CBSE No All Pass- மாணவர்கள் கல்வியைப் பறித்து குலத் தொழிலுக்கு அனுப்ப சதித் திட்டம்: திருமாவளவன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: மத்திய அரசின் பாடத் திட்டமான சிபிஎஸ்இ பள்ளிகளில், புதிய கல்விக் கொள்கையின் படி 3,5 மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆல் பாஸ் என்ற நடைமுறை பின்பற்றப்படாமல் 30% மதிப்பெண்கள் கட்டாயம் எடுக்க வேண்டும்; 30%-க்கும் குறைவான மதிப்பெண் பெற்றால் மீண்டும் அதே வகுப்பில் படிக்க வேண்டும் என்கிற புதிய நடைமுறையை அமல்படுத்துவது என்பது மாணவர்களை குலத்தொழிலுக்கு அனுப்பி வைக்கும் சதித் திட்டம் என்கிறார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன்.

இது தொடர்பாக திருமாவளவன் கூறியதாவது: புதிய கல்விக் கொள்கையின் மூலம் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் பயிலும் பள்ளி மாணவர்களுக்குப் புதிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது. ஆகவேதான், புதிய கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்தக் கூடாது என்றும், அதனை மாற்றி அமைக்க வேண்டும் என்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.

cbse thirumavalavan

ஒன்பதாம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் "100% தேர்ச்சி" என்று அறிவிக்கிற, அதாவது, "All Pass முறை" நடைமுறையில் இருந்துவருகிறது. ஆனால், இப்போது மாணவர்கள் தேர்ச்சிப் பெறுவதற்கு குறிப்பிட்ட சதவீத மதிப்பெண்கள் (30%) எடுக்க வேண்டும் என்று 'தேசிய கல்விக் கொள்கை' வலியுறுத்துகிறது.

மாணவர்களைப் பள்ளிப் படிப்பின் போதே வீட்டுக்கு அனுப்பி இடைநிற்றலின் சதவீதத்தை (Drop-out Percentage) உயர்த்துவது தான் இந்த தேசிய கல்விக் கொள்கையை வகுத்தவர்களின் நோக்கமாகும்; மோடி அரசின் நோக்கமாகும். முடிந்தவரை மாணவர்களைப் பள்ளிப் படிப்பிலேயே வடிகட்டிவிடுவது, அதன்மூலம் அவரவரின் குலத்தொழிலுக்கு அனுப்புவது என்பது தான் அவர்களின் உள் நோக்கம். அதனால்தான் தேசிய கல்விக் கொள்கையைக் கட்டாயமாக்கித் திணிக்கிறார்கள்.

இந்நிலையில் தான், தேசிய கல்விக் கொள்கையைத் தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்த மாட்டோம் என்று தமிழ்நாடு அரசும் வெளிப்படையாக அறிவித்திருக்கிறது. ஆகவேதான் இந்திய ஒன்றிய அரசும் தமிழ்நாட்டுக்குக் கல்விக்கென நிதி ஒதுக்கீடு செய்வதை நிறுத்தி வைத்திருக்கிறார்கள். தமிழ்நாடு அரசுக்கு நெருக்கடி தருகிறார்கள். ஜனநாயக சக்திகள் இதனைப் புரிந்து கொண்டு தேசிய அளவில் இதற்கு கடும் எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும். பன்னிரண்டாம் வகுப்பில் மட்டும் பொதுத்தேர்வு இருந்தால் போதும் என்பதுதான் விடுதலைச் சிறுத்தைகளின் கருத்து.

5ஆம் வகுப்பு, 8ஆம் வகுப்பு, 10ஆம் வகுப்பு, 11ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பு என தொடர்ந்து அடுத்தடுத்துப் பொதுத் தேர்வுகளை வைத்து வடிகட்டி மாணவர்களை வீட்டுக்கு அனுப்புகிற வேலையை ஃபாசிச பாஜக அரசு மேற்கொண்டு வருகிறது. புதிய தேசிய கல்விக் கொள்கையை ஏன் எதிர்க்கிறோம் என்பதை இதிலிருந்து புரிந்து கொள்ள முடியும்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+