மக்களே அலார்ட்.. சென்னை உள்பட 15 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு
சென்னை: அடுத்த 3 மணி நேரத்துக்கு தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட 15 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. அந்த வகையில், கடந்த வாரத்தில் சில தினங்களாக தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்தது.
அதனை தொடர்ந்து சில நாட்களாக நாட்களாக பெரிதாக மழை பெய்யவில்லை. ஒருசில இடங்களில் மட்டும் மிதமான மழை பெய்து வந்தது.

சென்னையில்..
சென்னையை பொறுத்தவரையில் கடந்த இரு தினங்களாக பெரிதாக மழை எதுவும் பெய்யவில்லை. அவ்வப்போது மேகமூட்டமாக காணப்பட்டது. குறிப்பாக நேற்று சென்னையில் மழை பெய்ததற்கான சுவடே இல்லாத வகையில் வெப்பம் சற்று அதிகரித்து இருப்பதாக மக்கள் பேசிக்கொள்வதையும் பார்க்க முடிந்தது. அதேபோல் கடந்த சில நாட்களாக அதிகாலையில் பனியின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில் நேற்று மற்றும் இன்று சற்று குறைந்து காணப்பட்டதை பார்க்க முடிந்தது.

வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்
இதற்கிடையே நேற்று சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், "கேரள கடலோர பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக வரும் 29 ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்" என்றும் தெரிவித்தது.

அடுத்த 3 மணி நேரத்துக்கு
மேலும் ஒருசில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், அதிகபட்ச வெப்பநிலை 30-31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24-25 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. இந்த நிலையில், அடுத்த 3 மணி நேரத்துக்கு தமிழகம், காரைக்கால் மற்றும் பாண்டிச்சேரியில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

15 மாவட்டங்களில் மழை..
இதில் தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், மயிலாடுதுறை, கடலூர், தஞ்சை, திருவாரூர், நாகை, விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, கன்னியாகுமரி, திருநெல்வேலி உள்ளிட்ட 15 மாவட்டங்களில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மழை அளவு
முன்னதாக நேற்று சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக தண்டரம்பேட்டை (திருவண்ணாமலை) 5,செங்கம் (திருவண்ணாமலை) 3, மகாபலிபுரம் (செங்கல்பட்டு), திருவாலங்காடு (திருவள்ளூர்) தலா 2, மூங்கில்துறை (கள்ளக்குறிச்சி), நாட்றம்பள்ளி (திருப்பத்தூர்), ராயக்கோட்டா (கிருஷ்ணகிரி), சூளகிரி (கிருஷ்ணகிரி), திருவண்ணாமலை (திருவண்ணாமலை), மாரண்டஹள்ளி (தருமபுரி), அரக்கோணம் (இராணிப்பேட்டை), அழகரை எஸ்டேட் (நீலகிரி), ஓசூர் (கிருஷ்ணகிரி) தலா 1 (செ.மீ) மழை பெய்துள்ளதாக தெரிவித்து இருந்தது.
-
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன












Click it and Unblock the Notifications