விசித்திரமா இருக்கே..! ஓடுற ஃபேனை ஒற்றை கையால் நிறுத்தி அருள்வாக்கு சொல்லும் சீலிங் ஃபேன் சாமியார்!
சென்னை: சீலிங் ஃபேன் சாமியார் ஒருவரின் வீடியோ தற்போது இணையத்தில் தீயாகப் பரவி வருகிறது. ஃபுல் ஸ்பீடில் ஓடும் மின் விசிறியின் இறக்கைகளுக்குள் கையை விட்டு நிறுத்திவிட்டு அருள் வாக்கு தருகிறார் இந்த புது பாபா.
ஒவ்வொரு சீசனுக்கும் வித்தியாச வித்தியாசமாக சாமியார்கள் வந்து மக்களிடையே ட்ரெண்டாவது வாடிக்கையாகி வருகிறது. வாயில் இருந்து லிங்கம் எடுப்பது தொடங்கி, அண்டாவுக்குள் அமர்ந்து அருள் வாக்கு சொல்லும் அண்டா சாமியார், பாவாடை சாமியார், மாடர்ன் டிரஸ் அணிந்த பெண் சாமியார், கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா பொட்டலம் கொடுத்து வந்த கஞ்சா சாமியார் வரை பலரைப் பார்த்திருக்கிறது தமிழ்நாடு.

அந்த வரிசையில் ஒரே ஒரு வீடியோ மூலம் புதிதாக ட்ரெண்டாகி இருக்கும் வினோதமான சாமியார் தான் இந்த சீலிங் ஃபேன் சாமியார். பொதுவாக சாமியார்கள் திருநீறோ, குங்குமமோ பிரசாதமாக வழங்குவதைத்தான் பார்த்திருக்கிறோம். ஆனால், இந்த சீலிங் ஃபேன் சாமியார், பழைய ஃபேனில் ஒட்டியிருக்கும் தூசியை திருநீறாக பூசி வருகிறார். அதுவும், ஓடிக்கொண்டே இருக்கும் சீலிங் ஃபேனை கையாலேயே நிறுத்தி, அதில் இருந்து தூசியை எடுத்து நெற்றியில் பூசுகிறார்.
இன்றைய புது வரவு
— பாக்டீரியா (@Bacteria_Offl) July 26, 2023
'சீலிங் ஃபேன்' சாமியார் 😄
ஓடுற ஃபேனை நிறுத்தி ஆசீர்வாதம் வழங்குவார் 😂😂😂 pic.twitter.com/NyxfpimJHs
தன்னை சிலர் தூக்கிப் பிடித்துக்கொள்ள, அவர்களின் கைகளில் சேஃபாக அமர்ந்துகொண்டு, ஃபுல் ஸ்பீடில் ஓடும் மின் விசிறிக்குள் கையை விட்டு ஒற்றைக் கையாலேயே ஓடும் ஃபேனை நிறுத்தி, அதில் படிந்திருக்கும் தூசியை எடுத்து, பக்தர்களின் நெற்றியில் பூசிவிட்டு அருள் தருகிறார் இந்த பன்ஹா பாபா.
பன்ஹா பாபா, வெறும் கைகளால் மின்விசிறியை நிறுத்தி பக்தர்களுக்கு அருள் தரவும், அவரை பக்தர்கள் கையெடுத்து கும்பிடும் வீடியோ தற்போது இணையத்தில் பரவி ட்ரெண்டாகி வருகிறது. இந்த விசித்திர சாமியாரை தற்போது நெட்டிசன்கள் பலரும் ட்ரோல் செய்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications