Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மத்திய அரசு ஊழியர்கள் vs தமிழக அரசு ஊழியர்கள்.. யாருக்கு எவ்வளவு போனஸ் உண்மையில் கிடைக்கும்

Subscribe to Oneindia Tamil

சென்னை: மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் மாநில அரசு ஊழியர்கள் போனஸ் குறித்து பலருக்கும் குழப்பம் இருக்கும்.. ஏனெனில் ரயில்வேயில் வேலை செய்வோருக்கு 78 நாள் போனஸ் என்றெல்லாம் செய்திகளில் பார்த்திருப்பார்கள். அதேபோல் மற்ற மத்திய அரசு ஊழியர்களுக்கு 30 நாட்கள் போனஸ் என்று பார்த்திருப்பார்கள். அதேநேரம் மாநில அரசு ஊழியர்களுக்கு 20 சதவீத போனஸ் என்று பார்த்திருப்பார்கள்.. ஆனால் செய்திகள் பார்த்தது வேறு.. நிஜத்தில் அவர்களுக்கு கிடைப்பது என்பது.. யாருக்கு எவ்வளவு போனஸ் தொகை கிடைக்கும் என்பதை பார்ப்போம்.

மத்திய அரசு ஊழியர்களுக்கு இந்த தீபாவளிக்கு 'அட்-ஹாக் போனஸ்' அறிவிக்கப்பட்டுளளது. இதன்படி அதிகபட்ச சம்பளம் வாங்குவோருக்கு குறைந்தபட்ச போனஸ் எவ்வளவு கிடைக்கும் என்பதை பார்ப்போம். மத்திய அரசு இந்த ஆண்டு குரூப் 'C' மற்றும் நான்-கெசட்டட் குரூப் 'B' ஊழியர்களுக்கு, 30 நாட்களின் ஊதியத்திற்கு சமமான அட்-ஹாக் போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. போனஸ் கணக்கீடு அதிகபட்ச மாதச் சம்பளமான ₹7,000 அடிப்படையில் செய்யப்படுகிறது. எனவே, அடிப்படையில் ₹7,000 அல்லது அதற்கு மேல் சம்பளம் வாங்குவோருக்குக் கிடைக்கும் அதிகபட்ச போனஸ் தொகை எப்படி கணக்கிடுகிறார்கள்.

Central government employees vs Tamil Nadu government employees Who really gets how much bonus

போனஸ்=(₹7,000×30)÷30.4≈∗∗₹6,908 ஆகும். அதாவது, எவ்வளவு அதிக சம்பளம் வாங்கினாலும், இந்த அட்-ஹாக் போனஸ் திட்டத்தின் கீழ் அவர்களுக்குக் கிடைக்கும் அதிகபட்ச போனஸ் தொகை ₹6,908 ஆகும்.

மத்திய அரசு ஊழியர்களுக்கு குறைந்தபட்ச போனஸ் எப்படி (குறைந்த சம்பளம் வாங்குவோருக்கு):

இந்தத் திட்டத்தின் கீழ் போனஸ் பெற தகுதியுள்ள ஒரு ஊழியரின் அடிப்படை மாதச் சம்பளம் ₹7,000-க்கும் குறைவாக இருந்தால், அவரது போனஸ் அவரது உண்மையான மாதச் சம்பளத்தை (Emoluments) அடிப்படையாகக் கொண்டு கணக்கிடப்படுகிறது.

உதாரணமாக: ஒரு மத்திய அரசு ஊழியரின் அடிப்படை மாதச் சம்பளம் ₹5,000 என்று இருந்தால்:

போனஸ்=(₹5,000×30)÷30.4≈∗∗₹4,934 ஆகும்.

இந்த போனஸ் பொதுவாக குரூப் 'C' மற்றும் நான்-கெசட்டட் குரூப் 'B' ஊழியர்கள், ராணுவ படையினர் மற்றும் யூனியன் பிரதேச ஊழியர்களுக்கு வழங்கப்படுகிறது. இவர்கள் உற்பத்தி-இணைக்கப்பட்ட போனஸ் (Productivity Linked Bonus - PLB) திட்டத்தின் கீழ் வர மாட்டார்கள்.

அதேபோல் ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் போனஸ் என்று செய்திகளில் பார்த்திருப்பீர்கள்.. ஆனால் அப்படி எல்லாம் மத்திய அரசு தந்துவிடாது.. ஏனெனில் செய்திகளில் வந்த தகவல் வேறு.. உண்மை என்னவென்றால், 78 நாட்கள் ஊதியத்திற்கு இணையான உற்பத்தித்திறன் இணைந்த போனஸ் தரப்படுகிறது. இது மத்திய அரசின் அனைத்து ஊழியர்களுக்கும் அல்லாமல், ரயில்வே ஊழியர்களுக்கு மட்டும் வழங்கப்படுகிறது.

இந்த போனஸ் தொகை எதன் அடிப்படையில் கணக்கிடப்படுகிறது:

அதிகபட்ச போனஸ் தொகை

தகுதியுள்ள ரயில்வே ஊழியர்கள் அனைவருக்கும் 78 நாட்களுக்கான ஊதியத்திற்கு இணையாக வழங்கப்படும் அதிகபட்ச போனஸ் தொகை ₹17,951 ஆகும். இந்தத் தொகை, ஊழியரின் உண்மையான சம்பளம் எவ்வளவு இருந்தாலும், போனஸ் கணக்கீட்டிற்கு நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச மாதாந்திர சம்பள உச்சவரம்பை அடிப்படையாக இருக்கும். அதாவது ஒருவரின் மொத்த சம்பளம் அடிப்படையில் கணக்கிடப்படாது. அவரது அடிப்படை சம்பளம் எவ்வளவோ அதன் அடிப்படையில் தான் கணக்கிடப்படும். அது எல்லாருக்குமே குறைவாகவே இருக்கும்.

கணக்கீட்டின் உச்சவரம்பு:

PLB கணக்கீட்டிற்கான மாதாந்திர சம்பள உச்சவரம்பு (அடிப்படை ஊதியம் + அகவிலைப்படி) ₹7,000 ஆக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. எனவே, ஒரு ஊழியரின் உண்மையான மாதச் சம்பளம் ₹7,000-ஐத் தாண்டினாலும், போனஸ் கணக்கீடு இந்த ₹7,000-ஐ வைத்தே செய்யப்பகிறது,

கணக்கீடு முறை:

போனஸ்=
ஒரு மாதத்தின் சராசரி நாட்கள் (30.4)
₹7,000×போனஸ் நாட்கள் (78)

போனஸ்=
30.4
₹7,000×78 : ₹17,951

எனவே நாம் முதலில் பார்த்தது போல் அதிகபட்ச சம்பளம் வாங்கும் ரயில்வே ஊழியருக்கு இந்த 78 நாட்கள் போனஸாக ₹17,951 கிடைக்கும்.

மற்ற மத்திய அரசு ஊழியர்களுக்கு (குரூப் 'C' மற்றும் நான்-கெசட்டட் குரூப் 'B' போன்றோர்க்கு) பொதுவாக 30 நாட்களின் ஊதியத்திற்கு இணையான 'அட்-ஹாக் போனஸ்' (₹6,908 அதிகபட்சம்) வழங்கப்படுகிறது.

தமிழக அரசு ஊழியர்கள் போனஸ் 2025

மாநில அரசு ஊழியர்களுக்கு 20 சதவீத போனஸ் தரப்படும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் நேற்று அறிவிப்பு வெளியிட்டார். 20 சதவீத போனஸ் எப்படி கணக்கிடப்படுகிறது. அவர்களுக்கு எவ்வளவு அதிகபட்சமாக கிடைக்கும்..குறைந்த பட்சமாக எவ்வளவு கிடைக்கும் என்பதை அரசே வெளியிட்டுவிட்டது. எனவே அந்த தகவல்களை மட்டும் பார்ப்போம்...

மத்திய அரசு ஊழியர்களுக்கு எப்படி கணக்கிடப்படுகிறதோ, அதுபோல் மிகை ஊதியத்தை கணக்கிட மாதாந்திர சம்பள உச்சவரம்பு ரூ.7 ஆயிரம் என்று நிர்ணயம் செய்யப்படுகிறதோ, அதே அடிப்படையில் தான் தமிழ்நாடு அரசும் வழங்கி வருகிறது. மத்திய அரசு ஊழியர்களுக்கு 30 நாள் அட்-ஹாக் போனஸ் வழங்கப்படுவது போல்.. மாநிலத்தில் 20 சதவீதம் என்ற விகிதத்தில் வழங்கப்படுகிறது.

மாநில அரசின் விளக்கத்தை அப்படியே பார்ப்போம். திருத்தப்பட்ட போனஸ் சட்டம் 2015-ன்படி, மிகை ஊதியம் பெறத் தகுதியான சம்பள உச்சவரம்பு ரூ.21 ஆயிரம் எனவும், அதன்படி மிகை ஊதியத்தை கணக்கிட மாதாந்திர சம்பள உச்சவரம்பு ரூ.7 ஆயிரம் எனவும் குறிப்பிடப்பட்டு உள்ளது.

இந்த உச்சவரம்பை தளர்த்தி, அனைத்து சி மற்றும் டி பிரிவு பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கும் 2024-25-ம் ஆண்டுக்கான மிகை ஊதியம் மற்றும் கருணைத்தொகை வழங்கப்படும்.

தமிழகத்தில் 2025ம் ஆண்டு அரசு ஊழியர்கள் யார் - யாருக்கு எவ்வளவு தீபாவளி போனஸ் கிடைக்கும்?

* லாபம் ஈட்டியுள்ள பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் சி மற்றும் டி பிரிவு தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு அந்தந்த நிறுவனங்களின் ஒதுக்கப்படக்கூடிய உபரி தொகையை கணக்கில் கொண்டு 8.33 சதவீதம் மிகை ஊதியம் மற்றும் 11.67 சதவீதம் கருணைத் தொகை என மொத்தம் 20 சதவீதம் வரை மிகை ஊதியம் மற்றும் கருணைத்தொகை வழங்கப்படும்.

* தமிழ்நாடு மின் பகிர்மானக்கழகம், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் ஆகிய பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையத்தில் பணிபுரியும் தகுதியுடைய சி மற்றும் டி பிரிவு தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு 8.33 சதவீதம் மிகை ஊதியம் மற்றும் 11.67 சதவீதம் கருணைத்தொகை என மொத்தம் 20 சதவீதம் மிகை ஊதியம் மற்றும் கருணைத்தொகை வழங்கப்படும்.

* ஒதுக்கக்கூடிய உபரி தொகை இல்லாத பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் சி மற்றும் டி பிரிவு தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு 8.33 சதவீதம் குறைந்தபட்ச மிகை ஊதியம் மற்றும் 1.67 சதவீதம் கருணைத்தொகை என மொத்தம் 10 சதவீதம் மிகை ஊதியம் மற்றும் கருணைத்தொகை வழங்கப்படும்.

* தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் மற்றும் சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியம் ஆகியவற்றில் பணிபுரியும் தகுதியுடைய சி மற்றும் டி பிரிவு பணியாளர்களுக்கு 8.33 சதவீதம் மிகை ஊதியம் மற்றும் 1.67 சதவீதம் கருணைத்தொகை வழங்கப்படும்.

* தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தில் பணிபுரியும் தகுதியுடைய சி மற்றும் டி பிரிவு பணியாளர்களுக்கு 8.33 சதவீதம் மிகை ஊதியம் வழங்கப்படும்.

* தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் தற்காலிக அடிப்படையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு ரூ.3 ஆயிரம் கருணைத்தொகையாக வழங்கப்படும்.

அரசு வெளியிட்ட இந்த கணக்கின்படி பார்த்தால், மிகை ஊதியம் பெறத் தகுதியுள்ள நிரந்தர தொழிலாளர்கள் குறைந்தபட்சம் ரூ.8,400 மற்றும் அதிகபட்சம் ரூ.16 ஆயிரத்து 800 வரை தீபாவளி போனஸ் பெறுவார்கள் மொத்தத்தில், தமிழ்நாடு அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் 2 லட்சத்து 69 ஆயிரத்து 439 தொழிலாளர்களுக்கு மொத்தம் ரூ.376.01 கோடி மிகை ஊதியம் மற்றும் கருணைத்தொகையாக வழங்கப்பட இருப்பதாக அரசு அறிவித்தள்ளது.

இறுதியாக அதிகபட்ச மாதாந்திர சம்பள வரம்பு ₹21,000 ஆகும். இதற்கு மேல் உள்ளவர்களுக்கு போனஸ் கிடைக்காது... ஒரு ஊழியரின் அடிப்படை சம்பளம் மற்றும் அகவிலைப்படி (Basic + DA) மாதத்திற்கு ₹21,000-க்கு மேல் இருந்தால் அவர்களுக்கு இந்த சட்டத்தின் கீழ் போனஸ் கிடைக்காது. ஐஏஎஸ், ஐபிஎஸ், உள்பட மத்திய, மாநில அரசின் உயர் அதிகாரிகள் யாருக்கும் போனஸ் கிடையாது. கடைநிலை ஊழியர்கள், இடை நிலை ஊழியர்களுக்கே போனஸ் கிடைக்கும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+