கடைசி நிமிடம்! மருத்துவமனைக்கு தள்ளாடி தள்ளாடி சென்ற மாரிமுத்து..கண்ணீரை வரவழைக்கும் சிசிடிவி காட்சி
சென்னை: டப்பிங்க் செய்துகொண்டிருந்த போது திடீரென நெஞ்சு வலிப்பதாக கூறி தானே காரை எடுத்துக்கொண்டு மருத்துவமனைக்கு சென்ற நடிகர் மாரிமுத்து, உயிர் பிரியும் கடைசி நிமிடத்தில் தள்ளாடி தள்ளாடி செல்வது போன்ற சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
Recommended Video
எதிர்நீச்சல் டிவி சீரியலில் அவர் பேசிய இந்தாம்மா ஏய் என்ற ஒற்றை வார்த்தைதான் பல ரசிகர்களை மாரிமுத்துவிற்கு கொடுத்தது. சினிமாவில் மாரிமுத்துவிற்கு கிடைத்த புகழை விட டிவி சீரியல் மூலம் அவருக்கு நிறைய ரசிகர்களையும் புகழ், செல்வாக்கை கிடைக்கச் செய்தது. பொது இடங்களுக்கு செல்லும் போது கூட மாரிமுத்து உடன் போட்டோ எடுக்க பலரும் விரும்புவார்களாம்

டப்பிங் பேசும் போது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. டப்பிங்கில் நெஞ்சுவலி ஏற்பட்டதால் இவர் தானே காரை எடுத்துக்கொண்டு மருத்துவமனைக்கு சென்றுள்ளார். சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சோதனை செய்யப்பட்ட போதுதான் அவர் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து மாரிமுத்துவின் உடல் வளசரவாக்கத்தில் உள்ள வீட்டில் அஞ்சலிக்காக உடல் வைக்கப்பட்டது.
மாரிமுத்துவின் உடலுக்கு திரை உலக பிரபலங்கள், சின்னத்திரை நட்சத்திரங்கள் பலரும் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். எதிர்நீச்சல் டிவி சீரியலில் நடித்த நட்சத்திரங்கள் பலரும் குடும்பத்தில் ஒருவரை இழந்ததைப் போலவே கதறி துடித்தனர். எதிர்நீச்சல் சீரியலில் நெஞ்சுவலிக்குது பயமா இருக்குது என்று வசனம் பேசியிருப்பார் மாரிமுத்து.
அதே போல அவர் கடைசியாக பகவான் கிருஷ்ணா இயக்கத்தில் நடித்திருந்தார் அந்த படத்தில் மாரிமுத்து மரணமடைந்தது போல காட்சி அமைக்கப்பட்டிருக்கும். அந்த போஸ்டர் முன்பு நின்று ரசிகர்களுடன் செல்ஃபி எடுத்திருப்பார் மாரிமுத்து. அந்த செல்ஃபி இப்போது சமூக வலைத்தளங்களில் வைரலானது.
நடிகர் மாரிமுத்துவின் உடல் ஆம்புலன்ஸ் மூலம் சென்னையில் இருந்து சொந்த ஊரான தேனி மாவட்டத்திற்கு கொண்டு செல்லப்பட்டு விட்டது. நாளைய தினம் இறுதி அஞ்சலிக்குப் பின்னர் சொந்த ஊரில் நல்லடக்கம் செய்யப்படும். உறவினர்கள் உடன் செல்ல சீரியல், சினிமாவில் உடன் நடித்த பலரும் கண்ணீர் மல்க விடை கொடுத்து அனுப்பினர்.
இதனிடயே, நெஞ்சுவலி ஏற்பட்ட பிறகு அவரே காரை ஓட்டிக்கொண்டு மருத்துவனை சென்றதாக சொல்லப்படும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில், மாரிமுத்து நடக்க முடியாமல் தடுமாறியபடி செல்வது இடம் பெற்றுள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications