உள்துறை, பாதுகாப்பு துறை கண்டிப்பாக வேண்டும்.. உறுதியாக நிற்கும் நாயுடு.. மோடிக்கு எகிறும் பிரஷர்!
சென்னை: சந்திராபாபு நாயுடு மற்றும் நிதிஷ் குமார் ஆகியோர் நேற்று பிரதமர் மோடிக்கு ஆட்சி அமைப்பதற்கான ஆதரவை அளித்தனர். இந்த நிலையில் பிரதமர் மோடி ஆட்சி அமைக்க உரிமை கோர உள்ளார்.
2024 லோக்சபா தேர்தலில் பாஜகவிற்கு மெஜாரிட்டி கிடைக்கவில்லை. 240 இடங்களில் பாஜக வென்றுள்ளது. பாஜக ஆட்சி அமைக்க என்டிஏவில் உள்ள தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதா தளம், ஆதரவு தேவை. இது போல லோக் ஜனதா கட்சி, ஷிண்டேவின் சிவசேனா கட்சி ஆகியோரின் ஆதரவும் தேவை.

இவர்களின் ஆதரவு எல்லாம் இருந்தால்தான் பாஜக ஆட்சி அமைக்க முடியும். இனிமேல் இவர்கள் சொல்வதுதான் சட்டம் என்ற நிலைமை பாஜகவிற்கு ஏற்பட்டு உள்ளது.
பாஜக மெஜாரிட்டி இல்லை: 2024 லோக்சபா தேர்தலில் கிட்டத்தட்ட 292 தொகுதிகளில் என்டிஏ கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. பாஜக தனியாக 240 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சி 97 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இந்தியா கூட்டணி 229 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. பல இடங்களில் இன்னும் முழுமையான முடிவுகள் அறிவிக்கப்படவில்லை.
சந்திரபாபு நாயுடு - நிதிஷ் கிங்: இந்த லோக்சபா தேர்தலில் பாஜகவிற்கு தனி மெஜாரிட்டி கிடைக்கவில்லை. இதனால் சந்திரபாபு நாயுடு - நிதிஷ் குமார் ஆகியோரின் ஆதரவுடன் மட்டுமே பாஜக ஆட்சி அமைக்க முடியும்.
பாஜக ஆட்சி அமைக்க பீகாரில் உள்ள நிதிஷ் குமார் ஐக்கிய ஜனதா தளம் ஆதரவு தர வேண்டும். அவர்களிடம் 12 எம்பிக்கள் உள்ளனர். பாஜக ஆட்சி அமைக்க ஆந்திர பிரதேசத்தில் உள்ள சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் ஆதரவு தர வேண்டும். அவர்களிடம் 16 எம்பிக்கள் உள்ளனர். இவர்களின் ஆதரவு இன்றி பாஜக ஆட்சி அமைக்க முடியா
ஆட்சி அமைக்க ஆதரவு: சந்திராபாபு நாயுடு மற்றும் நிதிஷ் குமார் ஆகியோர் நேற்று பிரதமர் மோடிக்கு ஆட்சி அமைப்பதற்கான ஆதரவை அளித்தனர். இந்த நிலையில் பிரதமர் மோடி ஆட்சி அமைக்க உரிமை கோர உள்ளார்.
கூட்டணி ஆட்சியில் பொதுவாக முக்கிய அமைச்சரவையை கேட்டு பெறக்கூடியதில் வல்லவரான சந்திரபாபு நாயுடு, தனது மாநிலமான ஆந்திராவுக்கு "சிறப்பு வகை அந்தஸ்து" வழங்க வேண்டும். தனது கட்சிக்கு லோக்சபா சபாநாயகர் பதவியை வழங்க வேண்டும் என்று கேட்டு இருக்கிறார்.
அதோடு அமித் ஷா மற்றும் ராஜ்நாத் சிங் ஆகியோரிடம் உள்ள உள்துறை மற்றும் பாதுகாப்பு துறைகளையும் நாயுடு கோரியதாக தகவல் வெளியாகி உள்ளது. அதேபோல் நிதிஷ் குமார் பீகாருக்கு சிறப்பு அந்தஸ்து வேண்டும். உள்துறை நாயுடு கட்சிக்கு போனால்.. நாட்டின் பாதுகாப்பு அவர்களின் கட்டுப்பாட்டிற்கு செல்லும்.
நிதித்துறை தங்களுக்கு வேண்டும். ரயில்வே துறையும் தங்களுக்கு வேண்டும் என்று கேட்டு இருக்கிறாராம். மேலும் பாஜகவின் கொள்கைக்கு எதிராக, தேசிய அளவில் ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று கேட்டு உள்ளாராம்.
சிராக் பாஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சி ரயில்வே துறையை கேட்டு உள்ளது. மதசார்பற்ற ஜனதா தளம் வேளாண் துறையை கேட்டு உள்ளதாம். ராஜ்நாத், அமித் ஷா ஷா மற்றும் கட்சித் தலைவர் ஜே.பி. நட்டா ஆகியோரை கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தவும், அரசாங்கத்தின் வரையறைகளை உருவாக்கவும் பாஜக தலைமை நியமித்துள்ளது.
-
பாஜக கூட்டணிக்கு ‘குட்பை'.. வெளியேறிய தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி - ஜிகே வாசன் அறிவிப்பு -
பூட்டி கிடக்கும் பனையூர் கட்சி ஆபீஸ்! தவெகவில் இணைய காத்துக் கிடக்கும் விஜயதாரணி டூ பாலகங்கா வரை! -
பாஜகவை விட்டு விலகுகிறேன்.. 39 ஆண்டு பயணத்திற்கு முற்றுப்புள்ளி.. காரணம் இதுதான்! நடிகர் பாண்டி ரவி ஆதங்கம் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
காங்கிரசுக்கு நீங்க ஏன் உயிர் கொடுக்குறீங்க விஜய்? கடுப்பான பாஜக.. கோபத்தின் உச்சிக்கே போன அமித் ஷா -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
வேலைக்காகாத பாஜக மாடல்.. “கழக” பாணியைக் கையிலெடுக்கும் அண்ணாமலை! வேற லெவலாகும் வீ தி லீடர்! -
கைவிட்ட பாஜக.. மம்தாவையும் பகைத்து கொண்ட திரிணாமுல் தலைவர்கள்.. இடியாப்ப சிக்கல்! -
புதுப்பொலிவு பெறும் புதுச்சேரி.. அள்ளி கொடுத்த மத்திய அரசு! எல்.முருகன் சொன்ன குட் நியூஸ்! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன?












Click it and Unblock the Notifications