சந்திரபாபு நாயுடு புது கட்சியை பொசுக்னு சொல்லிட்டாரே.. மகளிர் பில் தோல்வி: ஏப். 17 கருப்பு நாள் ஏன்
சென்னை: மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை நாடாளுமன்றத்தில் தோற்கடித்தது பெண்களுக்கு இழைக்கப்பட்ட மாபெரும் அநீதி என்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கோவையில் ஆக்ரோஷமாக தெரிவித்துள்ளார்.. கோவையில் அதிமுக - பா.ஜ.க உள்ளிட்ட தேசிய ஜனநாயக கூட்டணி நிர்வாகிகளுடன் நடந்த ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்த விவகாரத்தில் திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் செயல்பாடுகளை கடுமையாக விமர்சித்தார்
கோவையில் அதிமுக பாஜக தேசிய கூட்டணி நிர்வாகிகளுடன் நடந்த ஆலோசனை கூட்டத்துக்கு பின் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, செய்தியாளர்களிடம் பேசினார்.

மகளிர் மசோதா தோல்வி - கருப்பு நாள்
அப்போது, ஏப்ரல் 17-ஆம் தேதியை இந்திய ஜனநாயகத்தின் "கருப்பு நாள்" என்று குறிப்பிட்டு, பெண்களின் 30 ஆண்டுகால கனவை எதிர்க்கட்சிகள் சிதைத்துவிட்டதாகக் குற்றம் சாட்டினார்..
மசோதா விவகாரத்தில் திமுக இரட்டை வேடம் போடுவதாக சாடிய நாயுடு, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இந்த மசோதாவின் நகலை எரித்துப் போராட்டம் நடத்தியதை சுட்டிக்காட்டினார்.. மகளிர் உரிமைகளைப் பேசுவதாகக் கூறும் திமுக, நடைமுறையில் அவர்களுக்கு அதிகாரம் கிடைப்பதைத் தடுத்துவிட்டதாகவும், பெண்களை வெறும் வாக்கு வங்கியாக மட்டுமே பார்ப்பதாகவும் கூறினார்..
திமுக எம்பி பி.வில்சன் கொண்டு வந்த தனிநபர் மசோதா, மத்திய அரசின் மசோதாவைக் குலைப்பதற்கான தந்திரம் என்றும், இதன் மூலம் பெண்களுக்கு இடஒதுக்கீடு கிடைப்பதைத் திமுக தாமதப்படுத்துவதாகவும் சந்திரபாபு நாயடு குற்றம் சாட்டினார்..
திமுக குறித்து சந்திரபாபு நாயுடு
அதுமட்டுமல்ல, திமுக உள்ளிட்ட தமிழகத்தின் நிலை குறித்தும் பேசினார்.."1971ம் ஆண்டு கணக்கீட்டின்படி தற்போது தொகுதிகள் பிரிக்கப்பட்டுள்ள நிலையில், 2027-ஆம் ஆண்டு மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்யப்பட்டால் தென் மாநிலங்களுக்குப் பெருமளவில் இழப்பு ஏற்படும், இதற்கு திமுக தயாராக உள்ளதா? டெல்லியைத் தோற்கடித்துவிட்டதாகத் தம்பட்டம் அடிக்கும் திமுக, உண்மையில் தென் மாநிலங்களின் பங்கையும் பெண்களின் உரிமையையும் தான் தோற்கடித்துள்ளது.
தொகுதி எண்ணிக்கையை உயர்த்தாமல் இடஒதுக்கீடு வழங்கினால் நடைமுறைச் சிக்கல்கள் வரும் என்பதால் தான் தொகுதி மறுவரையறை அவசியம்.
தமிழகத்தில் முன்னேற்றம் இல்லை
கடந்த 5 ஆண்டுகளில் தமிழகத்தில் எவ்வித முன்னேற்றமும் இல்லை என்றும் சென்னை தனது பொலிவை இழந்துவிட்டது. பல்வேறு ஊழல்கள் நடந்துள்ளன.. வருமானத்தை ஈட்டாமல் வெறும் இலவசங்களை மட்டும் கொடுத்தால் ஒரு அரசு நிலைக்க முடியாது.
ஆந்திராவில் கோதாவரி மற்றும் கிருஷ்ணா ஆறுகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன, தெலுங்கு கால்வாய் வழியாகத் தமிழகத்திற்குத் தண்ணீர் தந்து கொண்டிருக்கிறது. எதிர்காலத்தில் ஆறுகளை இணைப்பதன் மூலம் காவிரிக்கும் தண்ணீர் தரப்படும் என்றும் காங்கையத்தோடு ஆறுகளை இணைப்பது சாத்தியம்.
புது கட்சி குறித்து கருத்து
தமிழகத்தில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும் திமுக தலைமையிலான இண்டி கூட்டணி என இரண்டு கூட்டணிகள் தான் பிரதானம் வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தால் ஊழல்கள் வெளிச்சத்திற்கு வரும்போது மக்களிடம் பெரிய மாற்றம் வரும். மகளிர் சக்தியை அவமதித்த கட்சிகளுக்கு வரும் தேர்தலில் பெண்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள்" என்றெல்லாம் தெரிவித்துள்ளார்.
ஆனால் புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள கட்சிகள் குறித்துக் கருத்துத் தெரிவிக்க மறுத்த சந்திரபாபு நாயுடு, தேர்தலில் போட்டியிட்ட பிறகு தான் அவற்றின் பலம் தெரியும் என்றும் கடைசியாக சொல்லிவிட்டு போனார்.












Click it and Unblock the Notifications