Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கட்டிட அனுமதி எங்கே.. சென்னையில் 25 ஆண்டுக்கு முன்பு கட்டிய 2 வீடுகளுக்கு சீல்.. மக்கள் எதிர்ப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை திருவொற்றியூரில் ஒத்தவாடை தெருவில் 25 ஆண்டுகளுக்கு முன்பு கட்டிய 2 வீடுகளுக்கு கட்டிட அனுமதி பெறவில்லை என்று மாநகராட்சி அதிகாரிகள் அதிரடியாக 'சீல்' வைத்துள்ளனர். 50 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட வீடுகளுக்கு இப்போது அனுமதி எங்கே? என கேட்டு பல வீடுகளுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளதாக குற்றச்சாட்டுகள் உள்ளது. அதற்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

சென்னை அருகே ஒரு காலத்தில் திருவொற்றியூர் ஊராட்சியாக இருந்தது.. அதன்பிறகு நகராட்சியமாகமாறியது. அடுத்ததாகவே சென்னை மாநகராட்சிக்குள் மாறியது. இங்கு அந்த காலக்கட்டத்தில் கட்டிய வீடுகள் அனுமதியின்றி கட்டப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. இப்போது அதற்கு அனுமதி எங்கே என்றுகேட்டு மாநகராட்சி அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்புவதாக புகார்கள் எழுந்துள்ளது.

Chennai 2 houses built 25 years ago in Thiruvotriyur sealed for not obtaining building permits

அந்த வகையில் திருவொற்றியூர் ஒத்தவாடை தெருவில் பஞ்சாட்சரம், ஜானகிராமன் ஆகியோரது வீடுகள் கட்டப்பட்டு 25 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டதாம். இதில் ஒரு வீடு 400 சதுர அடியிலும், மற்றொரு வீடு 600 சதுர அடியிலும் கட்டப்பட்டிருக்கிறது. இந்த வீடுகள் மாநகராட்சி அனுமதி இன்றி கட்டப்பட்டு இருப்பதாக புகாரை சிலர் அனுப்பி உள்ளார்கள்.

இதையடுத்து சென்னை மாநகராட்சி செயற்பொறியாளர் பாபு தலைமையில் இளநிலை பொறியாளர் மஞ்சுளா மற்றும் அதிகாரிகள், போலீசார் உதவியுடன் அங்கு வந்தனர். அவர்கள் மாநகராட்சி அனுமதி பெறவில்லை என்று கூறி 2 வீடுகளையும் பூட்டி 'சீல்' வைத்தனர். மாநகராட்சி அதிகாரிகளின் இந்த நடவடிக்கைக்கு அந்த பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

சென்னையை பொறுத்தவரை மாநகராட்சி பகுதியில் புதிதாக வீடுகள் கட்ட மாநகராட்சி அனுமதி பெறவேண்டும் என்பது அரசு விதியாக உள்ளதால் சீல் வைக்கப்பட்டதாக கூறப்டுகிறது.. ஆனால் விரிவாக்கம் செய்யப்பட்ட திருவொற்றியூர் போன்ற பகுதிகளில் ஊராட்சியாக இருந்து நகராட்சியாக மாறி, தற்போது மாநகராட்சியில் இணைந்து உள்ளது. அப்படி இருக்கையில் எப்படி சீல் வைக்க முடியும் என்று பொதுமக்கள் கேள்வி எழுப்புகிறார்கள். அதுவும் 25 வருடம் முன்புகட்டப்பட்ட வீடுகளுக்குகூட தற்போது அனுமதி பெறவேண்டும் என மாநகராட்சி அதிகாரிகள் கேட்பதாகவும் குற்றம்சாட்டுகிறார்கள்.

சம்பந்தப்பட்ட வீட்டின் உரிமையாளர் மீது காழ்ப்புணர்ச்சி காரணமாக யாராவது புகார் அனுப்பி உள்ளதாக குற்றம்சாட்டும் அக்கம் பக்கத்தினர். அந்த வீடுகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் உரிய அனுமதி இல்லை என்று கூறி 'சீல்' வைப்பது சரியல்லை என்றும் கூறினார்கள்.

இது குறித்து சென்னை மாநகராட்சி 7-வது வார்டு அ.தி.மு.க. கவுன்சிலர் டாக்டர் கே.கார்த்திக் கூறுகையில், சென்னை மாநகராட்சி சட்ட விதிகளின்படி வீடுகள் கட்டப்படவேண்டியது தான். ஆனால் 50 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட வீடுகளுக்கு இப்போது அனுமதி எங்கே? என கேட்கிறார்கள். இந்த காரணத்திற்காக பல வீடுகளுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளனர். திருவொற்றியூரில் இதுபோன்று 52 வீடுகளுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளார்கள். இவர்கள் வீடுகள் கட்டி 25 ஆண்டுகளுக்கு மேலாகிறது. ஒரு சில வீடுகள் 40 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது.

அதிகாரிகள் மனிதாபிமானம் பார்க்க வேண்டும். விதிகளை மீறி கட்டப்பட்ட கட்டிடங்கள் ஏராளமாக உள்ளது. ஆனால் அங்கெல்லாம் நடவடிக்கை எடுக்கவில்லை. ஏழை எளியோர் பாதிக்கும் அளவில் மாநகராட்சி நடவடிக்கை எடுக்கிறது" என்று குற்றம்சாட்டினார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+