சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தமிழகத்திற்கு இன்னும் 2 நாட்களில் மீண்டும் மழை.. வானிலை ஆய்வு மையம் அலர்ட்

Google Oneindia Tamil News

Recommended Video

    இன்னும் 2 நாட்களில் தமிழகத்தில் மீண்டும் மழை - வானிலை மையம்

    சென்னை: டிசம்பர் 4 மற்றும் 5ம் தேதிகளில் தென்கடலோர ஆந்திரா, தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    அந்தமான் அருகே வலு குறைந்து காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுகிறது. இதனால், வருகிற 4, 5ம் தேதிகளில் தென்கடலோர ஆந்திரா, தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    Chances to rain on December 4,5th says Chennai meteorological Center

    முன்னதாக, டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டது. அதேபோல் திருச்சி, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் பரவலாக மழை கொட்டியது.

    கஜா புயல் பாதிப்பில் இருந்து, மெல்ல, மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பி வரும் சூழலில், மழை பெய்ய தொடங்கி உள்ளது. இது மக்களை பெரிய அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது.

    இதை தொடர்ந்து டிசம்பர் 4,5ம் தேதிகளில் தென்கடலோர ஆந்திரா, தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி உள்ளது, சென்னை, கடலூர் ஆகிய கடலோர மாவட்டங்களிலும், திருவாரூர், தஞ்சை ஆகிய டெல்டா மாவட்டங்களிலும் இதனால் மழை பெய்யும். .

    English summary
    Coastal districts of Tamil Nadu are likely to have heavy rainfall, Chennai Meteorological Center alert
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X