அண்ணாமலையால் குறி வைத்து தாக்கப்படும் திமுக.. திடீரென இறங்கி அடிக்கும் எல் முருகன்.. என்ன காரணம்?
சென்னை: அந்த பக்கம் அண்ணாமலை திமுகவை கடுமையாக விமர்சிக்கும் நிலையில், இப்போது இந்த பக்கம் மத்திய இணையமைச்சர் எல் முருகன் தன் பங்கிற்கு தீவிரமாக திமுகவை தாக்க தொடங்கி உள்ளார். மத்திய அமைச்சர் எல் முருகன் தமிழகத்தில் எம்பி தொகுதியில் போட்டியிட போவதாக கூறப்படும் நிலையில் அவரும் அண்ணாமலைக்கு நிகராக திமுகவிற்கு எதிராக தீவிர அரசியலை முன்னெடுத்துள்ளார்.
பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவராக இருந்த தமிழிசை செளந்தரராஜன் தெலங்கானா மாநிலத்தின் ஆளுநராக 2019 ஆண்டு செப்டம்பர் மாதம் நியமிக்கப்பட்டார் அவருக்குப் பிறகு, நீண்ட நாட்களாக தமிழ்நாட்டில் பாரதிய ஜனதா கட்சிக்கு புதிதாக தலைவர்கள் யாரும் நியமிக்கப்படாமல் இருந்த நிலையில் எல். முருகன் தலைவராக நியமிக்கப்பட்டார். எல் முருகன் தலைமையில் தான் தமிழக சட்டசபை தேர்தலை அதிமுக உடன் கூட்டணி அமைத்து பாஜக எதிர்கொண்டது. சுமார் 20 வருடம் கழித்து பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் தேர்தலில் வெற்றி பெற்றனர்.4 பேர் தமிழக சட்டசபையில் பாஜக சார்பில் எம்எல்ஏவாக மாறினார்கள். அதுமட்டுமின்றி வாக்குவங்கி கணிசமாக வளர்ந்திருந்தது.

இதையடுத்து எல் முருகனுக்கு மத்திய இணைமைச்சர் பதவி கொடுத்து அழகு பார்த்த பாஜக, மாநில தலைவராக அண்ணாமலையை நியமித்தது. அண்ணாமலை திமுகவை தினமும் எதாவது ஒரு பிரச்சனையில் திமுகவை கடுமையாக விமர்சித்து வருகிறார். வரும் 2024 நாடாளுமன்ற தேர்தல் தான் தான் , மாநில தலைவராக அண்ணாமலை சந்திக்க போகும் முதல் தேர்தலாக இருக்கிறது.
அண்ணாமலை தலைமையிலான பாஜகவினர் இதுவரை இல்லாத அளவிற்கு திமுகவை சமூக வலைதளங்களில் தினமும் விமர்சித்து வருகிறார்கள். தினமும் ஏதாவது ஒரு மக்கள் பிரச்சனையில் திமுகவை டார்க்கெட் செய்து அரசியல் செய்து வருகிறார்கள். இந்த சூழலில் மிக்ஜாம் புயலுக்கு சில நாட்கள் முன்பு இருந்தே மத்திய இணையமைச்சர் எல்முருகனும் திமுகவிற்கு எதிராக அரசியலை தீவிரப்படுத்தி உள்ளார். நீலகிரி மாவட்டத்தை குறிவைத்து வரும் இவர், ஆ ராசாவிற்கு எதிராக களம் காண்பார் என்று தெரிகிறது. அங்கு தீவிரமாக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் அண்மைக்காலமாக மத்திய அமைச்சர் எல் முருகன் திமுகவிற்கு எதிராக கடும் விமர்சனங்களை முன்வைத்து அரசியல் செய்து வருகிறார். அண்ணாமலை போல் இவரும் திமுகவை டார்க்கெட் செய்து விமர்சித்து வருகிறார். நேற்று ஸ்ரீரங்கம் கோயிலில் பக்தர்கள் தாக்கப்பட்ட விவகராத்தில் கருத்து தெரிவித்த எல் முருகன், மத்திய இணை அமைச்சர் எல். முருகன் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் , கோயிலுக்கு வரும் பக்தர்களை அநாகரீகமாக நடத்துவதையும், இந்து கோயில் பாரம்பரியத்தை சீர்குலைப்பதிலும் தொடர்ந்து முழு முச்சுடன் செயல்பட்டு வரும் அறநிலையத்துறைக்கும், தமிழக அரசுக்கும் எனது கடும் கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
ஸ்ரீரங்கம் கோயிலுக்குள் பக்தர்கள் மீது சரமாரி தாக்குதல்..! கோயிலுக்கு வரும் பக்தர்களிடம் பணம் பறிக்கும் அறநிலையத்துறை..! தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறையே தேவையில்லை. இந்துக்களை பிடிக்காத திமுக அரசிடம் வேறு எதை எதிபார்க்க முடியும்..! தமிழகத்தில் பாஜக ஆட்சியமைத்தால் அறநிலையத்துறை இருக்காது" என்று காட்டமாக தெரிவித்தார்.
முன்னதாக சென்னை வெள்ளம் குறித்து பேசிய எல் முருகன், சென்னையை சிங்கப்பூராக்கி கூவத்தில் படகு ஓட்டுவோம் எனக் கூறியவர்கள் இன்று சென்னையையே கூவமாக மாற்றி விட்டார்கள் என்று குற்றம்சாட்டினார். சென்னை வெள்ளத்தை பொறுத்தவரை திமுக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கையோ அல்லது பாதிப்புக்கு பிறகு மீட்பு நடவடிக்கைகளிலோ முறையாக செயல்படவில்லை என்றும் குற்றம்சாட்டினார். அடுத்தடுத்து திமுகவிற்கு எதிராக எல் முருகனும் கருத்து தெரிவித்து வருகிறார். அந்த பக்கம் அண்ணாமலை திமுகவை கடுமையாக விமர்சிக்கும் நிலையில், இப்போது இந்த பக்கம் மத்திய இணையமைச்சர் எல் முருகன் தன் பங்கிற்கு தீவிரமாக திமுகவை தாக்க தொடங்கி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications