'காக்கா முட்டை' பட பாணியில் கொள்ளை.. திருடனை பிடிக்க முயன்று வாலிபர் பலி..சென்னை ரயிலில் அதிர்ச்சி
சென்னை: ரயிலில் படிக்கட்டில் இருந்து செல்போன் பார்த்தபடி சென்ற பயணியை தாக்கி கொள்ளையன் செல்போன் பறித்து சென்றுள்ளான். கொள்ளையனை பிடிக்க முயற்சித்த போது ரயில் தண்டவாளத்தில் இருந்து தவறி விழுந்து வடமாநில இளைஞர் பலியானார். காக்கா முட்டை பட பணியில் நடைபெற்ற இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை சென்ட்ரலில் இருந்து வரும் ரயில்களும் சென்ட்ரலை நோக்கி செல்லும் ரயில்களும் சிக்னல் காரணமாக கொருக்குப் பேட்டை பகுதியில் மெதுவாக செல்வது வழக்கம்.
ரயில்கள் மெதுவாக செல்வதை தங்களுக்கு சாதமாக பயன்படுத்திக் கொள்ளும் அப்பகுதியை சேர்ந்த கொள்ளையர்கள் மற்றும் சமூக விரோதிகள் ரயிலில் படியில் நின்று பயணம் செய்யும் பயணிகளிடம் இருந்து செல்போனை பறிக்கும் சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகின்றன.

தொடரும் கொள்ளை சம்பவங்கள்
காக்கா முட்டை படத்தில் கூட இதேபோன்ற ஒரு காட்சி வைக்கப்பட்டு இருக்கும். ரயிலில் ஏறி பயணிகளின் உடைமைகளில் இருந்து பணம் திருடுவது போன்ற குற்றச் செயல்களும் நடப்பதாக பயணிகள் குற்றச்சாட்டு வைக்கின்றனர். இதுபோன்ற கொள்ளை சம்பவங்களை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக ஒருபக்கம் கூறப்பட்டாலும் மற்றொரு பக்கம் கொள்ளை சம்பவங்கள் நடந்து கொண்டுதான் இருக்கிறது.

சிஐஎஸ்எப் வீரரிடம் செல்போன் பறிப்பு
கடந்த 2 நாட்களுக்கு முன்பாக சென்னை கொருக்குப்பேட்டை பகுதியில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலில் படிக்கட்டு அருகே நின்று செல்போனில் பேசிய வட மாநிலத்தை சேர்ந்த சி.ஐ.எஸ்.எப் வீரரான விவேக் குமார் என்பவரிடம் இருந்து செல்போனை கொள்ளையன் ஒருவன் பறித்து சென்றான். தண்டவாளம் அருகில் நின்ற படி கம்பால் அடித்து நொடிப்பொழுதில் செல்போனை கொள்ளையடித்து விட்டு கொள்ளையன் தப்பி சென்றான்.

மீண்டும் ஒரு சம்பவம்
இதில் நிலை தடுமாறி தண்டவளத்தில் விழுந்த விவேக் குமார் காயம் அடைந்தார். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த சம்பவம் நடைபெற்ற அடுத்த சில தினங்களிலேயே மீண்டும் ஒரு செல்போன் பறிப்பு சம்பவம் நடைபெற்றுள்ளது. வாலிபரிடம் செல்போன் பறித்ததில் நிலை தடுமாறி அவர் கீழே விழுந்து பலியானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

படிக்கட்டில் அமர்ந்திருந்த வாலிபர்
மேற்கு வங்காள மாநிலத்தை சேர்ந்த ரோனி சேட் (வயது 24) என்பவர் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலில் வந்து கொண்டு இருந்தார். படிக்கட்டில் அமர்ந்திருந்த ரோனி சேட் செல்போன் பார்த்த படி வந்தார். ரயில் சென்னை கொருக்குப் பேட்டை அருகே வந்த போது வழக்கம் போல் ரயில் மெதுவாக சென்றது. அப்போது தண்டவாளம் அருகே நின்று கொண்டிருந்த கொள்ளையன் படிக்கட்டில் இருந்து செல்போன் பார்த்துக் கொண்டு இருந்த ரோனி சேட்டின் கையில் இருந்த செல்போனை லாவகமாக பறித்தான்.

தவறி விழுந்து பலி
இதனால் திடுக்கிட்ட ரோனி சேட் கொள்ளையனை பிடிக்க முயற்சித்தார். அப்போது ரோனி சேட் ரயிலில் இருந்து தவறி விழுந்தார். இதில் தலைப்பகுதியில் ரோனிசேட்டிற்கு படுகாயம் ஏற்பட்டது. இதனால் சம்பவ இடத்திலேயே ரோனி சேட் பரிதாபமாக உயிரிழந்தார். ரயில் பெட்டியில் இருந்த பயணிகள் இந்த கோர சம்பவத்தை பார்த்து அதிர்ச்சியில் அலறினர். உடனடியாக ரயில்வே போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர்.

போலீசார் விசாரணை
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ரயில்வே போலீசார், ரோனி சேட் உடலை மீட்டு பிரதே பரிசோதனைக்ககா மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணையும் நடத்தி வருகின்றனர். மேற்கு வங்க மாநிலத்தில் இருந்து கட்டிட வேலைக்காக ரேனி சேட் சென்னை வந்தது விசாரணையில் தெரியவந்தது.
-
தமிழகத்தில் 10 இடங்களில் செஞ்சுரி போட்ட வெயில்.. மொத்தமாக எகிறிய வெப்பநிலை! -
திருச்சி–சார்லப்பள்ளி சிறப்பு ரயில் சேவை ஜூன் வரை நீட்டிப்பு அறிவிப்பு -
தங்கத்தை மிஞ்சப்போகும்.. பலரின் வீட்டிலேயே இருக்கும் ஒரு குட்டி உலோகம்.. அடிக்குது ஜாக்பாட்! -
தென்னிந்திய தர்காக்கள் மற்றும் பள்ளி வாசல்கள் சங்கம் அதிமுகவிற்கு ஆதரவு! -
கடலூரில் நாளை விஜய் பிரச்சாரத்தால் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. நடந்தது என்ன? -
அமெரிக்காவை அலறவிட்ட பிரான்ஸ்! 129 டன் தங்கத்தை மீட்க "கோல்டன்" ஸ்கெட்ச்.. அப்போ இந்தியா பிளான் என்ன -
சிறகடிக்க ஆசை: விஜயாவின் மாற்றம்! முத்து, மீனாவை பெருமையாக பேசுறாங்களே! குடும்பத்தில் கொண்டாட்டம் -
ரஷ்யா மாஸ்டர் பிளான்: இந்தியாவுக்கு ஜாக்பாட்.. சீனா உதவி.. ஒன்று கூடிய BRICS நாடுகளால் டிரம்ப் ஷாக்! -
மொத்தமாக மாறிய டிரம்ப்.. ஈரான் விஷயத்தில் தொனியை மாற்றிய அமெரிக்க அதிபர்.. அடேங்கப்பா! -
2 வெர்ஷன்.. ஜனநாயகன் படம் இணையத்தில் லீக்கானது எப்படி? அதிகம் பலன் அடைவது யார்? அந்த மர்ம கை -
23000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த பின்பும்.. டிசிஎஸ் நிறுவனத்தில் கட்டுப்படுத்த முடியாத செலவு! -
லீக் ஆன ஜனநாயகன்.. நானே ரீலிஸ் பண்ணித்தரேன்னு சொன்னேனே விஜய்.. விட்டு விளாசிய சாட்டை!












Click it and Unblock the Notifications