டெல்டா மாவட்டங்களில் நாளை மத்திய குழு ஆய்வு.. முதல்வர் ஸ்டாலின் கடிதம் எதிரொலி.. அடுத்தது இதுதான்!
பருவம் தவறிய மழையால் டெல்டா மாவட்டங்களில் 1 லட்சம் ஹெக்டேர் பரப்பிலான பயிர்கள் நீரில் மூழ்கியதால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை: பருவம் தவறிய மழையால் டெல்டா மாவட்டங்களில் 1 லட்சம் ஹெக்டேர் பரப்பிலான பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் நெல் கொள்முதலில் கூடுதல் தளர்வு வழங்க பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதி இருந்தார். இந்நிலையில் தான் நாளை 3 அதிகாரிகள் அடங்கிய மத்திய குழு டெல்டா மாவட்டங்களில் ஆய்வு மேற்கொள்ள உள்ளது. இவர்கள் அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
தமிழ்நாட்டின் காவிரி டெல்டா பகுதிகளில் நெல் முக்கிய விவசாயமாக உள்ளது. இந்நிலையில் தான் பருவம் தவறி சமீபத்தில் மழை பெய்தது. இதனால் சம்பா பயிர்கள் நீரில் மூழ்கின. இந்த மாதம் நெல் அறுவடை செய்ய விவசாயிகள் காத்திருந்தனர்.
இந்நிலையில் தான் பருவம் தவறிய மழையால் ஒட்டுமொத்த பயிர்களும் தண்ணீரில் மூழ்கியுள்ளன. இதனால் விவசாயிகள் நஷ்டத்தை சந்திக்கும் நிலையில் உள்ளனர்.

1 லட்சம் ஹெக்டேர் பாதிப்பு
தற்போதைய சூழலில் தமிழ்நாட்டில் டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மற்றும் புதுக்கோட்டையில் பருவம் தவறிய மழையால் 1 லட்சம் ஹெக்டேர் பரப்பிலான பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. அமைச்சர்கள் ஆய்வு மேற்கொண்டனர். வேளாண்மை துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம், உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, வேளாண் துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அதன்பிறகு அவர்கள் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து அதுபற்றிய விபரங்களை தெரிவித்தனர்.

பயிர் நிவாரணம் அறிவிப்பு
மேலும் தமிழ்நாடு அரசு சார்பில் பயிர் நிவாரணம் அறிவிக்கப்பட்டது. அதன்படி 33 சதவீதம் மேல் மகசூல் ஏற்பட்டுள்ள இனங்களில் ஹெக்டேருக்கு ரூ.20 ஆயிரம் வழங்கப்படும். இளம் பயறு வகை பயிர்களுக்கு இழப்பீடாக ஹெக்டேருக்கு ரூ.3 ஆயிரம் வழங்கப்படும். உளுந்து விவசாயிகளுக்கு 50 சதவீத மானியத்தில் ஒரு ஏக்கருக்கு 8 கிலோ பயறு விதைகள் வழங்கப்படும் என நிவாரணங்கள் அறிவிக்கப்பட்டன.

முதல்வர் ஸ்டாலின் கடிதம்
மேலும் முதல்வர் ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதினார். அதில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் 22 சதவீத ஈரப்பதம் உள்ள நெல்லை விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்ய அனுமதிக்க வேண்டும். முதிர்ச்சியடையாத சுருங்கிய நெல்லின் குறைந்தபட்ச வரம்பை 3 சதவிகிதத்திலிருந்து 5 சதவிகிதம் வரை தளர்த்த வேண்டும். சேதமடைந்த நிறமாற்றம் மற்றும் முளைத்த நெல்லை 5 சதவிகிதத்திலிருந்து 7 சதவிகிதம் வரை உயர்த்த வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தார். அதேபோல் மத்திய உணவுத்துறை செயலாளருக்கு தமிழ்நாடு உணவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனும் கடிதம் எழுதி இருந்தார்.

மத்திய குழு வருகை
இந்நிலையில் தான் பருவம் தவறிய மழையால் டெல்டா மாவட்டங்களில் ஏற்பட்ட பயிர் பாதிப்புகளை நாளை மத்திய குழு ஆய்வு செய்ய உள்ளது. சென்னையில் உள்ள தரக்கட்டுப்பாட்டு மையத்தின் தொழில்நுட்ப அதிகாரி சி யூனுஸ், பெங்களூரில் உள்ள தரக்கட்டுப்பாட்டு மையத்தின் தொழில்நுடப் அதிகாரிகள் பிரபாகரன், ஒய் போயோ ஆகியோர் அடங்கிய மத்திய குழு நாளை முதல் ஆய்வு செய்ய உள்ளது.

அடுத்தது என்ன?
இந்த குழுவினர் இன்று இரவு திருச்சி வந்து நாளை முதல் ஆய்வை தொடங்க உள்ளனர். இந்த குழுவினர் நெல் மற்றும் பயிர் சேதங்கள் ஆய்வு செய்து பயிர் மாதிரிகளை தமிழக உணவு கழக பரிசோதனை கூடத்தில் ஆய்வு மேற்கொண்டு மத்திய அரசுக்கு அறிக்கை அளிப்பார்கள். அதன்படி அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது என்று தகவல் வெளியாகி உள்ளது.
-
தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்! முடிவுக்கு வரும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
வாடகை கிடையாது.. 22 அமைச்சர்களுக்கு பங்களாக்கள் ஒதுக்கீடு.. விஜய் - புஸ்ஸி - ஆதவ்விற்கு இல்லை.. ஏன்? -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
தமிழ்நாட்டில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட புதிய டேட்டா -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
மாஸ் லுக்கில் சிங்கப்பெண் அதிரடிப்படையினர்! முற்றிலும் வேறான சீருடை.. காரணம் இதுதான்! -
ஆக்ஷனில் இறங்கிய தமிழ்நாடு அரசு.. மதுரையில் 11 கல் குவாரிகள் மூடல்! வெளிச்சத்திற்கு வந்த விதி மீறல்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 19 மாவட்டங்களில் கொட்டி தீர்க்கப்போகும் மழை! அடுத்த 2 மணி நேரம் உஷார்!












Click it and Unblock the Notifications