செம்மணி புதைகுழி கொடூரம்.. என்ன நடந்தது என தெரிஞ்சாகணும்.. இலங்கை வழக்கறிஞர் ஆவேசம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: செம்மணி பகுதியில் நடந்த அகழாய்வில் குவியல் குவியலாக மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது போர்குற்றத்திற்கான ஆதாரமா? இதுவரை வெளிவந்த தகவல்களும், சட்ட ரீதியாக எதாவது நடவடிக்கைகள் எடுக்க முடியுமா? என்பது குறித்து வழக்கறிஞரும், சமூக ஆர்வலருமான பெனிஸ்லோஸ் துஷன் பேட்டி அளித்துள்ளார்.

இலங்கையின் செம்மணி - சித்துபாத்தி பகுதியில் மனிதப் புதைகுழி அடையாளம் காணப்பட்டு அகழாய்வுப் பணிகள் நடந்து வருகின்றன. இந்த மனித புதைகுழியிலிருந்து சிறுவர்கள் உள்ளிட்ட 82 பேரின் மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அகழாய்வில் புத்தகப் பையுடன் அடையாளம் காணப்பட்ட குழந்தை ஒன்றின் எலும்புக்கூடும் தோண்டி எடுக்கப்பட்டுள்ளது நெஞ்சை உருக்குவதாக அமைந்துள்ளது.

chemmani-mass-grave-we-want-to-know-what-happened-to-children-says-sri-lankan-lawyer

இந்த எலும்புக்கூடு தோண்டி எடுக்கப்பட்ட இடத்தில் இருந்து சிறிய காலணி மற்றும் குழந்தைகள் விளையாடும் பொம்மை கண்டெடுக்கப்பட்டு இருப்பது அதிர வைத்து இருக்கிறது. செம்மணி மனிதப் புதைகுழியில் இருந்து சிறுவர்கள் உள்ளிட்ட பலரின் எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டு வருவது அனைவரையும் அதிர வைத்துள்ளது. இது தொடர்பாக பலரும் குரல் கொடுத்து வருகின்றனர். இலங்கை அரசு இதற்கு பதில் சொல்ல வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

செம்மணி பகுதியில் நடந்த மனித எச்சங்கள் அகழாய்வு தற்போது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், இது போர்குற்றத்திற்கான ஆதாரமா? இதுவரை வெளிவந்த தகவல்களை வைத்து, சட்ட ரீதியாக எதாவது நடவடிக்கைகள் எடுக்க முடியுமா என்பதை பற்றி வழக்கறிஞரும், சமூக ஆர்வலருமான பென்சிலோஸ் துஷன் கூறியதாவது:- (இவரது முழு பேட்டியை இங்கே கிழே உள்ள வீடியோவில் விரிவாக பார்க்கலாம்)

இலங்கை வரலாற்றில் செம்மணி மட்டும் மனித புதைகுழி அல்ல.. புதைகுழி என்றால் மனிதர்களை கொத்துக்கொத்தாக புதைத்து வைத்து இருப்பார்கள். கிட்டத்தட்ட 20 புதைகுழிகள் இதுவரை இலங்கையில் அடையாளம் காணப்பட்டுள்ளது. எங்கள் பிள்ளைகள் காணாமல் ஆக்கப்பட்டு இருக்கிறார்கள்.. அவர்களுக்கு என்ன நடந்தது? என்று உண்மை தெரிய வேண்டும் என ஆவேசமாக கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+