடந்து முடிந்தது. நாடு முழுவதும் நடத்தப்பட்ட இந்த தேர்வில் 25,08,319 மாணவர்கள் தேர்வு எழுதினர். இதில் 14,08,546 மாணவர்களும், 10,99,773 மாணவிகளும் அடங்குவர். நாடு முழுவதும் 8,075 தேர்வு மையங்களில் 83 பாடங்களுக்குத் தேர்வுகள் நடத்தப்பட்டன.

அது போல் தமிழகத்தை எடுத்துக் கொண்டால் 60,730 மாணவர்களும் 50,873 மாணவிகளும் 10ஆம் வகுப்பு சிபிஎஸ்இ தேர்வு எழுதினர். இந்த நிலையில் நேற்றைய தினம் சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் வெளியானது. இந்த ஆண்டு இந்தியாவில் 93.70 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இந்த நிலையில் திருவனந்தபுரம், விஜயவாடா ஆகிய இரு நகரங்களும் தலா 99.79% தேர்ச்சி சதவீதத்தில் முதலிடத்தில் உள்ளது. அது போல் சென்னை 99.58 சதவீதத்துடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. டெல்லி மேற்கு பகுதியில் 97.45 சதவீத தேர்ச்சியும் கிழக்கு பகுதி 97.33 சதவீத தேர்ச்சியும் உள்ளது. தேர்ச்சி சதவீதத்தில் கடைசி இடத்தில் இருப்பது குவாஹாத்திதான். 85.32 சதவீதம் பெற்றிருக்கிறது.
மாணவர்களின் கல்வித் திறனில் தேவையற்ற ஆரோக்கியமற்ற போட்டியைத் தவிர்க்கும் நோக்கில், 2026-ஆம் ஆண்டு 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான தரவரிசைப் பட்டியலை (Topper List) சிபிஎஸ்இ (CBSE) வெளியிடவில்லை. மேலும், மாணவர்களுக்கு முதல் வகுப்பு, இரண்டாம் வகுப்பு அல்லது மூன்றாம் வகுப்பு (Divisions) என்ற பிரிவுகளையும் வாரியம் வழங்குவதில்லை.
இருப்பினும், ஒவ்வொரு பாடத்திலும் மிக அதிக மதிப்பெண்களைப் பெற்ற முதல் 0.1 சதவீத மாணவர்களுக்கு சிபிஎஸ்இ Merit Certificates வழங்கும். இந்தச் சான்றிதழ்கள், இரண்டாவது பொதுத்தேர்வு (Second Board Examinations) முடிவடைந்த பிறகு மாணவர்களின் டிஜிலாக்கர் (DigiLocker) கணக்குகளில் பதிவேற்றப்படும்.
அந்த வகையில் Physics Wallah என்ற பயிற்சி மையம் திரட்டிய தரவுகளின்படி முதல் 13 இடங்களை பெற்ற மாணவர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளன. இந்த விவரங்கள் சிபிஎஸ்இ வாரியத்தால் வெளியிடப்படவில்லை.
அந்த பயிற்சி நிறுவனத்தின் தரவுகளின்படி, கர்நாடகாவை சேர்ந்த மிலி ராஜேஷ் என்ற மாணவன் 494 மதிப்பெண்களை பெற்று முதலிடம் பிடித்துள்ளார். அடுத்தது ஜம்மு காஷ்மீரை சேர்ந்த இஷான் சுக்லா 481 மதிப்பெண்களும், ஹரியானாவை சேர்ந்த ஜஹான் சவுஹான், தருண் தவார் (இரு மாணவர்கள் ஒரே மதிப்பெண்) 478 மதிப்பெண்களும் பெற்று முறையே 2, 3 ஆவது இடத்தில் உள்ளனர்.
தெலுங்கானாவை சேர்ந்த ஓஜஸ்வி யாதவ் 477 மதிப்பெண்களும் தமிழகத்தை சேர்ந்த ஆவ்யுக்தா என்ற மாணவி 475 மதிப்பெண்களை பெற்று 5ஆவது இடம் பிடித்துள்ளார். அது போல் 6ஆவது இடத்தில் உ.பி.யை சேர்ந்த மாணவன் இல்மா கான் 471 மதிப்பெண்கள் பெற்று 6ஆவது இடமும், உ.பி.யைச் சேர்ந்த ஷ்லாக் குமார் மவுரியா 461 மதிப்பெண்களுடன் 7ஆவது இடத்தையும் கேரளாவை சேர்ந்த முகமது ஆதில் அஷ்ரப் 457 மதிப்பெண்களுடன் 8ஆவது இடத்தையும் தமிழகத்தைச் சேர்ந்த பி.அக்ஷயா 456 மதிப்பெண்களுடன் 9 ஆவது இடத்தையும் பெற்றுள்ளார். அது போல் பீகாரின் அமியா அஷ்மித் 454 மதிப்பெண்களுடன் 10-ஆவது இடத்தையும் பெற்றுள்ளனர். இவ்வாறு அந்த பயிற்சி மையம் தெரிவித்துள்ளது.














Click it and Unblock the Notifications