என் பிள்ளைங்க முன்னாடியா இழுத்துட்டு போறீங்க.. தண்டனை கிடைக்கும்.. போலீசாரிடம் சந்திரமோகன் ஆவேசம்!
சென்னை: சென்னை பட்டினப்பாக்கத்தில் இரவு நேரத்தில் மதுபோதையில் போலீசாரை ஆபாசமாக பேசிய சந்திரமோகன் இன்று கைது செய்யப்பட்ட நிலையில், தன் பிள்ளைகள் கண் முன்னேயே கைது செய்துவிட்டீர்கள்.. வெளியே வந்ததும் தான் ஏதாவது செய்து கொண்டால் அதற்கு முழு பொறுப்பு போலீஸ் தான் என அவர் ஆவேசமாக போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
சென்னை மெரினா கடற்கரை பட்டினப்பாக்கம் அருகே லூப் சாலையில் மயிலாப்பூர் போலீசார் நேற்று இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சாலையில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு காரை எடுக்கும்படி காருக்குள் இருந்தவர்களிடம் போலீசார் தெரிவித்தனர்.

இதனால் ஆத்திரமடைந்த ஒரு ஆணும், பெண்ணும் காரில் இருந்து இறங்கி போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதோடு போலீசாரை ஒருமையில் ஆபாசமாக பேசிய காரின் உரிமையாளர், தாம் மது அருந்தியுள்ளதாகவும், காரை எடுக்க முடியாது என்றும், தமக்கு உதயநிதி ஸ்டாலினை தெரியும் எனவும், உங்கள் வேலையை காலி பண்ணிவிடுவேன் என்றும் மிரட்டல் விடுத்தார்.
இந்தச் சம்பவம் குறித்த வீடியோ இணையத்தில் பரவிய நிலையில் பலரும், போலீசாரை அநாகரீகமாக பேசிய இந்த ஜோடியை கைது செய்யவேண்டும் என வலியுறுத்தினர். இந்நிலையில் காவலர் சிலம்பரசன் கொடுத்த புகாரின் பேரில், போலீசார் தனிப்படை அமைத்து இருவரையும் தேடி வந்தனர்.
துரைப்பாக்கம் பகுதியில் உள்ள ஒரு விடுதியில் வைத்து, அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை பட்டினப்பாக்கத்தில் மதுபோதையில் போலீசாரை ஆபாசமாக பேசியவர்கள் சந்திரமோகன் மற்றும் அவரது தோழி தனலட்சுமி எனத் தெரியவந்துள்ளது.
உதயநிதிய வரச் சொல்லட்டுமா? காதே கூசும் அளவுக்கு “பீப்" வார்த்தைகளால் அர்ச்சனை! லாட்ஜில் சிக்கிய ஜோடி
அவர்கள் இருவரையும் மயிலாப்பூர் போலீசார் துணை காவல் ஆணையர் அலுவலகத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். சந்திரமோகன் மீது 4 பிரிவுகள் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சந்திரமோகன், தனலட்சுமி ஆகிய இருவரும் இருக்கும் இடம் அறிந்து, அங்கு சென்ற போலீசார் அவர்களை கைது செய்ய முயன்றபோது, சந்திரமோகன் ஆவேசமாக போலீசாரிடம் வாக்குவாதம் செய்துள்ளார்.
என் பிள்ளைகள் முன்பு என்னை அடித்து கைது செய்து அழைத்து வந்துவிட்டீர்களே.. இதற்கான தண்டனையை நிச்சயம் பெறுவீர்கள். வெளியே வந்ததும் தான் ஏதாவது செய்து கொண்டால் அதற்கு முழு பொறுப்பு போலீஸ் தான் என அவர் ஆவேசமாக போலீசாரை மிரட்டியுள்ளார்.












Click it and Unblock the Notifications