சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

"செம".. ஒருத்தரும் "வாலாட்ட" முடியாது.. ஒட்ட நறுக்க வருகிறது "கேமரா".. அமைச்சர் ராஜகண்ணப்பன் அதிரடி

பஸ்களில் சிசிடிவி கேமரா பொருத்தப்படும் என ராஜ கண்ணப்பன் தெரிவித்துள்ளார்

Google Oneindia Tamil News

சென்னை: இனி பஸ்களில் ஒருத்தரும் வாலாட்ட முடியாது.. எல்லா பஸ்களிலும் கேமரா வைக்க போகிறார்களாம்.. தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் இதற்கான அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளார்..!
ஏற்கனவே முக அழகிரி சொன்னபடி தனக்கு அமைச்சர் பதவி வாங்கி தரவில்லை என்பதால்தான் திமுக எம்எல்ஏ-வாக இருக்கும்போதே கட்சியைவிட்டு வெளியே சென்றார் கண்ணப்பன்..

ஆனால், தன்னை நாடி வந்தவர்களை எப்போதுமே கைவிடுவதில்லை என்ற கொள்கையில் செயல்பட்டு வருகிறார் முக ஸ்டாலின். அந்த வகையில், அதிமுகவுக்கும் திமுகவுக்குமாக "போக்குவரத்தில்" இருந்த ராஜகண்ணப்பனுக்கு மறுபடியும் போக்குவரத்து துறையே வழங்கப்பட்டுள்ளது.

முத்துச்சாமி, ராஜ கண்ணப்பன், செந்தில் பாலாஜிக்கு வெயிட்டான போஸ்ட்.. மறைந்திருக்கும் ஸ்டாலின் மெசேஜ்!முத்துச்சாமி, ராஜ கண்ணப்பன், செந்தில் பாலாஜிக்கு வெயிட்டான போஸ்ட்.. மறைந்திருக்கும் ஸ்டாலின் மெசேஜ்!

பதவி

பதவி

முதுகுளத்தூரில் இவர் சீட் வாங்கும்போதே அமைச்சர் பதவிக்கும் சேர்த்து பேசியதாக ஒரு தகவல் கசிந்து வந்த நிலையில், கண்ணப்பன் கேட்டபடியே அமைச்சர் பதவியை தந்து அழகு பார்த்துள்ளார் ஸ்டாலின். அதற்கேற்றபடி, கண்ணப்பனும் அமைச்சராக பொறுப்பேற்றதில் இருந்து புது புது திட்டங்களை அறிவித்து வருகிறார்.. நிர்பயா திட்டத்தின் கீழ் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய பேருந்துகளில் சிசிடிவி கேமராக்களை பொருத்த வேண்டும் என போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் உத்தரவிட்டுள்ளார்.

பயணம்

பயணம்

பஸ்களில் பெண்களுக்கு இலவச பயணம் என்ற திட்டத்தை அறிவித்தவுடனேயே அது பலதரப்பட்ட மக்களின் வரவேற்பை பெற்றது.. அந்த வகையில் இப்போது இன்னொரு அறிவிப்பையும் வெளியிட்டுள்ளார்.. பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அனைத்து பேருந்துகளிலும் நிர்பயா திட்டத்தின் கீழ் சிசிடிவி கேமரா பொருத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.

ஆலோசனை

ஆலோசனை

இன்று காலை போக்குவரத்து அதிகாரிகளுடன் கண்ணப்பன் ஆலோசனை நடத்தினார்.. பிறகு செய்தியாளர்களிடம் சந்தித்து பேசியபோது, "பஸ்களில் பெண்களுக்கு இலவச பயணம் என்ற திட்டம் நல்ல வரவேற்பை இத்திட்டத்தின்மூலம் மகளிர் தங்களுக்கு மாதத்துக்கு ரூ.2 ஆயிரம் வரை மிச்சமாகிறது.. போக்குவரத்துத் துறையில் இன்னும் சீரமைக்க வேண்டிய பல விஷயங்கள் இருக்கின்றன.. இன்னும் புதுமையான விஷயங்களை புகுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது... இதுகுறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.

சிசிடிவி கேமரா

சிசிடிவி கேமரா

பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அனைத்து பேருந்துகளிலும் நிர்பயா திட்டத்தின் கீழ் சிசிடிவி கேமரா பொருத்தப்படும்... பேருந்து வழித்தடங்களை மக்கள் அறிந்துகொள்ள சலோ ஆப் விரைவில் நடைமுறைக்கு கொண்டுவரப்படும். சென்னையில் 1400 பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் மேற்கொள்ள அனுமதிக்கப்படுகிறார்கள். மேலும் நகர பேருந்துகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதோடு, பல வழித்தடங்களில் இத்திட்டம் விரிவுப்படுத்தப்படும்" என்று கூறியுள்ளார்.

சலுகைகள்

சலுகைகள்

வழக்கமாக போக்குவரத்து துறையில் பஸ்கள் அதிகமாக விடப்படும், அல்லது கட்டண குறைப்பு போன்ற சலுகைகள் ஏற்படுத்தப்படும்.. ஆனால், இந்த முறை திமுக ஆட்சியில் எல்லாமே வித்தியாசமாக இருக்கிறது.. பஸ்ஸில் கேமரா வைப்பதால், நிச்சயம் பெண்கள் மீதான வன்முறை தாக்குதல், கிரிமினல் குற்ற செயல்கள் போன்றவை தடுக்கப்படும் வாய்ப்பு நிறைய உள்ளது..

வரவேற்பு

வரவேற்பு

எவ்வளவு முடியுமோ அந்த அளவுக்கு ஒவ்வொரு துறையிலும் அந்தந்த துறை அமைச்சர்கள் முன்னெடுப்பு விஷயங்களை கையில் எடுத்து வருகின்றனர்.. அந்த வகையில் போக்குவரத்து துறையும் புதுமையான விஷயங்களை நடைமுறைப்படுத்தி வருவதை மக்கள் உற்று நோக்கி வருகிறார்கள்.

English summary
CCTV camera in all buses DMK Transport Minister Raja Kannappan orders
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X