PMAY திட்டத்தில் 40 லட்சம் வீடுகளுக்கு மத்திய அரசு ஒப்புதல்.. யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்.. விவரம்
சென்னை: பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் வீடுகள் குறித்து நாடாளுமன்றத்தின் ராஜ்யசபாவில் உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினார்கள். இந்த கேள்விகளுக்கு ராஜ்யசபாவில் பதில் அளித்த ஊரக மேம்பாட்டுத்துறை இணையமைச்சர் சந்திரசேகர் பெம்மசானி, பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தில் நடப்பு நிதியாண்டில் 40 லட்சம் வீடுகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டிருக்கிறது என்றார். இந்த திட்டத்தில் வீடுகள் கட்ட விண்ணப்பிப்பது எப்படி, யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் என்று பார்ப்போம்.
பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் வீடுகள் குறித்து நாடாளுமன்றத்தின் ராஜ்யசபாவில் எம்பிக்கள் கேள்வி எழுப்பி இருந்தார்கள். இதற்கு நாடாளுமன்றத்தில் மத்திய ஊரக மேம்பாட்டுத்துறை இணை அமைச்சர் சந்திரசேகர் பெம்மசானி பதிலளித்தார்.

அப்போது அமைச்சர் சந்திரசேகர் பெம்மசானி பேசுகையில், "2025-26ம் நிதியாண்டில் அசாம், பீகார், சத்தீஷ்கார், கர்நாடகா, தமிழ்நாடு உள்பட 18 மாநிலங்களில் 84.37 லட்சம் வீடுகள் கட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. இதில் சுமார் 40 லட்சம் வீடுகளுக்கு (39.82 லட்சம்) இதுவரை ஒப்புதல் அளிக்கப்பட்டிருக்கிறது. அசாம், ராஜஸ்தான், பீகார், கர்நாடகா, தமிழ்நாடு உள்ளிட்ட 9 மாநிலங்களில் கடந்த டிசம்பர், ஜனவரி மாதங்களில் 46.56 லட்சம் வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு இருக்கிறது" என்று கூறினார்.
PMAY- U 2.0 திட்டத்தில் யாருக்கு வீடுகள் கிடைக்கும்: PMAY திட்டத்தில் குடிசைவாசிகள், எஸ்சி/எஸ்டி மக்கள், சிறுபான்மையினர், விதவைகள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் சமூகத்தின் பிற பிற்படுத்தப்பட்ட பிரிவில் ஏழ்மையில் உள்ள மக்களுக்கு வீடுகள் வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.மேலும் தெருவோர வியாபாரிகள், கைவினை கலைஞர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் குடிசைப்பகுதிகளில் வசிப்பவர்களுக்கு வீடுகள் வழங்கப்பட உள்ளது.
PMAY- U 2.0 திட்டத்தில் வீடுகள் பெற தகுதிகள்: PMAY- U 2.0 திட்டத்தில் வீடு பெற விரும்புவோருக்கு எங்குமே சொந்தமாக வீடு இருக்கக்கூடாது.EWS என்று சுருக்கமாக அழைக்கப்படும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய பிரிவு குடும்பங்களுக்கு, ஆண்டு வருமானம் ₹3 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். குறைந்த வருமானம் கொண்ட குழு குடும்பங்களுக்கு, ஆண்டு வருமானம் ₹3 லட்சம் முதல் ₹6 லட்சம் வரை இருக்க வேண்டும். நடுத்தர வருமானம் கொண்ட குழு குடும்பங்களுக்கு, ஆண்டு வருமானம் ₹6 லட்சம் முதல் ₹9 லட்சம் வரை இருக்க வேண்டும். நீங்கள் இதற்கு முன்னர் அரசாங்கத்தின் வீட்டுவசதி திட்டத்தின் மூலம் எந்தவொரு நிதி உதவியையும் பெற்றிருக்கக் கூடாது. ஏற்கனவே கட்டப்பட்ட வீடுகளுக்கு இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விண்ணப்பிக்க முடியாது. PMAY- U 2.0 திட்டத்தில் 2025-26ம் நிதியாண்டில் மத்திய அரசு ரூ.19,794 கோடி ஒதுக்கியுள்ளது.
விண்ணப்பிப்பது எப்படி: https://pmaymis.gov.in/pmaymis2_2024/PMAY_SURVEY/EligiblityCheck.aspx என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். அங்கு தகுதி மற்றும் தேவையான ஆவணங்கள் குறித்து குறிப்பிடப்பட்டிருக்கும். அதில் ஆதார் உள்ளிட்ட தேவையான அணைத்து ஆவணங்களையும் அப்லோடு செய்து விண்ணப்பிக்கலாம்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications