‛‛மக்களே உஷார்’’.. சென்னை மழையில் செல்போன் பேசிய இளைஞர் திடீர் பலி.. கருகிய மொபைல்! ஷாக் காரணம்
சென்னை: சென்னையில் பெய்த கனமழையின்போது செல்போன் பேசியபடி வெள்ளத்தில் நடந்து சென்ற 23 வயது இளைஞர் திடீரென்று இறந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில் அதன் பின்னணியில் உள்ள ஷாக் தகவல் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ்நாட்டில் தற்போது வடகிழக்கு பருவமழை காலம் தொடங்கி உள்ளது. கடந்த சில நாட்களாக மழை இல்லாத நிலையில் 2 நாட்களாக மாநிலத்தின் பல பகுதிகளில் மீண்டும் மழை பெய்ய தொடங்கி உள்ளது. இதற்கு தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் உருவாகிய காற்றழுத்த தாழ்வு பகுதி தான் காரணமாகும்.

இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று அடுத்த 48 மணி நேரத்தில் வடமேற்கு திசையில் நகர்ந்து தென்மேற்கு மற்றும் அதனை வட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் புயலாக வலுப்பெற கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.
இதனால் தமிழ்நாட்டின் பல மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே தான் சென்னையின் பல இடங்களில் நேற்று முதல் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. நேற்று காலை முதல் பல இடங்களில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இதனால் பல சாலைகளில் மழைநீர் தேங்கி உள்ளது. தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளை மழைநீர் சூழ்ந்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இரவில் பெய்த பேய்மழை.. வீடுகளை சூழ்ந்த வெள்ளம்.. செங்குன்றத்தில் தவித்த மக்கள் படகு மூலம் மீட்பு
சென்னையில் தேங்கியுள்ள மழைநீரை வெளியேற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். முதல்வர் ஸ்டாலின் கட்டுப்பாட்டு அறைக்கு சென்று மழை தொடர்பான புகார்கள் குறித்தும், அதன் மீதான நடவடிக்கைகள் குறித்தும் கேட்டறிந்தார். இந்நிலையில் தான் சென்னையில் பெய்த கனமழையின்போது செல்போனில் பேசியபடி நடந்து சென்ற 23 வயது இளைஞர் திடீரென்று இறந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அதாவது சென்னை பீர்க்கன்கரணை புதுபெருங்களத்தூரில் உள்ள திருவள்ளுவர் தெருவை சேர்ந்தவர் மணிகண்டன். இவருக்கு வயது 23. இவர் மேற்கு மாம்பலத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் விஷுவல் எடிட்டராக பணியாற்றி வந்தார். நேற்று மாலையில் வேலை முடிந்து வந்தபோது சென்னையில் கனமழை பெய்தது. இதையடுத்து அவர் குடை பிடித்தபடி ஏரிக்கரை சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.
மழை பெய்ததால் அந்த சாலையில் நீர் தேங்கியிருந்தது. கால்முட்டு அளவுக்கு தேங்கிய மழைநீரில் அவர் குடைபிடித்தபடி செல்போனில் பேசிக்கொண்டு சென்றார். அப்போது திடீரென்று அவர் துடித்துடித்து கீழே விழுந்து இறந்துள்ளார். இதுபற்றி தகவல் அறிந்தவுடன் அங்கு போலீசார் சென்று அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் தண்ணீரில் கிடந்த அவரது செல்போனை போலீசார் கைப்பற்றினர். அந்த செல்போன் கருகிப்போய் இருந்தது. இதனால் அவரது இறப்புக்கு செல்போன் தான் காரணமாக இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். அதாவது மழை நேரத்தில் செல்போன் பேசிய நிலையில் மின்னல் தாக்கியதில் செல்போனில் ஏற்பட்ட மின்கசிவால் அவர் இறந்திருக்கலாம் இல்லாவிட்டால் செல்போனில் இருந்த அதிகப்படியான சார்ஜ் காரணமாக திடீர் மின்கசிவு ஏற்பட்டு அவர் இறந்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இதுதொடர்பாக போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே தான் சென்னையில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் பொதுமக்கள் செல்போன் பேசும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். முடிந்தவரை கனமழை மற்றும் மின்னல் வேளையின்போது செல்போன் பயன்படுத்துவதை குறைக்க வேண்டும். சார்ஜ் செய்தபடி செல்போன் பேசுவதை முற்றிலுமாக கைவிட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக்












Click it and Unblock the Notifications