சட்டப்பேரவை கூட்டம்.. விஜய்க்கு காத்திருக்கும் சிக்கல்! பெரிய பிளானுடன் இறங்கும் எதிர்க்கட்சிகள்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக சட்டமன்ற கூட்டம் இன்று கூடுகிறது. இந்த கூட்டத்தில் ஆளும் கட்சி மீது ஏராளமான விமர்சனங்களுடன் எதிர்க்கட்சிகள் களமிறங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக தமிழகம் முழுவதும் நடக்கும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை குறித்து சரமாரியாக கேள்விகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டிருப்பதாக சொல்லப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகம் யாரும் எதிர்பார்க்காத வகையில், சட்டமன்ற தேர்தலில் பெரிய வெற்றியை பெற்றிருந்தது. இருப்பினும் ஆட்சி அதிகாரத்திற்கு வந்த பின்னர்தான் பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொண்டிருக்கிறது.

Challenges for CM Vijay

தேர்தல் வாக்குறுதிகள்

குறிப்பாக தேர்தல் வாக்குறுதியாக அறிவித்த திட்டங்களை நிறைவேற்ற தேவையான நிதி அரசிடம் இல்லை. முதலமைச்சர் விஜய் மொத்தம் 436 வாக்குறுதிகளை கொடுத்திருந்தார். அதில், தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம், திருமணத்திற்கு 1 சவரன் தங்க நகை திட்டம், மகளிருக்கு அனைத்து பேருந்துகளிலும் இலவச பயணம், ஆண்டுக்கு 6 இலவச கேஸ் சிலிண்டர்கள் போன்றவை மிக முக்கியமானதாகும். இந்த திட்டங்களை நிறைவேற்ற தேவையான அளவுக்கு நிதியை திரட்டுவதில்தான் புதிய அரசு சிக்கலை எதிர்கொண்டிருக்கிறது.

விஜய் மீது அதிருப்தி

விஜய் தேர்தல் வாக்குறுதியாக கொடுத்திருந்த பயிர்க்கடன் தள்ளுபடியை, சமீபத்தில் நிறைவேற்றிருந்தார். ஆனால், போதுமான நிதி இல்லாததால் பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய முடியவில்லை. எனவே, இந்த விஷயத்தில் விவசாயிகளின் எதிர்ப்பை விஜய் எதிர்கொண்டிருந்தார். இப்படி இருக்கையில் மற்ற திட்டங்களிலும் அரசு இப்படித்தான் சொதப்பப்போகிறதா? என்று எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியிருக்கின்றனர். இந்த விவகாரத்தை எதிர்க்கட்சிகள் சட்டமன்றத்தில் எழுப்ப இருக்கின்றன.

பெண்களுக்கு எதிரான குற்றங்கள்

அதேபோல, தமிழகத்தில் நடக்கும் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் குறித்தும் எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்ப இருக்கின்றன. கடந்த 15ம் தேதி மட்டும், ஒரே நாளில் ஏராளமான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் தமிழகத்தில் பதிவாகியிருக்கின்றன.

கும்மிடிப்பூண்டியில் கஞ்சா போதையில் இருந்த கும்பல், 3 வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்திருந்தது. அதேபோல பூந்தமல்லியில் 7 வயது சிறுமி, காஞ்சிபுரத்தில் 10 வயது சிறுமி, திருவள்ளூரில் 7ம் வகுப்பு பள்ளி மாணவி உள்ளிட்டோர் பாலியல் வன்கொடுமையை எதிர்கொண்டிருந்தனர்.

சிங்கப்பெண்கள் அதிரடி படை

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தடுக்கதான், சிங்கப்பெண்கள் அதிரடிப்படை உருவாக்கப்பட்டிருக்கிறது. இருந்தும், குற்றங்கள் குறையவில்லையே! என எதிர்க்கட்சிகள் சரமாரியான விமர்சனங்களை அடுக்கியிருந்தனர்.

அதேபோல தமிழகம் முழுவதும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை சீரியஸாகியிருக்கிறது. இது குறித்தும் சட்டமன்றத்தில் எழுப்ப எதிர்க்கட்சிகள் ரெடியாகியுள்ளன.

தமிழ்த்தாய் வாழ்த்து

இது தவிர இந்த கூட்டத்தொடரில் வேறு சில சிக்கல்களும் எழ வாய்ப்பு உள்ளது. அதாவது முந்தைய ஆளுநர் இருந்தபோது முதலில் தேசிய கீதம் இசைக்கப்படவில் என்று கூறி அவர் வெளிநடப்பு செய்திருந்தார். அந்த வகையில் இந்த கூட்டத்தில், ஆளுநர் ஆர்லேக்கரும் இதேபோல சர்ச்சையை கிளப்ப வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+