இந்தியர்களுக்கு ரூ.46,715 நிதி உதவி? அனைத்து ஏழைகளுக்கும் பணம்? மத்திய அரசு விளக்கம்.. கவனம் மக்களே
சென்னை: பொருளாதார நெருக்கடியின் தாக்கத்தை குறைக்க மத்திய நிதியமைச்சகம் ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் ரூ.46,715 நிதியுதவியாக வழங்குவதாக வாட்ஸ்அப்பில் தகவல் ஒன்று பரவி வருகிறது. இதுகுறித்து மத்திய அரசு விளக்கம் ஒன்றை தந்துள்ளது.. அது என்ன தெரியுமா?
சோஷியல் மீடியாவில் அரசு திட்டங்களை பற்றி பல தவறான செய்திகள் தினமும் பரவி வருகின்றன. குறிப்பாக பண உதவி, புதிய திட்டம், இலவச சலுகை போன்ற விஷயங்கள் வந்தால் மக்கள் உடனே நம்பி ஷேர் செய்கிறார்கள்.

ரூ.46,715 வழங்கும் அரசு?
இதனை பயன்படுத்தி சில மோசடி கும்பல்கள், வேண்டுமென்றே பொய்யான தகவல்களை உருவாக்கி வாட்ஸ்அப், ஃபேஸ்புக், எக்ஸ் போன்ற தளங்களில் வைரலாக்குகின்றன. இதனால் எது உண்மை, எது பொய் என்பதை பொதுமக்கள் அறிந்து கொள்வது கடினமாகி வருகிறது.
அந்தவகையில் சமீப நாட்களாகவே ஒரு செய்தி சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. அதாவது நாட்டில் நிலவும் நிதி நெருக்கடியை கருத்தில் கொண்டு, மத்திய அரசு அனைத்து பொது மக்களுக்கும் ரூ.46,715 வழங்க முடிவு செய்துள்ளதாக அந்த செய்தியில் கூறப்பட்டது.
இந்த தொகையை பெற, ஒரு குறிப்பிட்ட இணைய இணைப்பை கிளிக் செய்து, தனிப்பட்ட விவரங்களை பதிவு செய்ய வேண்டும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டது. இதை பார்த்த பலரும், அந்த இணைப்புகளை ஆர்வத்துடன் திறப்பதில் முனைப்பு காட்டுகிறார்கள்..
இதனிடையே இந்த செய்தி அரசின் கவனத்திற்கு வந்ததும், மத்திய அரசின் பத்திரிகை தகவல் பணியகம் (PIB) உடனடியாக விளக்கம் அளித்துள்ளது..
மத்திய அரசு மறுப்பு - விளக்கம்
அதில், "முற்றிலும் பொய்யான செய்தி, மத்திய நிதி அமைச்சகம் இதுபோன்ற எந்த திட்டத்தையும் அறிவிக்கவில்லை.. இத்தகைய இணைப்புகளை கிளிக் செய்ய வேண்டாம். இது ஒரு பெரிய இணைய மோசடி" என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது..
அதிலும் அரசுத் திட்டம், பண உதவி என்ற வார்த்தைகள் வந்தாலே மக்கள் அதிக ஆர்வம் காட்ட துவங்கிவிடுகிறார்கள்.. ஏழை, எளிய மக்களின் இந்த நம்பிக்கையைதான் சில ஆன்லைன் கிரிமினல்கள் தவறாகவும், தங்களுக்கு சாதகமாகவும் பயன்படுத்துகின்றனர்.
போலி இணைப்புகளை திறக்க கூடாது
போலி இணைப்புகளை திறந்தால், வங்கி விவரங்கள், ஆதார், மொபைல் எண் போன்ற தனிப்பட்ட தகவல்கள் திருடப்பட வாய்ப்பு உள்ளது.
அதனால் அறிமுகமில்லாத எண்களிலிருந்து வரும் செய்திகளை நம்ப வேண்டாம். அரசு தொடர்பான தகவல்களை அதிகாரப்பூர்வ இணையதளங்கள் மற்றும் PIB போன்ற நம்பகமான ஆதாரங்கள் மூலம் மட்டுமே சரிபார்க்க வேண்டும். எச்சரிக்கையாக இருந்தாலே இதுபோன்ற மோசடிகளில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள முடியும்.
கடந்த சில மாதங்களிலும் இதேபோன்று உதவித்தொகை வழங்கப்படும் என கூறி பல வதந்திகள் பரவின. ஒவ்வொரு முறையும் அரசு விளக்கம் அளித்தாலும், புதிய வடிவில் மீண்டும் மோசடிகள் தொடங்குகின்றன.
அவசரப்பட்டு ஷேர் செய்ய கூடாது
எனவே குடும்பத்தில் உள்ள முதியவர்கள், குறைந்த அளவு டிஜிட்டல் அறிவுள்ளவர்கள் ஆகியோருக்கு இதுபற்றி தெளிவாக சொல்லி வைக்க வேண்டும். எந்த அரசு திட்டமும் எஸ்எம்எஸ் அல்லது வாட்ஸ்அப் லிங்க் மூலம் பதிவு கேட்காது என்பதை அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது..
ஒருவேளை வாட்ஸ்அப்களில் இதுபோன்ற செய்திகள் பரவினால், அதன் உண்மைத்தன்மை அறியாமல் வேறு யாருக்கும் ஷேர் செய்யக்கூடாது.. மேலும் அந்த தகவல் உண்மையா? என்று அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை பார்த்து உறுதி செய்த பிறகே நம்ப வேண்டும் என்று அலர்ட் செய்யப்பட்டுள்ளது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications