இனி TUTICORIN இல்லை.. THOOTHUKUDI.. தூத்துக்குடி விமான நிலையம் பெயர் மாற்றம்!
டெல்லி: தூத்துக்குடி விமான நிலையத்தின் பெயரை ஆங்கிலத்தில் அதிகாரப்பூர்வமாக "Thoothukudi Airport" என்று மாற்றி மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ராம்மோகன் நாயுடு அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
தூத்துக்குடி, தென்தமிழகத்தின் வளர்ந்து வரும் தொழில் நகரமாக தூத்துக்குடி விளங்குகிறது. தூத்துக்குடி நகரின் வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக போக்குவரத்து வசதி அமைந்துள்ளது. விமான போக்குவரத்து, கப்பல் போக்குவரத்து, ரயில் போக்கு வரத்து, சாலை போக்குவரத்து என அனைத்து விதமான போக்குவரத்து வசதியையும் தூத்துக்குடி பெற்றுள்ளது. தூத்துக்குடியை அடுத்த வாகைகுளத்தில் விமான நிலையம் அமைந்துள்ளது. இந்த விமான நிலையம் 1992 ஆம் ஆண்டு திறக்கப்பட்டது.

'டூட்டுக்கொரின்' ஏர்போர்ட் (Tuticorin) என்ற பெயரினை 'தூத்துக்குடி விமான நிலையம்' என்று மாற்றம் செய்வதற்கான கோரிக்கை தொடர்ந்து எழுந்து வந்தது.
விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சரிடம் மத்திய இணை அமைச்சர் எல். முருகன் உள்ளிட்ட பலர் மனு அளித்திருந்தனர். 'டூட்டுக்கொரின்' எனும் காலனித்துவ காலத்தில் பிரபலப்படுத்தப்பட்ட ஆங்கிலமயமாக்கப்பட்ட பெயரிடலை 'தூத்துக்குடி விமான நிலையம்' என நகரின் அசல் தமிழ்ப் பெயராக மாற்ற வேண்டும் எனக் கோரிக்கைகள் எழுந்து வந்தன.
இந்நிலையில், தூத்துக்குடி விமான நிலையத்தின் பெயரை ஆங்கிலத்தில் அதிகாரப்பூர்வமாக "Thoothukudi Airport" என்று மாற்றி மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ராம்மோகன் நாயுடு அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
-
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
விஜய் எடுக்கும் ரிஸ்க்.. பரந்தூர் விமான நிலையத்தால் பல விஷயங்களை இழக்க வேண்டியிருக்கும்! -
பரந்தூர் விமான நிலைய பணி நிறுத்தம்.. சிப்காட் பூங்கா அமைக்க முடிவு? விஜய்யின் மெகா திட்டம் -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications