செங்கல்பட்டில் ஓடி வந்த தாசில்தார்.. பெருங்களத்தூர் ரோட்டில் தயாரான கமகம சமையல்.. நில அளவீடு எப்போது?
சென்னை: கடந்த மே 2021-லிருந்து, இப்போது வரைக்கும் லட்சக்கணக்கானோருக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது.. கிட்டத்தட்ட 17 லட்சத்து 74 ஆயிரத்து 561 பேருக்கு பட்டா வழங்கி, இதன்மூலம் பல லட்சம் குடும்பங்களின் கனவை நிறைவேற்றியிருக்கிறோம் என்று 4 நாட்களுக்கு முன்பு செங்கல்பட்டு மாவட்டத்தில் தமிழக முதல்வர் பெருமிதம் தெரிவித்திருந்தார். இந்நிலையில், இதே செங்கல்பட்டு மாவட்டத்தில் மீண்டும் ஒரு சிக்கல் கிளம்பியிருக்கிறது. என்ன நடந்தது?
செங்கல்பட்டு மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் பல வருடங்களாக ஆட்சேபனையற்ற அரசு புறம்போக்கு நிலங்களில் வசித்து வந்த மக்கள் தங்களுக்கு அங்கீகாரம் வழங்கும் வகையில், ஆட்சேபனையற்ற அரசு புறம்போக்கு நிலங்களில் வசித்து வரும் தகுதியான பயனாளிகளுக்கு அரசு சார்பில் இலவச வீட்டு மனை பட்டாக்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

செங்கல்பட்டு - புறம்போக்கு நிலம்
இதன்ஒரு பகுதியாக செங்கல்பட்டு மாவட்ட பகுதியில் ஆட்சேபனையற்ற அரசு புறம்போக்கு நிலங்களில் வசித்து வந்த மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டாக்கள் வழங்கும் விழா கடந்த 9ம் தேதி பல்லாவரத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டு, ரூ.17,000 கோடி மதிப்பிலான 20 ஆயிரத்து 21 பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டாக்களை வழங்கினார்.
பட்டா வழங்கிய முதல்வர்
பின்னர் முதல்வர் பேசும்போது, "தமிழ்நாடு முழுவதும் வருவாய்த் துறை மூலமாக பட்டா வழங்கிக் கொண்டிருக்கிறோம். சொந்த வீடு இல்லாத நிலமற்ற ஏழைக் குடும்பங்களையும், பெண்களையும் முன்னிலைப்படுத்தி இலவச வீட்டுமனைப் பட்டா வழங்குவதை நம்முடைய அரசு கொள்கையாக வைத்திருக்கிறது.
5 மாதத்திற்குள் 5 லட்சம் பேருக்கு வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும் என்று ஒரு இலக்கு நிர்ணயித்தோம். இதனால், 5 மாதத்தில் 7 லட்சத்து 27 ஆயிரத்து 606 பேருக்கு பட்டா கிடைத்திருக்கிறது. சென்னை மற்றும் சுற்றுப்புறங்களிலும், பிற நகர்ப்புற பகுதிகளிலும் ஆட்சேபணையற்ற புறம்போக்கு நிலங்களில் வாழும் 63 ஆயிரத்து 419 பேருக்கும் பட்டா வழங்க ஒப்புதல் அளித்து, 20 ஆயிரத்து 221 பேருக்கு பட்டா வழங்கியிருக்கிறோம்.
இலவச வீட்டு மனை பட்டா
இதுவரை 17 லட்சத்து 74 ஆயிரத்து 561 பேருக்கு பட்டா வழங்கியிருக்கிறோம். இந்த செங்கல்பட்டு மாவட்டத்தில் மட்டும், 41 ஆயிரத்து 858 பேருக்கு பட்டா வழங்கியிருக்கிறோம். இந்த விழாவில், ஆயிரத்து 672 கோடியே 52 லட்சம் ரூபாய் மதிப்பிலான வீட்டுமனைப் பட்டாக்களை 20 ஆயிரத்து 21 பயனாளிகளுக்கு நான் வழங்கியிருக்கிறேன்" என்றெல்லாம் பேசியிருந்தார்.
இந்த நிகழ்வில்தான், செங்கல்பட்டு மாவட்டம், பெருங்களத்தூர் பகுதியை சேர்ந்த 32 திருநங்கைகளுக்கு காட்டாங்கொளத்தூர் ஒன்றியம் ஓழலூர் கிராமத்தில் வீட்டுமனை ஒதுக்கீடு செய்யப்பட்டு, இவர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டாவை, முதல்வர் வழங்கியிருந்தார்.
ஆனால், முதல்வர் நிகழ்ச்சியில் வழங்கப்பட்ட பட்டாவில் குழப்பம் இருப்பதாகவும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தை நில அளவை செய்துதரவில்லை என்று திடீர் புகார் கிளம்ப துவங்கியது..
தாசில்தார் உறுதி
எனவே கடந்த 9ம் தேதியே, கலெக்டர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் செய்ததோடு, கலெக்டர் அலுவலகம் எதிரே செங்கல்பட்டு-மதுராந்தகம் சாலையில் அமர்ந்து சாலைமறியலிலும் ஈடுபட்டனர். இதனால் விரைந்து வந்த வட்டாட்சியர் ஆறுமுகம், 13ம் தேதி அதாவது கடந்த புதன்கிழமையன்று, ஒதுக்கிய இடத்தை நில அளவை செய்து தருவதாக உறுதி தந்தார்.. இதனால் மறியலை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.
ஆனால், உறுதி தந்தபடி, கடந்த புதன்கிழமை நில அளவை நடவடிக்கையை வட்டாட்சியர் செய்யவில்லையாம்.. எனவே, செங்கல்பட்டு வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் 30க்கும் மேற்பட்ட திருநங்கைகள் மீண்டும் 2வது முறையாக போராட்டத்தை நேற்று நடத்தினர்..
மீண்டும் ஓடோடி வந்த வட்டாட்சியர்
அதாவது, பாத்திர பண்டங்களை கொண்டு வந்து சாலையில் குவித்து சமையல் செய்ய துவங்கிவிட்டனர்.. தங்களுக்கு ஒரு முடிவு தெரியவில்லையானால், இங்கேயே சமைத்து சாப்பிட்டு இங்கேயே தங்கப்போவதாக சமையல் செய்து அங்கேயே உட்கார்ந்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த விஷயம் கேள்விப்பட்டதுமே மறுபடியும் வட்டாட்சியர் ஆறுமுகம் ஓடிவந்தார்.. வருகிற புதன்கிழமை 20ம்தேதி நில அளவை கட்டாயம் செய்து தருவதாக உறுதி அளித்தார்.. இதையடுத்து, அனைவரும் சமைத்த சாப்பாட்டை சாப்பிட்டு விட்டு, அதற்கு பிறகு அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications