விவசாயிகளுக்கு குட்நியூஸ் வருதா? பிஎம் கிசான் யோஜனா திட்டத்தின் சர்ப்ரைஸ் எப்போது? இதை நோட் பண்ணுங்க
சென்னை: விவசாயிகளின் நலனுக்காக பல்வேறு அறிவிப்புகளையும், சலுகைகளையும் வெளியிட்டு வரும் மத்திய அரசு, விரைவில் இன்னொரு அறிவிப்பை வெளியிடலாம் என்கிறார்கள்.
பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனா (பிஎம் கிசான்) அதாவது பிரதம மந்திரி கௌரவ நிதி உதவித்திட்டம் என்ற திட்டமானது, கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் உள்ள கோடிக்கணக்கான விவசாயிகளை தன்னம்பிக்கை கொண்டவர்களாக மாற்றும் வகையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

நேரடி பலன்கள்: இந்த திட்டத்தின் மூலம் மத்திய அரசு சார்பாக விவசாயிகளுக்கு பண உதவி செய்யப்பட்டு வருகிறது... அந்தவகையில், ஒரு தவணைக்கு 2000 ரூபாய் வீதம், ஒரு ஆண்டுக்கு மொத்தம் 6000 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. இந்தப் பணம் பயனாளிகள் வங்கி கணக்கில் நேரடியாகவே டெபாசிட் செய்யப்படுகிறது. இதன் மூலம் லட்சக்கணக்கான விவசாயிகள் பயன்பெற்று வருகின்றனர்
இந்த திட்டம் அறிவிக்கப்பட்டு, பயனாளிகள் தங்கள் வங்கிக்கணக்கில் இதுவரை மொத்தம் 15 தவணைகளாக 2000 ரூபாய் பெற்றிருக்கிறார்கள்.. தற்போது 2024 வருடம் துவங்கியிருக்கும் நிலையில், பிரதமர் கிசான் திட்டத்தின் நிதியுதவி அதிகரிப்பு குறித்து 2 தகவல்கள் கசிந்து கொண்டிருக்கின்றன.
தவணை முறை: விவசாயிகளுக்கு வழங்கப்படும் தவணை மூன்றிலிருந்து 4ஆக உயர்த்தப்படக்கூடலாம் என்கிறார்கள்.. அப்படியானால் 4 மாதங்களுக்கு ஒருமுறை இந்த தவணை விவசாயிகளுக்கு செலுத்தப்படலாம்.. ஒருவேளை, இந்த தொகை உயர்த்தப்பட்டால், 3 மாதங்களுக்கு ஒருமுறை அதாவது காலாண்டு அடிப்படையில் நிதியுதவியை விவசாயிகள் பெறலாம்... இந்த நிதியாண்டின் கடைசி தவணையை இந்த மாதம் (2024 ஜனவரி) அல்லது பிப்ரவரியில் 16வது தவணையாக பெறுவார்கள்.
அதேபோல, வருடத்திற்கு இனி 6000 ரூபாயில் இருந்து 8000 ரூபாயாக உயர்த்தலாம் என்றும் தகவல்கள் வருகின்றன.. ஒரு தவணையை மூவாயிரம் ரூபாயாக அதிகரித்து தவணையை அதிகரிக்காவிட்டால், 3 தவணைகளாக என மொத்தம் வருடத்துக்கு 9000 ரூபாய் பெறக்கூடும்.
தகவல்கள்: ஆனால், இதுகுறித்தெல்லாம் உறுதியான தகவல்கள் இதுவரை வெளிவரவில்லை. இந்த இரண்டு யூகங்களில் எது நடந்தாலும், அது விவசாயிகளுக்கு நன்மைகளை தரக்கூடியவையாகவே இருக்கும் என்பதிலும் சந்தேகமில்லை.
2024ம் ஆண்டுக்கான பட்ஜெட் தயாரிப்பு நடப்பதாக தெரிகிறது.. இந்த பட்ஜெட்டில் இதுகுறித்த தகவல் வெளியாகலாம்.. ஒருவேளை, விவசாயிகளுக்கான உதவித்தொகையை அரசு 6000 ரூபாயில் இருந்து 8000 ரூபாயாக உயர்த்தினால், சுமார் 22 கோடி ரூபாய் கூடுதலாக செலவாகும் என்றும் கணக்கிடப்படுகிறது.
ஆனால், நிதியின் தொகையை அதிகரிக்கும் திட்டம் எதுவும் இல்லை என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுவிட்டது. அப்படியானால், வரும் எம்பி தேர்தலுக்குள், விவசாயிகளுக்கான சாதகமான அறிவிப்பு வரக்கூடும் என்றும், இதனால், விவசாயிகளின் ஆதரவை மத்திய அரசு எளிதாகவே பெறக்கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஆன்லைன் விண்ணப்பம்: விவசாயிகள் இந்த திட்டத்தில் சேர வேண்டுமானால், அதற்காக அலுவலகம் செல்ல வேண்டியதில்லை.. செல்போனிலேயே, ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இதற்கு கீழ்காணும் வழிமுறைகளை பின்பற்றினாலே போதும்.
- முதலில், https://pmkisan.gov.in/. என்ற அதிகாரப்பூர்வமான இணைய தளத்திற்கு செல்ல வேண்டும்.
- "உழவர் மூலைக்கு" (Farmers Corner) சென்று "புதிய உழவர் பதிவு" (New Farmer Registration) என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.
- இப்போது ஒரு புதிய ஸ்கிரீன் தென்படும். இதில், ஆதார் எண் (Aadhaar No) , படக்குறியீட்டை (Image Code) பதிவிட்டு, "தொடர இங்கே கிளிக் செய்க" என்ற ஆப்ஷனையும் கிளிக் செய்ய வேண்டும்.
- இப்போது ஸ்கிரீனில் தெரியும், பதிவு படிவம் (Registration Form) என்ற ஆப்ஷனில், உங்கள் மாநிலம் (State), மாவட்டம், கிராமம், தொகுதி, துணை மாவட்டம், பாலினம், பெயர், வகை, ஐடி, ஐஎஃப்எஸ்சி குறியீடு, கணக்கு எண், வங்கி பெயர், மொபைல் எண், பிறந்த தேதி, தாய் / தந்தை / கணவரின் பெயர் மற்றும் முகவரி போன்ற தகவல் கேட்கப்படும்.
- விவசாய நிலத்தின் தகவல்களையும் வழங்க, கணக்கெடுப்பு அல்லது கணக்கு எண், தட்டம்மை எண், பரப்பளவு போன்றவற்றையும் பதிவு செய்ய வேண்டும்.
- இறுதியில், "சேமி" (Save) என்பதை கிளிக் செய்தால், உங்கள் விண்ணப்பம் பதிவு செய்யப்படும்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications