குளு குளுன்னு கொட்டப்போகுது மழை.. 2 மண்டலங்களுக்கு வானிலை மையம் அலர்ட்! நீலகிரியே நடுங்கப்போகுது

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் இன்று ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்வதற்கு வாய்ப்பு உள்ளதாகவும், நீலகிரி மாவட்டத்தில் அடுத்த 2 நாட்களுக்கு கடுமையான உறை பனி நிலவும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்து உள்ளது.

இது குறித்து வெளியிட்டு உள்ள அறிவிப்பில், "கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, ஜனவரி 30 ஆம் தேதி தென் தமிழகம், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக் கூடும். ஏனைய பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக் கூடும். உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனி மூட்டத்திற்கு வாய்ப்பு உள்ளது.

Chance of light rain at a few places in Tamil Nadu today - Chennai met said

ஜனவரி 31 ஆம் தேதி தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக் கூடும். உள் தமிழகத்தில் சில மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனி மூட்டத்திற்கு வாய்ப்பு உள்ளது.

பிப்ரவரி 01 ஆம் தேதி மற்றும் பிப்ரவரி 02 ஆம் தேதி தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். பிப்ரவரி 03 ஆம் தேதி முதல் பிப்ரவரி 05 ஆம் தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக் கூடும்.

உறைபனி எச்சரிக்கை: ஜனவரி 30 ஆம் தேதி மற்றும் ஜனவரி 31 ஆம் தேதி தமிழகத்தின் நீலகிரி மாவட்டத்தின் ஓரிரு இடங்களில் இரவு / அதிகாலை வேளையில் உறைபனி ஏற்பட வாய்ப்பு உள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு: அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும். அதிக பட்ச வெப்ப நிலை 30 - 31 டிகிரி செல்சியஸை ஒட்டியும் மற்றும் குறைந்தபட்ச வெப்ப நிலை 23 - 24 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக் கூடும்.

கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டி மீட்டரில்): ஏதுமில்லை.

மீனவர்களுக்கான எச்சரிக்கை: ஏதுமில்லை." என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+