Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது.. ரயில்களில் இனி சூப்பர் மாற்றம்! ரயில்வே ஸ்டேஷன்களில் ஹேப்பி வசதி

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்திய ரயில்வே நிர்வாகம், பயணிகளின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக ரயில் பெட்டிகளிலும், ரயில் நிலையங்களிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்துவதற்கு தீவிரமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக, மகளிர் பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக அனைத்து மெயில் - எக்ஸ்பிரஸ் ரயில்களில் எச்டி சிசிடிவி கேமராக்கள், அவசரகால உதவி பொத்தான்கள் பொருத்தப்பட உள்ளதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகியிருந்தன.. இந்நிலையில், தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங். மகிழ்ச்சி தகவல் ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

ரயில் பயணிகளுக்கு அனைத்து வசதிகளையும் ரயில்வே செய்திருப்பினும், பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதும் ரயில்வேயின் முக்கிய கடமையாக உள்ளது..

railways train CCTV camera

அந்தவகையில், ரயில்களின் பயணிக்கும் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யவும், ரயில்களின் குற்றங்கள் நிகழாமல் தடுக்கவும், ரயில்களில் கடத்தல்கள் நடைபெறுவதை முன்கூட்டியே தடுக்கவும், குற்றவாளிகளை கண்டறியும் ரயில் நிலையங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

ஒவ்வொரு பெட்டியிலும் சிசிடிவி

தெற்கு ரயில்வேயில் சென்னை சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம், விழுப்புரம், திருச்சி, நெல்லை, மதுரை , சேலம் , கோவை உள்பட முக்கிய ரயில்வே ஸ்டேஷன்களில் சிசிடிவி கேமராக்கள் ஏற்கனவே செயல்பாட்டில் உள்ளன..

அந்தவகையில், நாடு முழுவதுமே 16 ரயில்வே மண்டலங்களில் 6,646 ரயில் பெட்டிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.. இதில் தெற்கு ரயில்வேயில் மட்டும் 759 பெட்டிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டன..

இப்படிப்பட்ட சூழலில்தான், கடந்த ஜூலை மாதம் நடந்த ஆய்வுக் கூட்டத்தில் ரயில்வே வாரியத்தின் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

அப்போது அதிகாரிகள் பேசும்போது, "வடக்கு ரயில்வேயின் ரயில் இன்ஜின்கள், ரயில் பெட்டிகளில் வெற்றிகரமான சோதனை நடவடிக்கைகள் செய்யப்பட்டுள்ளதாக., 74,000 ரயில் பெட்டிகளிலும் 15,000 லோகோமோடிவ்களிலும் சிசிடிவி கேமராக்களை நிறுவ மத்திய ரயில்வே அமைச்சர் ஒப்புதல் அளித்துள்ளார்.

ரயில் நிலையங்களில் சிசிடிவி

ஒவ்வொரு ரயில் பெட்டியிலும் 4 டோம் வகை சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும். ஒவ்வொரு நுழைவு வழியிலும் 2 கேமராவும் ஒவ்வொரு ரயில் இன்ஜினிலும் 6 சிசிடிவி கேமராக்களும் பொருத்தப்படும். இதில், ரயில் இன்ஜினின் முன்புறம், பின்புறம் என 2 புறமும் தலா 1 கேமரா பொருத்தப்படும்.

ரயில் இன்ஜினின் ஒவ்வொரு பெட்டியிலும் (முன் மற்றும் பின்புறம்) 1 டோம் சிசிடிவி கேமரா மற்றும் 2 மேசையில் பொருத்தப்பட்ட மைக்ரோஃபோன்கள் பொருத்தப்பட்டிருக்கும்.. சிசிடிவி கேமராக்கள் நவீனமானவை என்பதுடன், எஸ்டிக்யூசி சான்றிதழ் பெற்றவையும்கூட.. இப்படி சிறந்த உபகரணங்களை பயன்படுத்துவதில் மத்திய ரயில்வே அமைச்சர் சிறப்பு கவனம் செலுத்துகிறார்.

பயணிகள் பாதுகாப்பு

மணிக்கு 100 கிலோ மீட்டர் வேகத்தில் ஓடும் ரயில்களிலும், குறைந்த வெளிச்ச நிலைகளிலும் கூட உயர்தர காட்சிப் பதிவுகள் கிடைக்கும் வகையில் கேமராக்களை பொருத்துமாறு ரயில்வே அதிகாரிகளை அமைச்சர் வலியுறுத்தியிருக்கிறார்.. சிசிடிவி கேமராக்களில் செயற்கை நுண்ணறிவுப் பயன்பாட்டை ஆராயுமாறு மத்திய ரயில்வே அமைச்சர் அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தியிருக்கிறார்.. .

பயணிகளின் பாதுகாப்பை மேம்படுத்தவே, பயணிகள் பகுதிகளில் கேமராக்களை பொருத்தப்படுகின்றன. தனியுரிமையைப் பாதுகாக்கும் அதேசமயம், இந்த கேமராக்கள் குற்றவாளிகளை அடையாளம் காணவும் உதவும். இந்திய ரயில்வேயின் நவீனமயமாக்கல் முயற்சிகள், பாதுகாப்பான பயணத்தையும் பயணிகளுக்கு சிறந்த அனுபவத்தையும் வழங்குவதற்கான உறுதிப்பாட்டின் பிரதிபலிப்பாகும்" என்று நம்பிக்கை தெரிவித்திருந்தனர்..

மகிழ்ச்சி செய்தி தந்த சிங்

இந்நிலையில், தெற்கு ரயில்வே சார்பில், பெரம்பூர் ரயில்வே மைதானத்தில், 79வது சுதந்திர தின விழா நேற்று கொண்டாடப்பட்டது. இவ்விழாவில், ஆர்.என்.சிங் தேசியக்கொடி ஏற்றி, ரயில்வே பாதுகாப்பு படை அணிவகுப்பு மரியாதையை ஏற்றார். அப்போது அவர் பேசியதாவது:

"கடந்த நிதியாண்டில், தெற்கு ரயில்வே 12,659 கோடி வருவாய் பெற்றுள்ளது. இது, முந்தைய ஆண்டைவிட 4.5 சதவீதம் அதிகமாகும்.. நடப்பு நிதியாண்டில் ஜூலை 2025 வரை, 5 சதவீதத்திற்கு மேல் வளர்ச்சி பதிவு செய்யப்பட்டுள்ளது. பயணியர் மற்றும் ரயில் சேவைகள் அதிகரித்தாலும், 91.2 சதவீதம் நேரக்கட்டுப்பாடு பராமரிக்கப்பட்டுள்ளது.

AC மின்சார ரயில்

கடந்த நிதியாண்டில் மூன்று ஜோடி புதிய ரயில்கள் இயக்கப்பட்டன. பண்டிகை மற்றும் விடுமுறை காலங்களில், 5,150 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன. கூடுதல் தேவைக்காக, 108 பொதுப் பயணியர் பெட்டிகள், 90 ரயில்களில் சேர்க்கப்பட்டன... 4 வந்தே பாரத் ரயில்கள், 20 மற்றும் 16 பெட்டிகளாக நீட்டிக்கப்பட்டன.

கடந்த ஏப்ரல் முதல் சென்னை கடற்கரை - செங்கல்பட்டு இடையே, முதல் AC மின்சார புறநகர் ரயில் இயக்கப்பட்டது. கடந்த 3 ஆண்டுகளில், 2,800 கி.மீட்டர் பாதையில் வேகம், 80 முதல் 90லிருந்து, 100 மற்றும் 110 கிலோ மீட்டராக உயர்த்தப்பட்டது. மேலும் 415 கிமீ பாதையில் வேகம் 110லிருந்து 130 கி.மீ.,யாக உயர்த்தப்பட்டது.

பயணிகள் மகிழ்ச்சி

அம்ரித் நிலைய மேம்பாட்டு திட்டத்தின் கீழ், 90 ரயில் நிலையங்களில், 13 நிலையங்கள் மே 22ம் தேதி திறக்கப்பட்டன.. மேலும் 15 நிலையங்கள் தயாராக உளளன. மற்ற நிலையங்கள் வரும் டிசம்பருக்குள் முடிக்கப்படும். வரும் வருடம் மார்ச் மாதத்திற்குள் தெற்கு ரயில்வேயில், 593 நிலையங்களிலும் கண்காணிப்பு கேமரா இருக்கும்" என்று உறுதி தெரிவித்துள்ளார்.

பெண்களின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்கும் வகையில், ரயில்வே பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் பயணிகளை கவர்ந்து வருகிறது.. அத்துடன், பெண்கள் உட்பட பயணிகளின் பாதுகாப்பும் உறுதி செய்யப்படும் என்றே நம்பலாம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+