இந்தியர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடுவதில் மத்திய அரசு தோல்வியடைந்து விட்டது - ப.சிதம்பரம்
இந்தியர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடுவதில் மத்திய அரசு தோல்வியடைந்து விட்டதாக முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் ட்வீட்டரில் பதிவிட்டுள்ளார்.
சென்னை: 5.9 கோடி தடுப்பூசியை ஏற்றுமதி செய்த இந்தியா நாட்டு மக்களுக்கு 3 கோடி தடுப்பூசிதான் போட்டுள்ளது என்று முன்னாள் மத்திய அமைச்சரும். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ப. சிதம்பரம் குற்றம் சாட்டியுள்ளார்.
நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ள சூழலில், நோய் தொற்று எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

கடந்த ஆண்டு டிசம்பர் 25ம் தேதி 22,273 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருந்தது. நடப்பாண்டு ஜனவரி மாதத்தில் 2 முறை மட்டுமே, நாளொன்றுக்கு 20,000க்கும் அதிகமான பாதிப்பு பதிவாகி இருந்தது. இந்நிலையில், இரண்டரை மாதங்களில் இல்லாத அளவுக்கு ஒரேநாளில் நேற்று 35,838 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வழிகாட்டு நெறிமுறைகளை மக்கள் சரியாக பின்பற்றாததே நோய் தொற்று அதிகரிக்க காரணம் என சுகாதாரத்துறை அமைச்சர் ராஜேஷ் டோப் கூறியுள்ளார். பல மாநிலங்களில் இரவு நேர பொதுமுடக்கம் மீண்டும் அமல்படுத்தப்பட்டுள்ளது. நாக்பூரில் ஒருவாரம் லாக்டவுன் அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கொரோனா தடுப்பூசி போடுவதில் இந்திய அரசு தோல்வியடைந்து விட்டதாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
मुझे यह साझा करते हुए गर्व महसूस हो रहा है कि भारत ने कोविड -19 टीकों की 5.9 करोड़ खुराक निर्यात की है।
— P. Chidambaram (@PChidambaram_IN) March 18, 2021
साथ ही, मैं निराश हूं कि हमने भारतीय नागरिकों को केवल 3 करोड़ खुराक ही अब तक दी है।
केंद्र सरकार देशवासियों की टीकाकरण के रोलिंग आउट में बुरी तरह विफल रही है।
கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவது பற்றியும் தடுப்பூசி போடப்பட வேண்டியதன் அவசியம் குறித்தும் ப. சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 5.9 கோடி கொரோனா தடுப்பூசியை ஏற்றுமதி செய்த இந்தியா நாட்டு மக்களுக்கு 3 கோடி தடுப்பூசிதான் போட்டுள்ளது என்று ப.சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
क्या इस बात पर किसी को आश्चर्य है कि संक्रमण की दर हर दिन तेजी से बढ़ रही है?
— P. Chidambaram (@PChidambaram_IN) March 18, 2021
इस दर पर वायरस और टीकाकरण के बीच की दौड़, वायरस द्वारा जीती जाएगी।
सरकार को मांग पर टीकाकरण की अनुमति देनी चाहिए और पूर्व-पंजीकरण सहित नौकरशाही बाधाओं से छुटकारा पाना चाहिए।
ஒவ்வொரு நாளும் நோய்த்தொற்றின் வீதம் அதிகரித்து வருகிறதா என்று யாராவது யோசிக்கிறார்களா? என்று கேள்வி எழுப்பியுள்ள ப. சிதம்பரம், வைரஸ் பரவல் வேகம் அதிகரிப்பதால் தேவைக்கேற்ப தடுப்பூசி போடுவதை அரசாங்கம் அனுமதிக்க வேண்டும் என்றும் முன் பதிவு உள்ளிட்ட அதிகாரத்துவ தடைகளில் இருந்து விடுபட வேண்டும் என்றும் பதிவிட்டுள்ளார்.
நடமாடும் முகாம்கள் மூலமாகவும் கொரோனா தடுப்பூசிபோட மத்திய அரசு அனுமதிக்க வேண்டும் என்றும் ப.சிதம்பரம் பதிவிட்டுள்ளார்.
-
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள்












Click it and Unblock the Notifications