Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

முதல்வர் ஸ்டாலின் மட்டுமில்லை.. குடும்பத்தின் முக்கியஸ்தர்களும் துபாயில்! உன்னிப்பாக கவனிக்கும் பாஜக

Subscribe to Oneindia Tamil

சென்னை: முதல்வர் ஸ்டாலின் மட்டுமின்றி, அவரது குடும்பத்தாரும், திமுக கட்சியினர் சிலரும் துபாய் சென்றுள்ளதால் மத்திய உளவு அமைப்புகள் இந்த சுற்றுப் பயணத்தை உன்னிப்பாக கவனித்து வருகின்றன.

Recommended Video

    Stalin Dubai Visit பற்றி குவியும் விமர்சனங்கள் அதற்கான பதிலடிகள்

    நான்கு நாள் அரசுமுறைப் பயணமாக சிறப்பு தனி விமானத்தில் துபாய் சென்றிருக்கிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின். இந்த அரசுமுறை பயணத்தில் அரசு அதிகாரிகள் மட்டுமல்லாமல் ஸ்டாலினின் குடும்பத்தினரும் தனி விமானத்தில் சென்றிருக்கிறார்கள்.

    அவர்கள் யார் யார் என்பது பற்றித்தான் அரசியலில் பரபரப்பாகப் பேசப்படுகிறது.

    யார் யார் போனார்கள்

    யார் யார் போனார்கள்

    முதல்வர் ஸ்டாலினுடன் அமைச்சர் தங்கம் தென்னரசு, முதல்வரின் செயலாளர்களான ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் உதயச்சந்திரன், உமாநாத், சண்முகம், அனுஜார்ஜ் ஆகியோர் பயணப்பட்டனர். அதிகாரிகளை தவிர, ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின், ஸ்டாலினின் உதவியாளர் தினேஷ், ஸ்டாலினின் மருமகள் கிருத்திகா உதயநிதி, பேரன்கள் இன்பன் உதயநிதி, நளன் சபரீசன், பேத்தி தன்மயா உதயநிதி ஆகியோர் ஸ்டாலினுடன் சென்றனர்.

    உதயநிதி ஸ்டாலின்

    உதயநிதி ஸ்டாலின்

    இவர்களைத் தவிர செல்வராஜ்முருகையன், நிதின்ஜான் ஜாமுவேல், கிரிஸ்காந்தன் ஆகியோர் சென்றுள்ளனர். இவர்கள் மூவரும் யாரென்று பலருக்கு தெரியவில்லை. இது ஒருமுறமிருக்க, ஸ்டாலினின் மகன் உதயநிதியும், மருமகன் சபரீசனும் ஒரு நாளுக்கு முன்பாகவே துபாய் சென்று விட்டனர். முதல்வர் ஸ்டாலின், அவரது மனைவி துர்கா மற்றும் அரசு அதிகாரிகளுக்கு துபாயில் உள்ள ஓபராய் நடசத்திர ஹோட்டலில் லக்சுரி ஷூட் போடப்பட்டு அங்கு தங்கியுள்ளனர்.

    திமுகவினர் தங்கியுள்ளனர்

    திமுகவினர் தங்கியுள்ளனர்

    அதேபோல உதயநிதி, சபரீசன் மற்றும் ஸ்டாலினின் குடும்பத்தினருக்கு துபாயில் உள்ள பிரமாண்டமான மால் ஒன்றில் இருக்கும் நட்சத்திர ஹோட்டலில் ரூம் போடப்பட்டு அங்கு தங்கியுள்ளனர். இவர்களைத் தவிர திமுக எம்.பி.க்கள், திமுக இளைஞரணியினர் என ஒரு பெரிய திமுக பட்டாளமே துபாயில் குவிந்துள்ளதாம். இவர்களெல்லாம் எதற்கு போனார்கள்? போகிறார்கள்? என்பது குறித்தும் பாஜக உற்று கவனித்து வருகிறது.

    தீவிர கண்காணிப்பு

    தீவிர கண்காணிப்பு

    இதுமட்டுமல்ல, மத்திய அரசின் புலனாய்வு அமைப்புகளும் துபாயில் முகாமிட்டுள்ளனர். ஸ்டாலின் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளை உற்று கவனிக்கும் புலனாய்வுத்துறையினர், ஸ்டாலினை யார் யார் சந்திக்கிறார்கள்? அவர்களின் பின்னணி என்ன? சந்திப்பின் நோக்கம் என்ன? உதயநிதி மற்றும் சபரீசனை யாரெல்லாம் சந்திக்கிறார்கள்? என்கிற பல்வேறு கேள்விகளுக்கான விடைகளைத் தேடி உற்று கவனித்து வருகிறதாம் மத்திய அரசின் புலனாய்வு அமைப்புகள்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+