கொரோனா பேரிடரில் இருந்தும் விரைவில் சென்னை மீண்டு வரும் - முதல்வர், துணைமுதல்வர் வாழ்த்து
சென்னை தோற்றுவிக்கப்பட்ட தினத்தையொட்டி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். பேரிடர்கள் பல கடந்து வந்த சென்னை, கொரோனா பேரிடரில் இருந்தும் விரைவில் மீண்டு வரும் என்று கூறியுள்ளார
சென்னை: தமிழகத்தின் தலைநகரம் சென்னை தோற்றுவிக்கப்பட்ட தினம் இன்று கொண்டாடப்படுகிறது. சென்னை தினத்தை முன்னிட்டு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து கூறியுள்ளார். பேரிடர்கள் பல கடந்து வந்த சென்னை கொரோனா பேரிடரில் இருந்து விரைவில் மீண்டு வரும் என்று கூறியுள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.
Recommended Video
முதல்வர் பழனிச்சாமி வாழ்த்து

முதல்வர் பழனிச்சாமி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ள வாழ்த்து செய்தியில், வந்தோரை வாழ வைக்கும் தமிழகத்தின் தலைநகரான சென்னை தோற்றுவிக்கப்பட்ட தினம் இன்று!கனவுகளோடு நாடி வருபவர்களுக்கு முகவரி தேடித்தந்த சென்னையின் வயது 381.பேரிடர்கள் பல கடந்து வந்த சென்னை, கொரோனா பேரிடரில் இருந்தும் விரைவில் மீண்டு வரும் என்று பதிவிட்டுள்ளார்.
துணைமுதல்வர் வாழ்த்து

துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தனது ட்விட்டர் பக்கத்தில் சென்னை தினத்திற்கு வாழ்த்து கூறியுள்ளார்.ஆசியாவின் டெட்ராய்ட், மருத்துவ தலைநகர், தொன்மையான மாநகராட்சி என பற்பல பாரம்பரிய பெருமைகள் கொண்ட சென்னையின் 381வது பிறந்த தினம் இன்று! வந்தாரை வாழவைக்கும் நகரமும் பலதரப்பட்ட மக்களின் மானுட சமுத்திரமுமான சென்னை எத்தனை எத்தனை இடர்வரினும் மீண்டு எழும்! மறுமலர்ச்சி பெறும் என பதிவிட்டுள்ளார் ஓ.பன்னீர் செல்வம்.
-
சென்னையில் இரவு நேரங்களில் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுவது ஏன்? அதிகாரிகளுக்கு மட்டுமே தெரிந்த உண்மை -
கார் விற்பனையில் மாஸ் காட்டும் கொங்கு மண்டலம்.. கோவை, பொள்ளாச்சி, திருப்பூர்காரங்க வேற ரகம் பாஸ்..! -
சென்னை மக்கள் பொறுமை இழந்தனர்.. கட்டி முடிச்சு 4 மாசமாச்சு.. எப்ப தான் திறப்பீங்க! -
சென்னையில் முதல்வர் விஜய் தொகுதியான பெரம்பூரில் அடிக்கடி மின் வெட்டு.. பொங்கி எழுந்த மக்கள் -
டமால் டுமீல் தான்.. 4 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப் போகுது கனமழை! மார்க் செய்த வானிலை ஆய்வு மையம்! -
திமுக ஆட்சியில் போடப்பட்ட டெண்டர் ரத்து? ரூ.2,100 கோடி ECR திட்டத்திற்கு முட்டுக்கட்டை போட்ட விஜய் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம்












Click it and Unblock the Notifications